அத்தியாயம் 15 இதுவரை வகுப்பில் ஏதேனும் பிரச்சினை என்றால் பேராசியர்களிடம் பேச தயங்கும் மாணவர்கள் சீதாவிடம் தான் சொல்வார்கள். இவள் மனதிற்கு சரியாகப்பட்டால் உடனடியாக பேசி பிரச்சனையை சுமூகமாக்கிவிடுவாள். இது இரண்டாம் ஆண்டாக இருந்தாலும் கல்லூரியில் சேர்ந்த முதல் நாள் ராகிங்'ன் போதே சண்டையின் மூலம் சீதாவின் புகழ் கல்லூரியில் ஆங்காங்கே பரவியிருந்தது. எனவே இப்போதும் கஷ்டம் தீருமோ அல்லவோ சீதாவிடம் தன் சொந்த பிரச்சனையைக் கூறியதால் பாதி பாரம் தீர்ந்தாற் போல் உணர்ந்தாள் சாரதா. இரண்டாம் ஆண்டின் இறுதி தேர்வுகள் முடிவடைந்த நிலையில் முடிவுகள் வர ஒரு மாத காலமேனும் ஆகும் என்பதால் எல்லோரும் அவரவர் வீட்டிற்கு சென்றுவிட்டனர். முடிவெடுத்ததைப் போலவே, அந்த வார இறுதியிலேயே சாரதாவுடன் அவளின் கிராமத்திற்கு சென்ற சீதா, ஊர்க்காரர்களை விசாரித்துவிட்டு பயனில்லை என்றதும், சாரதாவையும் அழைத்துக்கொண்டு பக்கத்தில் உள்ள நகரங்களில் தோல் தொழிற்சாலை எங்குள்ளது என்று அலசலானாள். சீதாவின் இணையதளத் தேடலிலும் அவளின் தந்தை ரகுநந்தன் தந்த தகவலின் அடிப்படையிலும் சாரதாவின் கிராமத்திற்கு அருகில் எந்த தோல் தொழிற்சாலையும் இல்லை எனத...
கதையின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன🎉 கதை முன்னோட்டம் ஹிக்கின் பாதம்ஸை அலசி விட்டு, ஐபாகோவில் ஐக்கியமாகி, பின்னர் ஊருக்கு செல்லப் பெட்டியைக் கட்டினார்கள். மகிழுந்தில் ஸ்வேதாவை முன்னே ஹரிஷின் அருகே ஏறிக்கொள்ள சொன்ன அம்ருவை மறுத்தவள் ஹரிஷைப் பார்த்தாள். ‘உங்கள் பாடு! எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.’ என்பதாக ஓர் சிரிப்புடன் அமைதியாக இருந்துக்கொண்டான் அவன். அம்ருவை பின்னால் தனியே விட்டுவிட்டு, தான் மட்டும் அவனருகே அமர்வது அதிகப்படியாக தெரிந்ததால், “நானும் பின்னாடி உன் கூடவே உட்காருறேன் அம்ரு.” என்று பின்னால் அமர்ந்துவிட்டு ஹரிஷைப் பார்க்க, அவள் பார்வைக்காகவே காத்திருந்தாற் போல் ஒற்றைக் கண் சிமிட்டி அவளைச் சிவக்க வைத்துவிட்டு மகிழுந்தை எடுத்தான். ஸ்வேதா ஓசூர் அருகே இருக்கும் கிருஷ்ணகிரியில் உள்ள அனுமன் தீர்த்தம் செல்ல வேண்டும் என்று விரும்பியதால், விரைவாகக் கோவில் சென்று அனுமனைத் தரிசித்தனர். அம்ரு ஏனோ சொல்ல தெரியாத உணர்வில் அந்த அஞ்சுதனைப் பார்த்திருந்தாள். “அம்ரு, கிளம்பலாம் டைமாச்சு!” என்ற ஹரிஷ் ஸ்வேதாவின் காதில் கிசுகிசுத்தான். “நான் அனுமன் பக்தனில்ல பேபி? இ...