Skip to main content
Welcome to ShriVijay Writings🎉 - a world of suspense, love, romance, family bonds, thrilling crime, friendship, mystery, emotions, adventure, revenge and twists & turns. Dive in and enjoy every twist! 📖✨

ஸ்கார்பியோ காதல் - 35 (Pre-final)

ஸ்கார்பியோ காதல்

அத்தியாயம் 35


ஞாயிற்றுக்கிழமை!

பெண் வீட்டுக்காரர்கள் வருகிறார்கள் என்று எந்த ஆர்பாட்டமும் இல்லாமல், அவன் மகளின் அடையாளங்கள் உட்பட வழமை போலவே இருந்தது அஸ்வத்தின் வீடு! விடயத்தைச் சொல்லி அன்றாட பணி முடிந்த பின்னும் சாந்தியை இருக்கச் சொல்லியிருந்தான். 

அஸ்வத் திருமணம் செய்துகொள்ள போவதில் சாந்திக்கு அப்படியோர் நிறைவு! தன் மகனே வாழ்க்கையின் அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்ததைப் போல் அகமகிழ்ந்து போனார்.

அஸ்வத் வந்தவர்களைக் கரம் கூப்பி அழைத்து அமர வைத்தான். ஒட்டுமொத்த பூக்களின் மலர்ச்சியையும் ஏந்தியிருந்தது, வெளியே நின்ற ஸ்கார்பியோவை வருடியபடி வந்த அம்ருவின் முகம்! அவளைப் பார்த்தவுடன் இவனுள்ளமும் ஓர் பூங்கொத்தைப் போல் மலர்ந்தது.

சாந்தி ஹரிஷைக் கண்டு தெரிந்தவன் எனும் முறையில் ஆர்பாட்டமாகப் பேசிட, அவனைக் கேள்வியாய் ஏறிட்டார் நடராஜன்.

“விசாரிக்கும்போது அஸ்வத் ஃப்ரெண்ட்ன்னு சொல்லி இங்கே வந்தேன்னு சொன்னேன்லப்பா?” என்று அவருக்கு மட்டும் கேட்கும்படியாகச் சொல்ல, தலையசைத்துக் கொண்டார் அவர்.

அஸ்வத்திற்கு இருபத்தைந்து வயதிலேயே முதல் திருமணம் முடிந்தது என்றும், தற்போது அவனுக்கு இருபத்தொன்பது வயது என்றும் ஹரிஷ் சொல்லியிருந்தான். ஹரிஷை விட ஆறேழு மாதங்கள் இளையவன் என்று தெரிந்தாலும் அம்பிகாவின் மனதில் மகளை இரண்டாம் தாரமாகத் தர வேண்டுமா என்ற அலைகழிப்பு இருக்கவே செய்தது. 

ஆனால் இப்போது அவனை நேரில் பார்த்ததும், ‘இவனை ஏன் வேண்டாம்னு விட்டுட்டு போனா?’ என்று ரேவதியை நினைத்து கவலைப்பட்டார்.

நடராஜனுக்குமே அஸ்வத்தைக் கண்டதும் தோற்றம் வரையில் திருப்தி! சொந்த வீடுதான் என்று ஹரிஷ் சொல்லியிருந்தான். அதனால் வீட்டின் அளவையும் அது இருக்கும் பகுதியையும் வைத்து தங்களைப் போல் உயர் மத்திய தரம் என்று கணித்தார்.

சென்ற வாரத்தில் ஓர்நாள் வந்து அஸ்வத்திற்கு அம்ருவைக் கொடுக்கலாம் என்று சொன்ன ஹரிஷைக் கண்டு புன்னகைத்தார். “தெரியும். நீயாவது உன் தங்கச்சி விருப்பத்தை நிறைவேத்தாம இருக்கறதாவது!”

"அப்போ உங்களுக்கு ஓகேவா’ப்பா?" 

“ம்ஹூம். எனக்கும் உங்கம்மா மாதிரி அம்முவை ரெண்டாவதா கொடுக்கறது வருத்தம்தான்! ஆனா அவ என் முன்னாடியே உங்கம்மா கிட்ட ‘என்னோட அஸ்வத்’ன்னு எவ்ளோ தைரியமா, ஸ்ட்ராங்கா பேசினா பார்த்தியா? அப்போவே அந்தப் பையன் யாருன்னு பார்க்கணும்னு தோணுச்சு.”

ஹரிஷ் அஸ்வத்தின் வயது, பணி, சம்பளம் பற்றி சொல்ல, அவனைத் தடுத்த நடராஜன், “நீ பையனைப் பத்தி, அவன் குணம் எல்லாம் எப்டின்னு விசாரிச்சிருப்பன்னு தெரியும். ஆனா எனக்கு அவனோட முதல் மனைவியோட பேரண்ட்ஸை மட்டும் பார்க்கணும் ஹரி.” என்றார்.

பார்த்தார்கள். ரேவதியின் அப்பா தன் மகள் ஒரே நாளில் அஸ்வத்தை விட்டு வந்துவிட்டதாகவும், பின்னர் குழந்தைப் பெற்று இரத்த வாடையுடன் அஸ்வத்திடம் தந்துவிட்டு, வேறொருவனுடன் சென்று விட்டதாகவும் சொல்லி, அவமானம் தாங்காமல் நின்ற நாட்களை நினைத்து வெதும்பினார்.

