அத்தியாயம் 23 இந்த ஒரே ஒருமுறை தனக்காக தன் தம்பியை மன்னித்து விடுமாறும் இனி அவனோடான அவள் வாழ்க்கையில் அவன் என்ன தவறிழைத்தாலும் தக்க தண்டனை கொடுத்துக் கொள்ளுமாறும் சீதா ஆரவியிடம் மன்றாடியிருந்தாள். நீண்ட நேர கெஞ்சலுக்கு பின் சரியென்றிருந்தாள் ஆரவி. இங்கே இவள் வரவில்லை என்றால் சீதாவைக் காண முடிந்திருக்காதல்லவா? அந்த ஒரு காரணத்திற்காகவே விபுவை மன்னிக்க ஒத்துக்கொண்டாள். இருப்பினும், அவனிடம் வீம்பிற்காகவேணும் முகத்தைத் திருப்பிக்கொண்டே திரிந்தாள். அவனும் சளைக்காமல் காதல் செய்துகொண்டே இருந்தான். சீதாவும் இருவரின் ஊடல்களை ரசித்தவாறே சுற்றி வந்துகொண்டிருந்தாள். இப்போது அவ்வீட்டில் மூவரும் ஆளுக்கொரு தூணைப் பற்றி கொண்டு நின்றிருந்தனர். விழியோரமாய் ஒரு நீர் துளி வழியுதே என் காதலி அதன் ஆழங்கள் நீ உணர்ந்தால் போதும் போதும் போதும்... விபுநந்தனின் உதவியால், ப்ளேயரின் மூலம் ஏற்கனவே தன்னுள் பதித்து வைத்திருந்த காதல் பாடல்களை ஒவ்வொன்றாய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பிக் கொண்டிருந்தது, அந்த குறுந்தகடு. அவன் மேல் இருந்த கடுப்பைத் தொலைக்காட்சியின் மேல் காட்டியவள், அதை அணைத்துவிட்டு மீண்டும் சென...
கதையின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன🎉 கதை முன்னோட்டம் ஹிக்கின் பாதம்ஸை அலசி விட்டு, ஐபாகோவில் ஐக்கியமாகி, பின்னர் ஊருக்கு செல்லப் பெட்டியைக் கட்டினார்கள். மகிழுந்தில் ஸ்வேதாவை முன்னே ஹரிஷின் அருகே ஏறிக்கொள்ள சொன்ன அம்ருவை மறுத்தவள் ஹரிஷைப் பார்த்தாள். ‘உங்கள் பாடு! எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.’ என்பதாக ஓர் சிரிப்புடன் அமைதியாக இருந்துக்கொண்டான் அவன். அம்ருவை பின்னால் தனியே விட்டுவிட்டு, தான் மட்டும் அவனருகே அமர்வது அதிகப்படியாக தெரிந்ததால், “நானும் பின்னாடி உன் கூடவே உட்காருறேன் அம்ரு.” என்று பின்னால் அமர்ந்துவிட்டு ஹரிஷைப் பார்க்க, அவள் பார்வைக்காகவே காத்திருந்தாற் போல் ஒற்றைக் கண் சிமிட்டி அவளைச் சிவக்க வைத்துவிட்டு மகிழுந்தை எடுத்தான். ஸ்வேதா ஓசூர் அருகே இருக்கும் கிருஷ்ணகிரியில் உள்ள அனுமன் தீர்த்தம் செல்ல வேண்டும் என்று விரும்பியதால், விரைவாகக் கோவில் சென்று அனுமனைத் தரிசித்தனர். அம்ரு ஏனோ சொல்ல தெரியாத உணர்வில் அந்த அஞ்சுதனைப் பார்த்திருந்தாள். “அம்ரு, கிளம்பலாம் டைமாச்சு!” என்ற ஹரிஷ் ஸ்வேதாவின் காதில் கிசுகிசுத்தான். “நான் அனுமன் பக்தனில்ல பேபி? இ...