அத்தியாயம் 31.1 ஒன்றரை வருடத்திற்குப் பிறகு… ஒரு ஞாயிறு தினம்! ஆரவி, தான்யாவின் மகள் சீதாலட்சுமியோடு காணொளி அழைப்பில் பேசிக்கொண்டிருந்தாள். அந்த ஒன்றரை வயது மழலையின் மொழியில் இவளுக்கு என்ன தான் புரியுமோ! இருவரும் மணிக்கணக்கில் அரட்டையடித்துக் கொண்டிருப்பர். "மன்னி, இன்னிக்கு நீ என்ன சாப்பிட்ட? உங்கம்மா தர்ற அந்த பட்டர் சாண்ட்விச்சை சாப்பிடவே கூடாது. நன்னா மசிச்ச, நெய் போட்ட பருப்பு சாதம் வேணும் சொல்லு! சரியா?" "ம்ம்… யம்மி…" "ம்ஹூம்! உன் அம்மா சமையல் டம்மி! உன் விபு மாமா செய்ற கீரை கூட்டுதான் யம்ம்மி…" அந்த 'யம்மி' பிரபஞ்சத்திலுள்ள மொத்த ஏக்கத்தையும் தன்னுள்ளே அடக்கியிருந்தது. அது அவளின் விபுவிற்கான ஏக்கம். குட்டி சீதா பிறந்த அன்று இருவரும் சந்தித்ததுதான். அதன்பின் இந்த ஒன்றரை வருடத்தில் சொற்பப் பொழுதாய் தொலைபேசி உரையாடல்கள் மட்டுமே! எப்பொழுதேனும் சில நிமிடங்கள் காணொளி அழைப்பில் பேசிக்கொள்வார்கள். ஆரவி இப்பொழுது பகுதி நேர வேலைக்கு செல்வதோடு, பிரபல தமிழ் பத்திரிகை ஒன்றில் ப்ரூஃப் ரீடராகவும் பணியாற்றுகிறாள். எனவே நந்தனுடன் பேசும் நேரங்கள் மிகக் குற...
கதையின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன🎉 கதை முன்னோட்டம் ஹிக்கின் பாதம்ஸை அலசி விட்டு, ஐபாகோவில் ஐக்கியமாகி, பின்னர் ஊருக்கு செல்லப் பெட்டியைக் கட்டினார்கள். மகிழுந்தில் ஸ்வேதாவை முன்னே ஹரிஷின் அருகே ஏறிக்கொள்ள சொன்ன அம்ருவை மறுத்தவள் ஹரிஷைப் பார்த்தாள். ‘உங்கள் பாடு! எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.’ என்பதாக ஓர் சிரிப்புடன் அமைதியாக இருந்துக்கொண்டான் அவன். அம்ருவை பின்னால் தனியே விட்டுவிட்டு, தான் மட்டும் அவனருகே அமர்வது அதிகப்படியாக தெரிந்ததால், “நானும் பின்னாடி உன் கூடவே உட்காருறேன் அம்ரு.” என்று பின்னால் அமர்ந்துவிட்டு ஹரிஷைப் பார்க்க, அவள் பார்வைக்காகவே காத்திருந்தாற் போல் ஒற்றைக் கண் சிமிட்டி அவளைச் சிவக்க வைத்துவிட்டு மகிழுந்தை எடுத்தான். ஸ்வேதா ஓசூர் அருகே இருக்கும் கிருஷ்ணகிரியில் உள்ள அனுமன் தீர்த்தம் செல்ல வேண்டும் என்று விரும்பியதால், விரைவாகக் கோவில் சென்று அனுமனைத் தரிசித்தனர். அம்ரு ஏனோ சொல்ல தெரியாத உணர்வில் அந்த அஞ்சுதனைப் பார்த்திருந்தாள். “அம்ரு, கிளம்பலாம் டைமாச்சு!” என்ற ஹரிஷ் ஸ்வேதாவின் காதில் கிசுகிசுத்தான். “நான் அனுமன் பக்தனில்ல பேபி? இ...