Skip to main content

Posts

Showing posts from November, 2025
Welcome to ShriVijay Writings🎉 - a world of suspense, love, romance, family bonds, thrilling crime, friendship, mystery, emotions, adventure, revenge and twists & turns. Dive in and enjoy every twist! 📖✨

சீதையின் பூக்காடு - 29

அத்தியாயம் 29 செவ்வாய் கிழமை காலை, அனிதா தன் தேடுதலின் முதல்கட்டமாக புத்தகப் பதிப்பகத்தாரின் அலுவலகத்தில் விசாரிக்க, அவர்கள் பரமானந்தத்திடம் சொன்னதையே இவளிடமும் கூறினர்.  அந்த அலுவலகம் ஒரு ஒடுங்கிய தெருவில் இருந்தாலும், தெருவின் ஆரம்பத்தில் இருந்ததால் அருகில் தேநீர் கடை, ஆட்டோ நிறுத்தம், சாலையோர கடைகள் என்று அந்த இடமே திருவிழா கொண்டதைப் போல் ஜேஜே என்றிருந்தது. முதலில் தேநீர் கடையில் ஆரவியின் புகைப்படத்தைக் காட்டி, அவளின் இரு சக்கர வாகனத்தையும் அடையாளமாகக் கூறி விசாரித்தாள். எப்போதேனும் வந்து போகும் ஆரவியை அங்கு யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.  ஆட்டோ நிறுத்தத்திலும் அவ்வாறே பதில் கிடைத்தது. சற்றுநேரம் யோசித்துவிட்டு, சாலையோர கடைகளில் ஒவ்வொன்றாகக் கேட்டுக் கேட்டு களைத்தாள். ஆரவி காணாமல் போன அன்று மாலையும், மறுநாளும் மழையின் காரணமாக யாரும் கடை போட்டிருக்கவில்லை. எனவே யாருக்கும் எந்த விவரமும் தெரிந்திருக்கவில்லை.  நம்பிக்கையை விடாமல் மீண்டும் சில கடைகளில் விசாரித்தாள். அதிர்ஷ்டவசமாக ஒரு கடை நபரின் மகன், அனிதாவின் சிக்கலான நூல்கண்டின் முனையைப் பிரித்துக் கொடுத்தான். அது என்னவெ...

சீதையின் பூக்காடு - 28

அத்தியாயம் 28 யதுநந்தன் பிறந்த போது கூட சீதாவின் நினைவில் அமைதியாக மகிழ்வைக் கொண்டாடிய விபுநந்தன், இப்போதுதான் எல்லையில்லா சந்தோஷப் புன்னகையை உதிர்க்கின்றான். மகனின் இம்மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். அதற்கு ஆரவியை அவன் கைபிடிக்க வேண்டுமென எண்ணிய ரகுநந்தன் தம்பதியர், முதற்கட்டமாக ஆரவியின் பெற்றோரை சந்திக்க முடிவு செய்தனர். அப்போது அங்கே துப்பறியும் நிறுவனத்தில் இருந்து வந்த பெண் தன்னை அனிதா என்று அறிமுகப்படுத்திக்கொண்டாள்.  இவர்கள் மொட்டைமாடியில் சீதாவின் நினைவில் துக்கத்தில் அமிழ்ந்திருக்கையில், கீழே ரகுநந்தனின் நண்பர் வெங்கட் இருந்தாரல்லவா? அவர்தான் அனிதாவைப் பற்றியும் அவள் வரவைக் குறித்தும், முழுதாக விசாரித்துவிட்டு அவளை மாடிக்கு அனுப்பியிருந்தார்.  சும்மா அனுப்பவில்லை. "நீ தேடி வந்த கல்பிரிட் பேரு விபுநந்தன்." என்று கூறி அனுப்பினார். அவளும் முன்னமே அவன் அலைபேசி எண்ணை வைத்து, அவன் ஜாதகத்தையே புரட்டியிருந்தாள். இவ்வீட்டின் உரிமையாளர் யாரெனவும் அவர் பிண்ணனி, குடும்ப விவரங்களையும் சேகரித்து தெரிந்து கொண்டிருந்தாள். அவ்வண்ணமே தட்சிணாவின் விபத்தைப் பற்றியும் அறிந்திருந்தாள். எனவேதா...

