Skip to main content

Posts

Showing posts from October, 2025
Welcome to ShriVijay Writings🎉 - a world of suspense, love, romance, family bonds, thrilling crime, friendship, mystery, emotions, adventure, revenge and twists & turns. Dive in and enjoy every twist! 📖✨

சீதையின் பூக்காடு - 16.2

அத்தியாயம் 16.2 "ஓய் தான்யாக்கா! வந்த நாலு நாளா நானும் பார்க்கறேன். ஒண்ணு அந்த ஐ ஃபோனை நோண்டிட்டு இருக்க. இல்ல லேப்புக்குள்ள தலையை விட்டுட்டு இருக்க. அப்டி என்ன பிஸினஸ் டீல் பண்ணிட்டு இருக்க? மச்சான் அதுக்குள்ள உன் கையில மேனேஜ்மென்ட்'அ மொத்தமா ஒப்படைச்சிட்டாரா?"  "நீ வேற வயித்தெரிச்சலைக் கிளப்பாம போடா. அப்டியே உங்க மச்சான் என்னை நம்பி குடுத்துட்டாலும்... எனக்கு இருக்கற ஒரே என்டர்டெயின்மென்ட் இது தான்." என்று அலைபேசியைக் காட்டினாள். "ரொம்ப அலுத்துக்கற போலயே?" "ஹான்! இங்கேயும் என்னைக் கண்டுக்காம எல்லாரும் அவரவர் வேலையைப் பார்க்க போயிடறாங்க. நான் வேற என்ன பண்றதாம்?" "ஏன் அம்மா கூட ஸ்கூலுக்கு போகலாம். அப்பா கூட ஹோட்டல் போயிருக்கலாம். இல்ல அண்ணியோட ரிசார்ட்டாவது போயிருக்கலாம்." "அதுக்கு நான் இங்க இருந்து இந்த ஸ்டோரீஸே படிச்சிடுவேன்டா நந்தா." "படிக்கற காலத்துல தான் கைட்குள்ள (guide) கதை புக்கை ஒளிச்சு வச்சு படிச்சு, அம்மாகிட்ட அடி வாங்குவ. கல்யாணம் ஆனதுக்கப்புறம் கூட திருந்தலயா நீ?" "திருந்துறதுக்கு நான் என்ன குடி...

சீதையின் பூக்காடு - 16.1

அத்தியாயம் 16.1 புதன்கிழமை! தன் முன் இருந்த புகைப்படத் தொகுப்பைப் பார்த்து சிலையாக அமர்ந்திருந்தான் விபுநந்தன். காலையில் தன் மூத்த தமக்கையின் அறையில் இருந்து வெளியே வந்த ஆரவியைப் பார்த்ததுமே துணுக்குற்றான். அவள் முகமும், இரவு வெகுநேரம் தூங்காமல் விழித்திருந்ததால் சிவந்து, சிறுத்திருந்த கண்களுமே அவளுக்கு தன்னைத் தெரிந்துவிட்டது என்பதைப் பறைசாற்றின. எப்படி என யோசித்தவனுக்கு விடையாக அவள் கைகளில் இருந்த புகைப்படத் தொகுப்பு சிரித்தது. காலையில் எழுந்ததுமே சீதாவைத் தான் தேடினாள் ஆரவி. மிச்ச கதையைக் கேட்க வேண்டுமல்லவா? அறையை சுற்றிலும் தேட, திடுமென காற்றோடு காற்றாக ஜன்னலின் வழி வந்தவளைக் கண்டு கொஞ்சமும் திடுக்கிடாமல், "எங்க போயிட்டேள் இவ்ளோ காலம்பரயே?" என்று சோம்பலாக உடலை நெளித்த படி கேட்டாள். "ஓய்! என்கிட்ட கொஞ்சமாவது பயமிருக்கா உனக்கு?" என்று அவள் பதில் கேள்வி கேட்க, "நீங்க என்ன பேயா? பூதமா? நேக்கென்னத்துக்கு பயமாம்?" என்றாள், சாவகாசமாக! "மணிக்கொருக்க மயங்கின பொண்ணா நீ?" என்று கேலி செய்தவள், "நான் பேய் தான?" என்றாள், ஒருவித வேதனைச் சிரிப்புடன...

