Skip to main content

Posts

Showing posts from December, 2025
Welcome to ShriVijay Writings🎉 - a world of suspense, love, romance, family bonds, thrilling crime, friendship, mystery, emotions, adventure, revenge and twists & turns. Dive in and enjoy every twist! 📖✨

ஸ்கார்பியோ காதல் - 23

அத்தியாயம் 23                 நேற்றைக்கு முந்தைய நாள்!  ஹரிஷ் அவன் வீட்டிலிருந்து அதிக தொலைவிலிருந்த ஜிம் ஒன்றின் வெளியே தனது மகிழ்வுந்தில் அமர்ந்திருந்தான். அருகே இருபத்தாறு வயதில் வாட்டசாட்டமான உடலமைப்புடன் காவல்துறையைச் சேர்ந்த ஒருவன்! இப்போதுதான் உடற்பயிற்சியை முடித்துவிட்டு வந்திருக்கிறான் என்று, முகம் கழுவியதில் காயாமல் ஆங்காங்கே ஒட்டியிருந்த நீர்த்துளிகளில் தெரிந்தது. ஜன்னலில் தன்‌ பரந்த முதுகைச் சாய்த்து முழங்கையை இருக்கைப் பகுதியில் பதித்திருந்தவன் சொன்னான். “இந்த ரோலர் பொட்டட்டோக்காகவே செஞ்சு வந்த பிரச்சினை மாதிரி இருக்குது.” அம்ருவை, ‘ரோலர் பொட்டட்டோ’ என்ற அடைமொழியுடன் பேசும் இவனை நாம் முன்பே பார்த்திருக்கிறோம். அவளிடம், ‘கல்யாணம் செஞ்சுக்கலாமா?’ என்று கேட்டு வம்பிழுக்கும் அவளின் அத்தை மகன் தேவா. அஸ்வத் பார்த்த இரு முறையும் இவன் அங்ஙனமே பேசி வைத்ததில் அது உண்மையென்று நினைத்து, இவனைத்தான் அம்ருதா திருமணம் செய்ய போகிறாள் என்று நம்பிக் கொண்டிருக்கிறான் அஸ்வத். அம்ருதா அண்ணனிடம் அஸ்வத்தைப் பற்றிய அனைத்து விடயங்களையும் தெரிவித்த பின்னர்...

Popular Posts 💫

ஸ்கார்பியோ காதல் 🚗 💌

  கதையின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன🎉 கதை முன்னோட்டம்   ஹிக்கின் பாதம்ஸை அலசி விட்டு, ஐபாகோவில் ஐக்கியமாகி, பின்னர் ஊருக்கு செல்லப் பெட்டியைக் கட்டினார்கள். மகிழுந்தில் ஸ்வேதாவை முன்னே ஹரிஷின் அருகே ஏறிக்கொள்ள சொன்ன அம்ருவை மறுத்தவள் ஹரிஷைப் பார்த்தாள். ‘உங்கள் பாடு! எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.’ என்பதாக ஓர் சிரிப்புடன் அமைதியாக இருந்துக்கொண்டான் அவன். அம்ருவை பின்னால் தனியே விட்டுவிட்டு, தான் மட்டும் அவனருகே அமர்வது அதிகப்படியாக தெரிந்ததால், “நானும் பின்னாடி உன் கூடவே உட்காருறேன் அம்ரு.” என்று பின்னால் அமர்ந்துவிட்டு ஹரிஷைப் பார்க்க, அவள் பார்வைக்காகவே காத்திருந்தாற் போல் ஒற்றைக் கண் சிமிட்டி அவளைச் சிவக்க வைத்துவிட்டு மகிழுந்தை எடுத்தான். ஸ்வேதா ஓசூர் அருகே இருக்கும் கிருஷ்ணகிரியில் உள்ள அனுமன் தீர்த்தம் செல்ல வேண்டும் என்று விரும்பியதால், விரைவாகக் கோவில் சென்று அனுமனைத் தரிசித்தனர். அம்ரு ஏனோ சொல்ல தெரியாத உணர்வில் அந்த அஞ்சுதனைப் பார்த்திருந்தாள். “அம்ரு, கிளம்பலாம் டைமாச்சு!” என்ற ஹரிஷ் ஸ்வேதாவின் காதில் கிசுகிசுத்தான். “நான் அனுமன் பக்தனில்ல பேபி? இ...