சீதையின் பூக்காடு - 27

அத்தியாயம் 27 தன்னைத் தூக்கி வளர்த்த அங்கிள் வெங்கட்டின் கண்டிப்பு, தன் தாயின் முறைப்பு, அவரிடம் நந்தாவின் கெஞ்சல், அப்பாவின் கிண்டல், தன் தோழன் ரிஷிண்ணாவின் கேலி, தோழி டியானின் கொஞ்சும் தமிழ், தான்யாவின் சிரிப்பலை, குட்டி யதுவின் அழகு பாவனைகள் என்று நடக்கும் கூத்து அனைத்தையும் தாயின் அருகில் அமர்ந்து கண்கள் பனிக்க கண்டு மகிழ்ந்து கொண்டிருந்தாள் சீதா.  காலையில் ஆரவியை சேலை கட்ட வற்புறுத்திவிட்டு, அவள் அணிந்ததும் ரசித்துப் பார்த்தவள் பின், 'தன் பூக்களிடம் ஒரு ஹாய் சொல்லி விட்டு வருகிறேன்' என்று சொல்லி சென்றாள். மாடியில் பூக்காட்டை சுற்றி வருகையில், சாலையில் சற்று தொலைவில் தங்கள் வீட்டு கார்கள் வருவதைப் பார்த்துவிட்டு கீழே வந்திருந்தாள். நல்லவேளை நந்தா அம்மாவிடம் ஓர் அறையோடு தப்பித்துவிட்டான் என்று நினைத்தவள், தான்யாவின் தாய்மை தோற்றத்தில் நெஞ்சம் நிறைந்திருந்தாள். தான்யா இங்கு திருமணத்திற்கு முன்பு வந்ததுதான். அதன் பின் இப்பொழுதுதான் அவளைப் பார்க்கிறாள் சீதா. டியானும் தன் மருமகன் யதுநந்தனும் வார இறுதிகளில் இங்கு வரும் போது தூரமாக நின்று பார்த்துவிட்டு போய்விடுவாள். இன்று தான் தன...

சீதையின் பூக்காடு - 26

அத்தியாயம் 26 வியாழக்கிழமை காலையில் ஆரவி தலையைத் துவட்டியவாறே, "விபு! காஃபி ரெடியா?" எனக் கேட்டவாறே கீழிறங்கும் போது, மிகச் சரியாக அதே நேரத்தில் விபுநந்தனின் குடும்பத்தினர் அனைவரும் உள்ளே வந்தனர். விபுநந்தன் சமையலறையில் வழக்கம் போல் ஷார்ட்ஸூம் டீ-ஷர்ட்டுமாகவும், காதில் வாக்மேனுடனும் நின்று பாத்திரத்தை உருட்டிக் கொண்டிருந்தான். குட்டிப் பையன் யதுநந்தன் ஓடி வருவதை திறப்பு வழியே கண்டவன், தோளில் கிடந்த கிச்சன் கிளாத்துடன் வெளியே வந்து அனைவரையும் பார்த்துவிட்டு ஆடு திருடிய கள்ளனைப் போல் திருதிருவென முழித்தான்.  ஆரவியையும் தம்பியையும் மாறி மாறிப் பார்த்த தான்யா, "அடப்பாவிஈஈ!!! சொன்ன மாதிரி நிஜமாவே இந்த பொண்ணைக் கடத்திட்டு வந்துட்டியா?" என்று அநியாயத்திற்கு அதிர்ந்து போய் வாயைப் பொத்தினாள். "என்னாதூஊஊ!!! பொண்ண…. கடத்திட்டு வந்துட்டானாஆஆ?? ம்மா! ம்மா!! இவன் செய்யாதது இந்த ஒரு வேலை தான்மா! இப்ப அதையும் செஞ்சிட்டான். போச்சு போங்க! நாளைக்கு நீங்க லேடீஸ் க்ளப்ல எப்டிமா தலை நிமிர்ந்து நடப்பீங்க? அய்யகோ!!!" என்று ரிஷிநந்தன் வேண்டுமென்றே ஏற்ற இறக்கத்தோடு கண்களை உருட்டி உ...

