Skip to main content

Posts

Showing posts from September, 2025
Welcome to ShriVijay Writings🎉 - a world of suspense, love, romance, family bonds, thrilling crime, friendship, mystery, emotions, adventure, revenge and twists & turns. Dive in and enjoy every twist! 📖✨

சீதையின் பூக்காடு🌻🌺 - தொகுப்பு.

  கதையின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன🔗🔗  கதை முன்னோட்டம். பொறுமை இழந்தவன், "ஹலோ! கேன் யூ ப்ளீஸ் டெல் மீ, வாட்'ஸ் யுவர் ப்ராப்ளம்?" எனக் கேட்டான். "யாரோ ப்ளே பண்றா. நேக்கு கொஞ்சம் முன்னாடி கால் வந்தது. ஊருக்கு கிளம்பின எங்க பாட்டிக்கு பாதி வழியிலேயே திடீர்னு ஃபிட்ஸ் வந்துட்டதாகவும், இப்போதைக்கு பக்கத்துல இருக்க அவா ஆத்துல வச்சு ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணிருக்கறதாகவும், உடனே வந்தா ஹாஸ்பிடல் அழைச்சிண்டு போகலாம்னும் சொல்லி இந்த அட்ரஸ்க்கு வர சொன்னா." "ஓ!" "ஆனா, இப்ப அம்மா பேசறத பார்த்தா எல்லாரும் நல்லபடியா ஊருக்கு போய்ட்டா போலயே... அப்ப நேக்கு கால் பண்ணது யாரா இருக்கும்?" "எனக்கு கால் பண்ணவன் தான் உங்களுக்கும் பண்ணிருக்கணும். ஆமா... வீட்ல உள்ளவங்க ஊருக்கு கிளம்பி எவ்ளோ நேரம் ஆச்சு?" "மூணரை மணி நேரம் இருக்கும். ஏன் கேக்கறேள்?" "நீங்க இங்க வர்றதுக்கு மினிமம் ஆஃப் ஆன் ஆர்-னு வச்சிக்கிட்டா கூட… ரொம்ப தூரம் இல்லனா, கிளம்பி மூணு மணி நேரம் ஆனவங்க ஊருக்கே போய் சேர்ந்திருப்பாங்களே… இங்க பக்கத்துல எப்டி இவ்ளோ நேரம் இருப்பாங்...

சீதையின் பூக்காடு - 1

  அத்தியாயம் 1 வெள்ளிக்கிழமை! மாலை நான்கு மணி அளவில் மழை வரும் போல் வானம் கருமையைப் பூசிக் கொண்டிருந்தது. அந்த பதிப்பகத்தில் தனது புத்தகத்தை வெளியிடுவது பற்றி பேசிக்கொண்டிருந்தாள் ஆரவி. ஆரவி! இருபத்துமூன்று வயது. பிபிஎம் படித்தவள். படித்ததற்கேற்ப ஓர் சிறிய நிறுவனத்தில் வேலை செய்தவள். ஆம்! செய்தவள். மேற்கொண்டு படிக்க விரும்பாமலும், வேலை செய்த நிறுவனம் வேறு கைக்கு மாறியதாலும் தற்போது வேறு வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறாள். தனக்கு விருப்பமான எழுத்துலகில் அடியெடுத்து வைத்தவள் ஆறு நாவல்களும், இருபது சிறுகதைகளும் எழுதியுள்ளாள். அவள் எழுதி பத்திரிக்கைகளில் பிரசுரமானதில் ஒன்பது சிறுகதைகள் பரிசுகள் பெற்றவை! தரமான கதைகளை எழுதி அனுராதா ரமணன், சிவசங்கரி போன்ற எழுத்தாளர்களைப் போல் தானும் புகழ்பெற வேண்டும் என்பதே ஆரவியின் குறிக்கோள்! இந்த பதிப்பகமே இவள் எழுதிய நான்கு நாவல்களை வெளியிட்டுள்ளது. அதில் இரண்டு மறுபதிப்பிற்கு சென்றுள்ளன. தற்போதும் இவளெழுதிய 'சீதையின் பூக்காடு' என்ற புத்தகம் மறுபதிப்பிற்கு செல்லவிருக்கிறது. அதற்கு பதிப்பகத்தாரின் பாராட்டைப் பெற்றுக்கொண்டும், மற்றுமொரு கதைய...