சீதையின் பூக்காடு🌻🌺 - தொகுப்பு.

  கதையின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன🔗🔗  கதை முன்னோட்டம். பொறுமை இழந்தவன், "ஹலோ! கேன் யூ ப்ளீஸ் டெல் மீ, வாட்'ஸ் யுவர் ப்ராப்ளம்?" எனக் கேட்டான். "யாரோ ப்ளே பண்றா. நேக்கு கொஞ்சம் முன்னாடி கால் வந்தது. ஊருக்கு கிளம்பின எங்க பாட்டிக்கு பாதி வழியிலேயே திடீர்னு ஃபிட்ஸ் வந்துட்டதாகவும், இப்போதைக்கு பக்கத்துல இருக்க அவா ஆத்துல வச்சு ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணிருக்கறதாகவும், உடனே வந்தா ஹாஸ்பிடல் அழைச்சிண்டு போகலாம்னும் சொல்லி இந்த அட்ரஸ்க்கு வர சொன்னா." "ஓ!" "ஆனா, இப்ப அம்மா பேசறத பார்த்தா எல்லாரும் நல்லபடியா ஊருக்கு போய்ட்டா போலயே... அப்ப நேக்கு கால் பண்ணது யாரா இருக்கும்?" "எனக்கு கால் பண்ணவன் தான் உங்களுக்கும் பண்ணிருக்கணும். ஆமா... வீட்ல உள்ளவங்க ஊருக்கு கிளம்பி எவ்ளோ நேரம் ஆச்சு?" "மூணரை மணி நேரம் இருக்கும். ஏன் கேக்கறேள்?" "நீங்க இங்க வர்றதுக்கு மினிமம் ஆஃப் ஆன் ஆர்-னு வச்சிக்கிட்டா கூட… ரொம்ப தூரம் இல்லனா, கிளம்பி மூணு மணி நேரம் ஆனவங்க ஊருக்கே போய் சேர்ந்திருப்பாங்களே… இங்க பக்கத்துல எப்டி இவ்ளோ நேரம் இருப்பாங்...

ஸ்கார்பியோ காதல் - 32

அத்தியாயம் 32   ஆறு மாதங்கள் கடந்திருந்தன. குளிரின் கடைசி நிழல்கள் விலகி நின்று கோடையை எதிர்பார்த்திருக்க, நகரம் மெதுவாக வியர்க்கத் தொடங்கியிருந்தது. அம்ருதா தன் பயிற்சி நாட்களின் கடைசி கட்டத்திற்குள் நுழைந்திருந்தாள். அன்று அஸ்வத்தை சிவன் கோவிலுக்கு அழைத்திருந்தாள் அம்ருதா. “அங்கேயே தான் வரணுமா?” அங்கேதானே சுயம் மறந்து அவள் கழுத்தை இறுக்கினான்? “எனக்கு அங்கேதான் ராசி!” “அம்மு…” “பழசை மறந்துட்டு வாங்க அஸ்வத்!” குழையும் குரல் அவனை அடிபணியச் செய்தது. எதுவும் மாறியிருக்கவில்லை!   ஸ்கார்பியோகாரன் அஸ்வத் மீதான அம்ருதாவின் அதே அடர்ந்த காதல்; தன்னை ஏன் இந்தப் பெண் ஈர்த்திழுக்கிறாள் என்று புரியாமலேயே அவள் காதலில் வளைந்து குழையும் அஸ்வத்; அவனுக்கு தன் தங்கையைத் தரவே மாட்டேனென கண்களில் தீக்கங்கைக் காட்டும் ஹரிஷ் என எதுவும் மாறியிருக்கவில்லை. சட்ட விரோத மருந்து ஆராய்ச்சி வழக்கில், அக்குழுவின் தலைவர் பத்ரிநாத் இன்னும் தனது தண்டனைக் காலத்தை அனுபவிக்கிறார். சத்யநாதன் மரித்ததும், அவரின் மகிழுந்தை இடித்துத் தள்ளிய ‘தார்’ சென்ற வழித்தடம் தெரியவில்லை என்றும், சத்யநாதனின் விரோதிகள் விசாரிக்கப்பட...