சீதையின் பூக்காடு - 15

அத்தியாயம் 15 இதுவரை வகுப்பில் ஏதேனும் பிரச்சினை என்றால் பேராசியர்களிடம் பேச தயங்கும் மாணவர்கள் சீதாவிடம் தான் சொல்வார்கள். இவள் மனதிற்கு சரியாகப்பட்டால் உடனடியாக பேசி பிரச்சனையை சுமூகமாக்கிவிடுவாள். இது இரண்டாம் ஆண்டாக இருந்தாலும் கல்லூரியில் சேர்ந்த முதல் நாள் ராகிங்'ன் போதே சண்டையின் மூலம் சீதாவின் புகழ் கல்லூரியில் ஆங்காங்கே பரவியிருந்தது. எனவே இப்போதும் கஷ்டம் தீருமோ அல்லவோ சீதாவிடம் தன் சொந்த பிரச்சனையைக் கூறியதால் பாதி பாரம் தீர்ந்தாற் போல் உணர்ந்தாள் சாரதா.  இரண்டாம் ஆண்டின் இறுதி தேர்வுகள் முடிவடைந்த நிலையில் முடிவுகள் வர ஒரு மாத காலமேனும் ஆகும் என்பதால் எல்லோரும் அவரவர் வீட்டிற்கு சென்றுவிட்டனர். முடிவெடுத்ததைப் போலவே, அந்த வார இறுதியிலேயே சாரதாவுடன் அவளின் கிராமத்திற்கு சென்ற சீதா, ஊர்க்காரர்களை விசாரித்துவிட்டு பயனில்லை என்றதும், சாரதாவையும் அழைத்துக்கொண்டு பக்கத்தில் உள்ள நகரங்களில் தோல் தொழிற்சாலை எங்குள்ளது என்று அலசலானாள். சீதாவின் இணையதளத் தேடலிலும் அவளின் தந்தை ரகுநந்தன் தந்த தகவலின் அடிப்படையிலும் சாரதாவின் கிராமத்திற்கு அருகில் எந்த தோல் தொழிற்சாலையும் இல்லை எனத...

சீதையின் பூக்காடு - 14

அத்தியாயம் 14 'விபுநந்தன் காதலென்று கூறி கழுத்தறுத்துவிட்டான்; தானும் மடத்தனமாக அவனிடம் பிரியத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறோம்' என்று ஆரவி ஒரு மூச்சு குமுறினாள். காதலின் அடிப்படையே உண்மையும் நம்பிக்கையுமல்லவா? இங்கே தன்னிடம் உண்மையாக இல்லாதவனை, தான் எங்ஙனம் நம்புவது? என்று குழம்பி தவித்தாள். இதற்கிடையே சீதாவைப் பார்க்க, 'பவித்ரமான மலரைப் போல் இருப்பவளுக்கு எப்படி இந்நிலை வந்திருக்கக்கூடும்? அவள் தன்னிடம் பேச விழைந்த காரணமென்ன?' என்று அது வேறு மூளையின் ஒரு புறம் ஓடிக் கொண்டிருந்தது. சற்றுநேரம் கண்களை மூடி ஆழ்ந்த மூச்சையெடுத்து, தன்னை ஒருநிலைப்படுத்திக் கொண்டு விழிகளைத் திறந்து சீதாவைப் பார்த்தாள். அவள் அதே புன்னகை மாறாத முகத்தோடு கேட்டாள். "டூ யூ ஃபீல் பெட்டர் நௌ, ஆரவி?"  "நீங்க என்னான்ட ஏதோ பேச வந்த மாதிரி இருந்ததே?"  சின்னதாக சிரித்துக்கொண்டு, "இல்ல... இந்த ஏழு வருஷத்துல முதல்முதலா ஒரு பொண்ணு கண்ணுக்கு நான் தெரிஞ்சிருக்கேன். அதான் சும்மா உன்கிட்ட பேச ஆசை வந்துடுச்சு." என்றாள். 'ஏழு வருஷமா? அப்ப…' ஆரவியால் வாய்விட்டு கேட்க முடியவ...

