மழை அன்று! தா கம் தாகம் என்று தவித்துக்கிடந்த நிலத்தின் வயிற்றை பெருமளவில் நிரப்பியிருந்தது, அன்றைய மழை! பள்ளிமுடிந்ததும் வகுப்பிலிருந்து வெளிவந்த மாணவர்கள் மைதானத்தில் இடுப்புவரை தேங்கியிருந்த செம்பழுப்பு தண்ணீரைப் பார்த்து உற்சாகமானார்கள். புத்தகப்பையை தலைமேல் தூக்கிக்கொண்டு ஓடியும் குதித்தும் சென்றுகொண்டிருக்கையில், ஐந்தாம்வகுப்பு பையன் ஒருவன் தொப்பென்று தண்ணீருக்குள் விழுந்துவிட்டான். அவன் புத்தகமூட்டை ஒருபுறமும், சாப்பாட்டுக்கூடை ஒருபுறமும் ஜலக்கீரிடை செய்தது. சற்றுமுயன்றால் மேலேறி வந்துவிடும் அளவிலான தண்ணீர்தான்! ஆனால் உயரம் குறைவாயிருந்த பையன் பயத்தில் மேலும் வழுக்கி விழுந்து, மூச்சுக்கு திணறினான். செத்துதான் போக போகிறோம், இனி உம்மாவின் தேங்காய் சாதத்தை ருசிக்க முடியாது, வாப்பாவின் தாடி அழுந்தும் முத்தம் கிடைக்க பெறாது என்றெல்லாம் நினைவுக்கிடங்கோடு அலைக்கழிந்து கொண்டிருந்தவனை, சட்டென்று ஒரு பிஞ்சுக்கரம் பிடித்து மேலிழுத்தது. இழுத்தக் கையோடு நுழைவாயில் வரை அழைத்தும் சென்றது. அதன்பின்னரே சிறுவன் ஆசுவாசமடைந்து புன்னகைத்தான். "தாங்க்ஸ் அண்ணா. என் புத்தகப்பை?" "என்கிட்...
கதையின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன🎉 கதை முன்னோட்டம் ஹிக்கின் பாதம்ஸை அலசி விட்டு, ஐபாகோவில் ஐக்கியமாகி, பின்னர் ஊருக்கு செல்லப் பெட்டியைக் கட்டினார்கள். மகிழுந்தில் ஸ்வேதாவை முன்னே ஹரிஷின் அருகே ஏறிக்கொள்ள சொன்ன அம்ருவை மறுத்தவள் ஹரிஷைப் பார்த்தாள். ‘உங்கள் பாடு! எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.’ என்பதாக ஓர் சிரிப்புடன் அமைதியாக இருந்துக்கொண்டான் அவன். அம்ருவை பின்னால் தனியே விட்டுவிட்டு, தான் மட்டும் அவனருகே அமர்வது அதிகப்படியாக தெரிந்ததால், “நானும் பின்னாடி உன் கூடவே உட்காருறேன் அம்ரு.” என்று பின்னால் அமர்ந்துவிட்டு ஹரிஷைப் பார்க்க, அவள் பார்வைக்காகவே காத்திருந்தாற் போல் ஒற்றைக் கண் சிமிட்டி அவளைச் சிவக்க வைத்துவிட்டு மகிழுந்தை எடுத்தான். ஸ்வேதா ஓசூர் அருகே இருக்கும் கிருஷ்ணகிரியில் உள்ள அனுமன் தீர்த்தம் செல்ல வேண்டும் என்று விரும்பியதால், விரைவாகக் கோவில் சென்று அனுமனைத் தரிசித்தனர். அம்ரு ஏனோ சொல்ல தெரியாத உணர்வில் அந்த அஞ்சுதனைப் பார்த்திருந்தாள். “அம்ரு, கிளம்பலாம் டைமாச்சு!” என்ற ஹரிஷ் ஸ்வேதாவின் காதில் கிசுகிசுத்தான். “நான் அனுமன் பக்தனில்ல பேபி? இ...