சீதையின் பூக்காடு - 25

அத்தியாயம் 25 முதலில் தட்சிணாமூர்த்திக்கு என்னவாயிற்று என்று பார்த்துவிடுவோம். கதைமாந்தர்கள் வாய்மொழியாக கூறினால் கதை இன்னும் இழுக்கும்.‌ எனவே நானே சுருங்க கூறிவிடுகிறேன். பொதுவாக குடும்பத்தினர் யாரேனும் இங்கே தங்க வரும் போது வீட்டினைப் பராமரிக்கும் தட்சிணா, கிருஷ்ணாவிற்கு தேவையான சமையல் பொருட்களோடு தங்களின் தேவைக்கும் வாங்கி வந்துவிடுவர். அப்போது இருவரில் ஒருவருக்கு விடுமுறை அளிக்கப்படும். அந்த சில நாட்களுக்கு மட்டும் விடுப்பிற்கு ஊருக்குள் இருக்கும் தங்கள் வீட்டிற்கு சென்றுவிடுவார்கள். காட்டிற்குள் ஒற்றை வீடாய் இருப்பதனால் வேலையில் இருக்கும் யாரும் குடும்பத்தோடு இங்கே தங்குவதை ரகுநந்தன் அனுமதிக்கவில்லை. எனவே இவர்கள் இருவர் மட்டும்தான் இங்கே!  அனைவரும் அவரவருக்கு தேவையானதை வாங்கிக்கொள்ள, விபுநந்தன் மட்டும் தன் சோம்பேறித்தனத்தால் எந்த பொருளையும் வாங்கி வரமாட்டான். எதுவானாலும் தன் தேவைகளை தட்சிணாவிடம் கூற, அவன் ஊருக்குள் சென்று வாங்கி வந்து தருவான். அப்போது அவன் வீட்டிற்கு தேவையான பொருட்களும் வாங்கக் கிடைக்குமாதலால் மகிழ்ச்சியாகவே சென்று வருவான்.  இவர்கள் வீட்டில் யாரும் வேலைகா...

Popular Posts 💫

ஸ்கார்பியோ காதல் 🚗 💌

  கதையின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன🎉 கதை முன்னோட்டம்   ஹிக்கின் பாதம்ஸை அலசி விட்டு, ஐபாகோவில் ஐக்கியமாகி, பின்னர் ஊருக்கு செல்லப் பெட்டியைக் கட்டினார்கள். மகிழுந்தில் ஸ்வேதாவை முன்னே ஹரிஷின் அருகே ஏறிக்கொள்ள சொன்ன அம்ருவை மறுத்தவள் ஹரிஷைப் பார்த்தாள். ‘உங்கள் பாடு! எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.’ என்பதாக ஓர் சிரிப்புடன் அமைதியாக இருந்துக்கொண்டான் அவன். அம்ருவை பின்னால் தனியே விட்டுவிட்டு, தான் மட்டும் அவனருகே அமர்வது அதிகப்படியாக தெரிந்ததால், “நானும் பின்னாடி உன் கூடவே உட்காருறேன் அம்ரு.” என்று பின்னால் அமர்ந்துவிட்டு ஹரிஷைப் பார்க்க, அவள் பார்வைக்காகவே காத்திருந்தாற் போல் ஒற்றைக் கண் சிமிட்டி அவளைச் சிவக்க வைத்துவிட்டு மகிழுந்தை எடுத்தான். ஸ்வேதா ஓசூர் அருகே இருக்கும் கிருஷ்ணகிரியில் உள்ள அனுமன் தீர்த்தம் செல்ல வேண்டும் என்று விரும்பியதால், விரைவாகக் கோவில் சென்று அனுமனைத் தரிசித்தனர். அம்ரு ஏனோ சொல்ல தெரியாத உணர்வில் அந்த அஞ்சுதனைப் பார்த்திருந்தாள். “அம்ரு, கிளம்பலாம் டைமாச்சு!” என்ற ஹரிஷ் ஸ்வேதாவின் காதில் கிசுகிசுத்தான். “நான் அனுமன் பக்தனில்ல பேபி? இ...