சீதையின் பூக்காடு - 13.2

அத்தியாயம் 13.2 சீதா தொடர்ந்தாள். "அதான் அவன் தில்வாலே துல்ஹனியா படம்னு சொன்னதும் உனக்கு என் குரல் கேட்கும்ங்கற ஞாபகம் கூட இல்லாம எப்பவும் போல கண்ணை மூடி பாடித் தொலைச்சிட்டேன். அப்புறம் தான் நீ மயங்கினதும் என்னையே திட்டிட்டு, இனி நீங்க பேசும் போது அங்கே இருக்கவே கூடாதுனு முடிவு பண்ணி வந்துட்டேன். ஆனா, அதுக்கப்புறம் திடீர்னு நந்தா பயந்து கத்துற சத்தம் கேட்டு தான் என்னவோ ஏதோனு நினைச்சு மறுபடியும் கீழ வந்தேன்." அவன் அன்னாபெல் என்ற பேய் படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கையில், ஆரவியின் அழைப்பிற்கு கத்தினானல்லவா? அதைச் சொல்கிறாள். "ம்ம்... அதான் அன்னிக்கு நாங்க சாப்பிடும் போது சிரிக்க ஆரம்பிச்சு பாதிலயே நிறுத்திட்டேளா?" "ஆமா ஆரவி! நீங்க இப்டி இயல்பா இருக்கறதை வச்சு தான் ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸா இருப்பீங்கன்றதுல எனக்கு சந்தேகம் வரல. அதோட நீங்க லவர்ஸ் மாதிரியும் நடந்துக்கலயே." என்று சிரித்தவள், "நந்தா லவ்லாம் பண்ணுவான்னு நான் நினைக்கல. எத்தனை பெரிசா வளர்ந்தாலும் அம்மாவுக்கு பிள்ளை குழந்தை தான் இல்ல? நந்தாவும் எனக்கு அப்டி தான் ஆரவி." என்று பாசத்தில் ம...

சீதையின் பூக்காடு - 13.1

அத்தியாயம் 13.1 விபுநந்தனிடம் காதல் சொல்லிவிட்டு வந்த ஆரவி, தனதறைக்கு அடுத்த அறைக்கதவு காற்றில் ஆடியதைக் கண்டு உள்ளே சென்று பார்வையிட எண்ணினாள். இங்கு எந்த அறைகளும் பூட்டப்படாமல் தான் இருந்ததென்றாலும், இன்று சற்று விலகி திறந்திருந்தாற் போல் இருந்தது.  உள்ளே அந்த அரூபப் பெண் அமர்ந்திருக்க, முதலில் பயந்த ஆரவி பின் அவள் யாரென கோபமாக வினவ, அவள் அங்கிருந்த அலமாரியில் உள்ள புகைப்படத் தொகுப்பைக் காண செய்தாள். ஓர் தொகுப்பில் இருந்த முதல் நான்கு புகைப்படங்களைப் பார்த்ததுமே ஆரவிக்கு எதுவோ புரிவதைப் போல் இருந்தது.  புகைப்படங்களில் இந்த பெண்ணோடு, இன்னும் இரண்டு பெண்களும் மூன்று ஆண்களும் படகு சவாரி செய்பவர்களைப் போல லைஃப் ஜாக்கெட் அணிந்திருந்தனர். அந்த இரண்டு பெண்களில் ஒருவர் இவர்கள் அன்னையாக இருக்க வேண்டும். அளவான புன்னகையோடு நிமிர்வாய் நின்றிருந்தார். மற்றவள் இவளுடைய சகோதரியாக இருக்கலாம். ஆடவர்களில் ஒருவன் நம் ஆரவியின் மனதை மயக்கிய திருடன், விபுநந்தன்! இன்னொருவர் இவர்கள் தந்தையாக இருக்கக்கூடும். ஆனால் தோழனைப் போல் தம் மக்களோடு உல்லாசமாய் சிரித்துக் கொண்டிருந்தார். மற்றொருவன் விபுநந்த...

Popular Posts 💫

ஸ்கார்பியோ காதல் 🚗 💌

  கதையின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன🎉 கதை முன்னோட்டம்   ஹிக்கின் பாதம்ஸை அலசி விட்டு, ஐபாகோவில் ஐக்கியமாகி, பின்னர் ஊருக்கு செல்லப் பெட்டியைக் கட்டினார்கள். மகிழுந்தில் ஸ்வேதாவை முன்னே ஹரிஷின் அருகே ஏறிக்கொள்ள சொன்ன அம்ருவை மறுத்தவள் ஹரிஷைப் பார்த்தாள். ‘உங்கள் பாடு! எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.’ என்பதாக ஓர் சிரிப்புடன் அமைதியாக இருந்துக்கொண்டான் அவன். அம்ருவை பின்னால் தனியே விட்டுவிட்டு, தான் மட்டும் அவனருகே அமர்வது அதிகப்படியாக தெரிந்ததால், “நானும் பின்னாடி உன் கூடவே உட்காருறேன் அம்ரு.” என்று பின்னால் அமர்ந்துவிட்டு ஹரிஷைப் பார்க்க, அவள் பார்வைக்காகவே காத்திருந்தாற் போல் ஒற்றைக் கண் சிமிட்டி அவளைச் சிவக்க வைத்துவிட்டு மகிழுந்தை எடுத்தான். ஸ்வேதா ஓசூர் அருகே இருக்கும் கிருஷ்ணகிரியில் உள்ள அனுமன் தீர்த்தம் செல்ல வேண்டும் என்று விரும்பியதால், விரைவாகக் கோவில் சென்று அனுமனைத் தரிசித்தனர். அம்ரு ஏனோ சொல்ல தெரியாத உணர்வில் அந்த அஞ்சுதனைப் பார்த்திருந்தாள். “அம்ரு, கிளம்பலாம் டைமாச்சு!” என்ற ஹரிஷ் ஸ்வேதாவின் காதில் கிசுகிசுத்தான். “நான் அனுமன் பக்தனில்ல பேபி? இ...