விரிந்த கடலோடு நேசம்

  விரிந்த கடலோடு நேசம்  வாழ்க்கையில் உங்கள் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு பொக்கிஷம் கிடைத்திருக்கும். அது ஒரு பொம்மையாகவோ, பேனாவாகவோ, உங்களுடைய குரலாகவோ, இல்லை... வேறு துறை சார்ந்த திறமையாகவோ, ஒரு கிரிக்கெட் மட்டையாகவோ, தோழனாகவோ, மனைவியாகவோ, காதலாகவோ இப்படி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அந்த வகையில் என் வாழ்க்கையில் எனக்கு கிடைத்திருப்பவர், என்னுடைய பொக்கிஷம் என்று நான் நினைக்கின்றவர்… என் அப்பா!  என்னுடைய ஒவ்வொரு செயல்களிலும் வழிகாட்டியாக இருந்தவர்! ஒவ்வொரு சறுக்கலிலும், 'எழுந்துக்கோ அர்ஜூன்!' என்று ஊக்கம் தந்தவர்! என் மனதில் விழும் எதிர்மறை எண்ணங்களை அழித்து நேர்மறையாகவும், நேர்மையாகவும் சிந்திக்க கற்றுத் தந்தவர்! என் அப்பாவோடான நேரங்களையும், அவரின் நேர்மறை சிந்தனைகளையும் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். என் ஐந்தாம் வயதில் என் தம்பி அஷ்வந்த் பிறந்தான். அப்போது எல்லா தலைச்சன் பிள்ளைகளையும் போல நானும் தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்ந்தேன். ஒரு நாள் வீட்டின் பின்புற மாமரத்தினடியில் பறந்து செல்லும் தும்பிகளை வேடிக்கை பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தேன். என்னருகே நிழலாடியது. ...

ஆசிரியர் தின வாழ்த்துகள்

  வேலையில் இருந்து ஓய்வு பெற்ற பின், மகனோடு வந்துவிட்டேன். பேத்திகள் இருவரோடும் என் மீத வாழ்க்கை ஓர் நதியைப் போல அமைதியாகவே செல்கிறது.  இன்று அருகிலுள்ள பூங்கா வரை சென்று வருகிறேனென, மருமகளிடம் கூறி விட்டு... காலணிகளை அணிந்து கொண்டு நடக்க ஆரம்பித்தேன். பாழாய்ப் போன மூட்டு வலி இருபதடி தூரம் கூட நடக்க விடவில்லை.  பேருந்து நிறுத்தத்திற்கு எதிர்புற சாலையைக் கடந்தால் பூங்கா வரும். எனவே, பேருந்து நிறுத்தத்தில் இருந்த பெஞ்சில் அமர்ந்து செல்ல எண்ணி போய் அமர்ந்தேன். பேருந்து வருவதும், காத்திருந்த மனிதர்கள் அவசர கதியில் சென்று தொற்றிக் கொள்வதும், மீண்டும் பேருந்து நிறுத்தம் ஆட்களால் நிறைவதுமாய்... அந்த காலை நேரம் பரபரப்பாய் இருந்தது. அனைத்து நிகழ்வுகளையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த என் விழிகளின் பேச்சைக் கேட்காத மனம்... பிடிவாதமாய் என் கடந்த காலத்திற்குள் சென்று விழுந்தது. ஆறு வருடங்களுக்கு முன்பு வரை… இதோ என் முன்னால் ஓடிக்கொண்டிருக்கும் மனிதர்களைப் போலவே நானும், காலை அலாரத்தின் அழைப்பில் எழுந்து… வீட்டில் உள்ள அனைவருக்கும் வேண்டிய தேவைகளை முடித்து, நிற்க நேரமில்லாமல் அவசர...

🚍 ஒரு பேருந்து பயணம்

ஒரு பேருந்துப் பயணம்🚍 இன்று தனியாக செல்ல ஒரு பேருந்துப் பயணம் வாய்த்தது ௭னக்கு. அதுவும் அந்தி மாலை ஈரக்காற்று முகத்தில் மோத, அலைபாய்ந்து திரிந்து, நெற்றியில் குறுகுறுப்பூட்டும் முடிகளை ஒற்றை விரலால் ஒதுக்கிக் கொண்டே ரசித்து பயணிக்கும் சுகானுபவப் பயணம்! அந்த சுகானுபவத்தோடு, மனதிற்கு பிடித்த எழுத்துக்களை வாசிப்பது ௭ன்பதே ஒரு வித போதையல்லவா? அலைபேசியை உயிர்ப்பித்து, பாதி வாசித்து மீதி முடிக்காத நாவல் ஒன்றை வாசிக்க ஆரம்பித்தேன்.  வாசித்துக் கொண்டிருக்கையிலே ௭ன் இதழ்கள் மலர்கின்றன புன்னகையில்! சற்று நேரத்தில் விரிந்த சிரிப்பை உதிர்க்கிறேன். பேருந்து அடுத்த நிறுத்தத்தில் நின்றது. இறங்குபவர்களை உதிர்த்து விட்டு, ஏறுபவர்களை சுமந்து கொண்டு நகர்ந்தது. ௭ன் அருகில் யாரோ அமர்கிறார்கள். ஆனால், யாரென நிமிர்ந்து பார்க்க சொல்லி ௭ன் மூளை உத்தரவு பிறப்பிக்கவில்லை. கவனம் முழுதும் கதையிலேயே! மீண்டும் சிரிப்பு! ௭வ்வளவு கட்டுப்படுத்தியும் முடியாமல் இடது கையால் வாயை இறுக மூடிக் கொள்கிறேன்.  “இப்டிலாம் தனியா சிரிச்சா லூசுனு சொல்லிடுவாங்க பாப்பா.” ‘யாருடா அது?’ நிமிர்ந்து பார்க்க, நாற்பது வயது மதிக்கத...

