இறுதி அத்தியாயம் இதயம் முறையற்று துடிப்பதை 'அரித்மியா' என்பார்கள். அதாவது இதயத்துடிப்பு பெரியவர்களில் நிமிடத்திற்கு 100 துடிப்புகளுக்கு மேல் இருந்தால் 'டாக்ரிக்கார்டியா' (tachycardia) எனவும், நிமிடத்திற்கு 60 துடிப்புகளுக்குக் குறைவாக இருந்தால் 'பிராடிகார்டியா' (bradycardia) எனவும் அழைக்கப்படுகிறது. இங்கு தன் முன்னால் இருந்த அத்தனை உயிர்களும், பிரம்மாண்ட கட்டிடமும் வெடித்து சிதறியதைக் கண்டிருந்த ஸ்ரீநிதிக்கு ஏற்பட்டிருந்தது டாக்ரிக்கார்டியா! அரித்மியாவின் மூலம் நிகழும் நிகழ்வுகள் தீவிரமானவை அல்ல என்றாலும், ஒரு சில நபரை பக்கவாதம் அல்லது இதய செயலிழப்பு போன்ற சிக்கல்களுக்கு ஆளாக்குகின்றன. சில திடீர் மரணங்களும் நிகழ்கின்றன. ஸ்ரீநிதிக்கு அரித்மியாவின் மூலம் ஏற்பட்டிருப்பது இதய செயலிழப்பிற்கான அறிகுறி மட்டுமே! அதாவது மூச்சிரைப்பு! நம் உடலில் மோட்டார் பம்ப் போல செயல்படும் இதயம், ஒவ்வொரு துடிப்பின் போதும் இரத்தத்தை நிரப்புவது மற்றும் வெளியேற்றும் செயலை செய்கிறது. ஏதேனும் காரணத்தால் இந்நிகழ்வு சீர்குலையும்போது இதய செயலிழப்பு ஏற்படுகிறது. மற்றும்படி பயமோ, பதற்றமோ அல்ல...
கதையின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன🎉 கதை முன்னோட்டம் ஹிக்கின் பாதம்ஸை அலசி விட்டு, ஐபாகோவில் ஐக்கியமாகி, பின்னர் ஊருக்கு செல்லப் பெட்டியைக் கட்டினார்கள். மகிழுந்தில் ஸ்வேதாவை முன்னே ஹரிஷின் அருகே ஏறிக்கொள்ள சொன்ன அம்ருவை மறுத்தவள் ஹரிஷைப் பார்த்தாள். ‘உங்கள் பாடு! எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.’ என்பதாக ஓர் சிரிப்புடன் அமைதியாக இருந்துக்கொண்டான் அவன். அம்ருவை பின்னால் தனியே விட்டுவிட்டு, தான் மட்டும் அவனருகே அமர்வது அதிகப்படியாக தெரிந்ததால், “நானும் பின்னாடி உன் கூடவே உட்காருறேன் அம்ரு.” என்று பின்னால் அமர்ந்துவிட்டு ஹரிஷைப் பார்க்க, அவள் பார்வைக்காகவே காத்திருந்தாற் போல் ஒற்றைக் கண் சிமிட்டி அவளைச் சிவக்க வைத்துவிட்டு மகிழுந்தை எடுத்தான். ஸ்வேதா ஓசூர் அருகே இருக்கும் கிருஷ்ணகிரியில் உள்ள அனுமன் தீர்த்தம் செல்ல வேண்டும் என்று விரும்பியதால், விரைவாகக் கோவில் சென்று அனுமனைத் தரிசித்தனர். அம்ரு ஏனோ சொல்ல தெரியாத உணர்வில் அந்த அஞ்சுதனைப் பார்த்திருந்தாள். “அம்ரு, கிளம்பலாம் டைமாச்சு!” என்ற ஹரிஷ் ஸ்வேதாவின் காதில் கிசுகிசுத்தான். “நான் அனுமன் பக்தனில்ல பேபி? இ...