சீதையின் பூக்காடு🌻🌺 - தொகுப்பு.

  கதையின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன🔗🔗  கதை முன்னோட்டம். பொறுமை இழந்தவன், "ஹலோ! கேன் யூ ப்ளீஸ் டெல் மீ, வாட்'ஸ் யுவர் ப்ராப்ளம்?" எனக் கேட்டான். "யாரோ ப்ளே பண்றா. நேக்கு கொஞ்சம் முன்னாடி கால் வந்தது. ஊருக்கு கிளம்பின எங்க பாட்டிக்கு பாதி வழியிலேயே திடீர்னு ஃபிட்ஸ் வந்துட்டதாகவும், இப்போதைக்கு பக்கத்துல இருக்க அவா ஆத்துல வச்சு ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணிருக்கறதாகவும், உடனே வந்தா ஹாஸ்பிடல் அழைச்சிண்டு போகலாம்னும் சொல்லி இந்த அட்ரஸ்க்கு வர சொன்னா." "ஓ!" "ஆனா, இப்ப அம்மா பேசறத பார்த்தா எல்லாரும் நல்லபடியா ஊருக்கு போய்ட்டா போலயே... அப்ப நேக்கு கால் பண்ணது யாரா இருக்கும்?" "எனக்கு கால் பண்ணவன் தான் உங்களுக்கும் பண்ணிருக்கணும். ஆமா... வீட்ல உள்ளவங்க ஊருக்கு கிளம்பி எவ்ளோ நேரம் ஆச்சு?" "மூணரை மணி நேரம் இருக்கும். ஏன் கேக்கறேள்?" "நீங்க இங்க வர்றதுக்கு மினிமம் ஆஃப் ஆன் ஆர்-னு வச்சிக்கிட்டா கூட… ரொம்ப தூரம் இல்லனா, கிளம்பி மூணு மணி நேரம் ஆனவங்க ஊருக்கே போய் சேர்ந்திருப்பாங்களே… இங்க பக்கத்துல எப்டி இவ்ளோ நேரம் இருப்பாங்...

சீதையின் பூக்காடு - 1

  அத்தியாயம் 1 வெள்ளிக்கிழமை! மாலை நான்கு மணி அளவில் மழை வரும் போல் வானம் கருமையைப் பூசிக் கொண்டிருந்தது. அந்த பதிப்பகத்தில் தனது புத்தகத்தை வெளியிடுவது பற்றி பேசிக்கொண்டிருந்தாள் ஆரவி. ஆரவி! இருபத்துமூன்று வயது. பிபிஎம் படித்தவள். படித்ததற்கேற்ப ஓர் சிறிய நிறுவனத்தில் வேலை செய்தவள். ஆம்! செய்தவள். மேற்கொண்டு படிக்க விரும்பாமலும், வேலை செய்த நிறுவனம் வேறு கைக்கு மாறியதாலும் தற்போது வேறு வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறாள். தனக்கு விருப்பமான எழுத்துலகில் அடியெடுத்து வைத்தவள் ஆறு நாவல்களும், இருபது சிறுகதைகளும் எழுதியுள்ளாள். அவள் எழுதி பத்திரிக்கைகளில் பிரசுரமானதில் ஒன்பது சிறுகதைகள் பரிசுகள் பெற்றவை! தரமான கதைகளை எழுதி அனுராதா ரமணன், சிவசங்கரி போன்ற எழுத்தாளர்களைப் போல் தானும் புகழ்பெற வேண்டும் என்பதே ஆரவியின் குறிக்கோள்! இந்த பதிப்பகமே இவள் எழுதிய நான்கு நாவல்களை வெளியிட்டுள்ளது. அதில் இரண்டு மறுபதிப்பிற்கு சென்றுள்ளன. தற்போதும் இவளெழுதிய 'சீதையின் பூக்காடு' என்ற புத்தகம் மறுபதிப்பிற்கு செல்லவிருக்கிறது. அதற்கு பதிப்பகத்தாரின் பாராட்டைப் பெற்றுக்கொண்டும், மற்றுமொரு கதைய...