🌻முழு நாவல்கள், தொடர்கதைகள் மற்றும் சிறுகதைகள் 🌻

ShriVijay Writings - TOC முடிவுற்ற நாவல்கள், சிறுகதைகள் மற்றும் அவற்றுக்கான இணைப்புகள்! தொடர்கதைகள்   ஸ்கார்பியோ காதல்🚗💌   (#love #suspense) முடிவுற்ற நாவல்கள்📖 சீதையின் பூக்காடு🌻🌺  (#love #thriller #ghost) சிறுகதைகள்   மழை🌧️ பல்பம்✨   ஒரு பேருந்து பயணம்🚍 ஆசிரியர் தின வாழ்த்துகள்🌻 எனது கதைகளைப் பிரதிலிபியில் வாசிக்க :  https://pratilipi.app.link/CBxETlhtXYb

பல்பம்

பல்பம்   வீட்டிற்கு தேவையானப் பொருட்களை வாங்கவென, அந்த பெரிய டிபார்ட்மெண்டல் ஸ்டோருக்குள் நுழைந்தேன். லிஸ்ட்டைப் பார்த்து பொருட்களை ௭டுத்துக் கொண்டிருக்கும் போது... ௭ன் கண்களில் பட்டது, அது! ஸ்டேஷனரி செக்ஷன்! கண்கள் மின்ன உள்ளே சென்றேன். ‘௭ங்க வச்சிருக்கானுங்க...’ சுற்றும் முற்றும் தேடினேன்.  ‘அதோ... அதோ... ஹய்யா! ஜாலி!!’ ௭ன்னருகில் யாரும் நிற்கிறார்களா ௭ன்று திரும்பிப் பார்த்தேன். பதினைந்து வயது மதிக்கத்தக்க பையன் ஒருவன் பேனா வாங்குவதற்கு ஒவ்வொன்றாய் பார்த்துக் கொண்டிருந்தான்.  ௭ன்னால் கைகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளவே முடியவில்லை. இரு கைகளையும் இறுக மூடிக் கொண்டு நின்றிருந்தேன். அவனைப் பார்த்தேன். பேனாக்களை விதம் விதமாக திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்தான்.  ‘பயபுள்ள! ஒத்த பேனா வாங்க ௭ம்புட்டு நேரம்? இடியட்! சீக்கிரம் போடா அங்கிட்டு!’ ௭ன் அர்ச்சனை அவனுக்கு கேட்டு விட்டது போலும். பேனாவை ௭டுத்து விட்டு நகர்ந்துவிட்டான்.  வேகமாக ரேக்கில் (rack) இருந்ததில் ஒரு டப்பாவை ௭டுத்து, பிரித்து... அதிலிருந்து ஒன்றை மட்டும் உருவி ௭டுத்து விட்டு, மீண்டும் டப்பாவை மூடி பில் போ...

ஸ்கார்பியோ காதல் 🚗 💌

  கதையின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன🎉 கதை முன்னோட்டம்   ஹிக்கின் பாதம்ஸை அலசி விட்டு, ஐபாகோவில் ஐக்கியமாகி, பின்னர் ஊருக்கு செல்லப் பெட்டியைக் கட்டினார்கள். மகிழுந்தில் ஸ்வேதாவை முன்னே ஹரிஷின் அருகே ஏறிக்கொள்ள சொன்ன அம்ருவை மறுத்தவள் ஹரிஷைப் பார்த்தாள். ‘உங்கள் பாடு! எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.’ என்பதாக ஓர் சிரிப்புடன் அமைதியாக இருந்துக்கொண்டான் அவன். அம்ருவை பின்னால் தனியே விட்டுவிட்டு, தான் மட்டும் அவனருகே அமர்வது அதிகப்படியாக தெரிந்ததால், “நானும் பின்னாடி உன் கூடவே உட்காருறேன் அம்ரு.” என்று பின்னால் அமர்ந்துவிட்டு ஹரிஷைப் பார்க்க, அவள் பார்வைக்காகவே காத்திருந்தாற் போல் ஒற்றைக் கண் சிமிட்டி அவளைச் சிவக்க வைத்துவிட்டு மகிழுந்தை எடுத்தான். ஸ்வேதா ஓசூர் அருகே இருக்கும் கிருஷ்ணகிரியில் உள்ள அனுமன் தீர்த்தம் செல்ல வேண்டும் என்று விரும்பியதால், விரைவாகக் கோவில் சென்று அனுமனைத் தரிசித்தனர். அம்ரு ஏனோ சொல்ல தெரியாத உணர்வில் அந்த அஞ்சுதனைப் பார்த்திருந்தாள். “அம்ரு, கிளம்பலாம் டைமாச்சு!” என்ற ஹரிஷ் ஸ்வேதாவின் காதில் கிசுகிசுத்தான். “நான் அனுமன் பக்தனில்ல பேபி? இ...

Popular Posts 💫