அத்தியாயம் 16 கல்யாணம் ஆகி நேற்றோடு ஒரு வருடம் ஆகிறது. அதாவது போன வருடம் மருத்துவமனையில் வைத்து, ராஜீவன் பன்னீர் பூ செயினை என் கழுத்தில் போட்ட ஒரு விசேஷமான நாள். போன மாதமே ராஜீவன், 'உனக்கு எங்கேனும் போக விருப்பமா யமுனா?' என்று கேட்டதற்கு வேண்டாமென மறுத்துவிட்டேன். நாங்கள் ஹனிமூன் என்று எங்கும் போகவில்லை. அந்நேரங்களில் கால் சரியாக வேண்டும் என்று ஒரு குழந்தையைப் போல் பார்த்துக் கொண்டான். இப்போது அது போன்ற இடங்களுக்கு போக எனக்கு விருப்பமில்லை. இங்கு வந்து முதல்முறை பூரத்திருவிழா நடைபெறும் வடக்குண்ணநாதன் சிவன் கோவிலுக்கும் அம்மன் கோவில்களுக்கும் போனேன். இங்கே அத்திருவிழாவை மிகவும் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். ஏழு நாட்கள் கோலாகலமாக நடக்கிறது. நூறுக்கும் மேற்பட்ட அலங்கரிக்கப்பட்ட யானைகளோடும் செண்ட மேளம், கொட்டு மேளம் மற்றும் பஞ்சவடிய இசையோடும் அந்த தேக்கன் காடு மைதானமே புல்லரித்து போயிற்று. அந்த வடக்குண்ணநாதன் சிவன் கோவில், ராஜா கடற்கரை, மிருகக்காட்சிசாலை, சக்தி தம்புரான் அரண்மனை, வியூர் சிறை பூங்கா என திருச்சூரிலேயே அத்தனை அழகுகள் கொட்டிக் கிடக்கின்றன. இந்த ஊரையே கேரளாவின் கலாச்...
கதையின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன🎉 கதை முன்னோட்டம் ஹிக்கின் பாதம்ஸை அலசி விட்டு, ஐபாகோவில் ஐக்கியமாகி, பின்னர் ஊருக்கு செல்லப் பெட்டியைக் கட்டினார்கள். மகிழுந்தில் ஸ்வேதாவை முன்னே ஹரிஷின் அருகே ஏறிக்கொள்ள சொன்ன அம்ருவை மறுத்தவள் ஹரிஷைப் பார்த்தாள். ‘உங்கள் பாடு! எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.’ என்பதாக ஓர் சிரிப்புடன் அமைதியாக இருந்துக்கொண்டான் அவன். அம்ருவை பின்னால் தனியே விட்டுவிட்டு, தான் மட்டும் அவனருகே அமர்வது அதிகப்படியாக தெரிந்ததால், “நானும் பின்னாடி உன் கூடவே உட்காருறேன் அம்ரு.” என்று பின்னால் அமர்ந்துவிட்டு ஹரிஷைப் பார்க்க, அவள் பார்வைக்காகவே காத்திருந்தாற் போல் ஒற்றைக் கண் சிமிட்டி அவளைச் சிவக்க வைத்துவிட்டு மகிழுந்தை எடுத்தான். ஸ்வேதா ஓசூர் அருகே இருக்கும் கிருஷ்ணகிரியில் உள்ள அனுமன் தீர்த்தம் செல்ல வேண்டும் என்று விரும்பியதால், விரைவாகக் கோவில் சென்று அனுமனைத் தரிசித்தனர். அம்ரு ஏனோ சொல்ல தெரியாத உணர்வில் அந்த அஞ்சுதனைப் பார்த்திருந்தாள். “அம்ரு, கிளம்பலாம் டைமாச்சு!” என்ற ஹரிஷ் ஸ்வேதாவின் காதில் கிசுகிசுத்தான். “நான் அனுமன் பக்தனில்ல பேபி? இ...