சீதையின் பூக்காடு🌻🌺 - தொகுப்பு.

  கதையின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன🔗🔗  கதை முன்னோட்டம். பொறுமை இழந்தவன், "ஹலோ! கேன் யூ ப்ளீஸ் டெல் மீ, வாட்'ஸ் யுவர் ப்ராப்ளம்?" எனக் கேட்டான். "யாரோ ப்ளே பண்றா. நேக்கு கொஞ்சம் முன்னாடி கால் வந்தது. ஊருக்கு கிளம்பின எங்க பாட்டிக்கு பாதி வழியிலேயே திடீர்னு ஃபிட்ஸ் வந்துட்டதாகவும், இப்போதைக்கு பக்கத்துல இருக்க அவா ஆத்துல வச்சு ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணிருக்கறதாகவும், உடனே வந்தா ஹாஸ்பிடல் அழைச்சிண்டு போகலாம்னும் சொல்லி இந்த அட்ரஸ்க்கு வர சொன்னா." "ஓ!" "ஆனா, இப்ப அம்மா பேசறத பார்த்தா எல்லாரும் நல்லபடியா ஊருக்கு போய்ட்டா போலயே... அப்ப நேக்கு கால் பண்ணது யாரா இருக்கும்?" "எனக்கு கால் பண்ணவன் தான் உங்களுக்கும் பண்ணிருக்கணும். ஆமா... வீட்ல உள்ளவங்க ஊருக்கு கிளம்பி எவ்ளோ நேரம் ஆச்சு?" "மூணரை மணி நேரம் இருக்கும். ஏன் கேக்கறேள்?" "நீங்க இங்க வர்றதுக்கு மினிமம் ஆஃப் ஆன் ஆர்-னு வச்சிக்கிட்டா கூட… ரொம்ப தூரம் இல்லனா, கிளம்பி மூணு மணி நேரம் ஆனவங்க ஊருக்கே போய் சேர்ந்திருப்பாங்களே… இங்க பக்கத்துல எப்டி இவ்ளோ நேரம் இருப்பாங்...

சீதையின் பூக்காடு - 1

  அத்தியாயம் 1 வெள்ளிக்கிழமை! மாலை நான்கு மணி அளவில் மழை வரும் போல் வானம் கருமையைப் பூசிக் கொண்டிருந்தது. அந்த பதிப்பகத்தில் தனது புத்தகத்தை வெளியிடுவது பற்றி பேசிக்கொண்டிருந்தாள் ஆரவி. ஆரவி! இருபத்துமூன்று வயது. பிபிஎம் படித்தவள். படித்ததற்கேற்ப ஓர் சிறிய நிறுவனத்தில் வேலை செய்தவள். ஆம்! செய்தவள். மேற்கொண்டு படிக்க விரும்பாமலும், வேலை செய்த நிறுவனம் வேறு கைக்கு மாறியதாலும் தற்போது வேறு வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறாள். தனக்கு விருப்பமான எழுத்துலகில் அடியெடுத்து வைத்தவள் ஆறு நாவல்களும், இருபது சிறுகதைகளும் எழுதியுள்ளாள். அவள் எழுதி பத்திரிக்கைகளில் பிரசுரமானதில் ஒன்பது சிறுகதைகள் பரிசுகள் பெற்றவை! தரமான கதைகளை எழுதி அனுராதா ரமணன், சிவசங்கரி போன்ற எழுத்தாளர்களைப் போல் தானும் புகழ்பெற வேண்டும் என்பதே ஆரவியின் குறிக்கோள்! இந்த பதிப்பகமே இவள் எழுதிய நான்கு நாவல்களை வெளியிட்டுள்ளது. அதில் இரண்டு மறுபதிப்பிற்கு சென்றுள்ளன. தற்போதும் இவளெழுதிய 'சீதையின் பூக்காடு' என்ற புத்தகம் மறுபதிப்பிற்கு செல்லவிருக்கிறது. அதற்கு பதிப்பகத்தாரின் பாராட்டைப் பெற்றுக்கொண்டும், மற்றுமொரு கதைய...