“அவன் கூடயாவது ஒழுங்கா வாழ்ந்தாளா? அதுவும் இல்ல. போன மூணு மாசத்துலேயே வயித்துல பிள்ளையோட திரும்பி வந்துட்டா… நான் வீட்டுக்குள்ள சேர்க்காம துரத்திவிட்டுட்டேன். அப்பவும் மாப்பிள்ளை தான் காசைக் கொட்டி பிரசவம் பார்த்து அனுப்பி வச்சார். எங்களுக்கு அவர் அளவுக்கு இரக்க குணம் கிடையாது சார். அவ செத்தா கூட கவலையில்லங்கறேன்.”

கோபவேசமாகப் பேசினார் ரேவதியின் அப்பா.

“வேற யாரும்னா என் பொண்ணைப் பத்தி நானே இவ்ளோ உடைச்சு பேசமாட்டேன் சார். எங்க மாப்பிள்ளைக்கு ஒரு நல்ல இடம் அமையணும். அப்போதான் எங்க குடும்பத்துக்கு பாவ விமோசனம் கிடைக்கும். அதனாலதான் இவ்ளோ சொல்றேன். அந்த *** ஓடிப் போனதும் என்னோட ரெண்டாவது பொண்ணைக் கட்டிக்கச் சொல்லி எவ்வளவோ கெஞ்சினேன். முடியவே முடியாதுன்னு மனுஷன் கடைசி வரை பச்சைக் குழந்தையை வச்சிக்கிட்டு தனியாவே நின்னுட்டார். அவ வயித்துல பிறந்த பாவமோ என்னவோ அந்தக் குழந்தையும் உடம்பு சரியில்லாம இறந்து போச்சு. இப்பவாவது அவர் வாழ்க்கையைப் பார்க்க அவருக்கு மனசு வந்ததே… சந்தோஷம் சார்… தாராளமா நீங்க உங்க பொண்ணைக் கொடுக்கலாம்.”

நடராஜன் தன் மனதில் தோன்றிய நெருடல்களை எல்லாம் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொண்டார். எல்லாவற்றிலும் அஸ்வத் தேறினான். 

பின்னர் பேச்சுவார்த்தை அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்தது. ஹரிஷ் ஸ்வேதாவைக் காட்டி காதல் என்று வந்தபோதே நடராஜன் சாதி, மதம் பற்றி ஆராயவில்லை. அதனால் மகளுக்கும் அஸ்வத்தின் ரிஷிமூலம் குறித்து அலச முற்படவில்லை.

தன் நினைவுகளிலிருந்து கலைந்தவர் சாந்தி தந்த சிற்றுண்டிகளை எடுத்துக் கொண்டு நேரடியாக விடயத்திற்கு வந்தார். “மஹிந்திரால வேலை செய்றீங்கன்னு ஹரிஷ் சொன்னான்.”

“ஆமா சர், நாலு வருஷமா அங்கேதான் இருக்கேன். இனியும் அங்கேதான் அச்சீவ் பண்ற ஐடியா!”

குழந்தையைப் பற்றி பேசினால் அஸ்வத் அப்செட்டாகி விடுவான் என்று ஏற்கனவே மகன் சொல்லியிருந்ததால், ஒரு பெண்ணின் தகப்பனாக அஸ்வத்தின் துயரம் புரிந்தவர் அதைக் குறித்து பேசவில்லை. கல்யாணத்திற்கு பின் காதல் என்று வேறொருவனுடன் சென்ற ரேவதியைப் பற்றி பேசவே பிடிக்கவில்லை. அதனால் அஸ்வத்தின் கடந்த காலத்தை விடுத்து நடப்பைப் பேசினார்.

“ம்ம்! ஆனா அம்ரு இன்னும் படிச்சு முடிக்கல… நாங்க அவளுக்கு இன்னும் ரெண்டு வருஷத்துக்கப்புறம் தான் கல்யாணம் பண்ணனும்னு நினைச்சிருந்தோம்…”

“இப்பவும் அது மாற வேணாம் சர். படிக்கட்டும். மூணு வருஷம் போகட்டும். நான் வெய்ட் பண்றேன்.”

“இல்லயில்ல… அம்ரு காதல் அது இதுன்னு இவ்ளோ ஆனதுக்கப்புறம் ரொம்பத் தள்ளிப் போட வேண்டாம்னு பார்க்கறேன்.”

“உங்க கவலை புரியுது சர். ஆனா அதுக்கு அவசியமில்லை. ஃபர்ஸ்ட் ஷீ’ஸ் மை பெஸ்ட் ஃப்ரெண்ட் அண்ட் மை வெல்-விஷர். அண்ட் ஐ’ம் தி ஸேம் டூ ஹெர்! ஸோ கல்யாணம் பண்ணிக்கிட்டு படிக்கற பிஸினஸெல்லாம் வேணாம். முதல்ல படிச்சு முடிச்சு கெரியர்ல ஸ்டாபிள் ஆகட்டும்.”

அம்பிகா மகளை அதிருப்தியுடன் பார்த்தவாறு, “இந்தக் காலத்து பிள்ளைங்கள எங்கே நம்ப முடியுது? சின்னப்பிள்ளைன்னு நினைச்சிட்டு இருந்தோம். திடுதிப்புன்னு காதல்ன்னு வந்து நிற்கறா…” என்றிட,

மென்னகைப் புரிந்தான் அஸ்வத். “நீங்க எங்களை நினைச்சு பயப்படறீங்கன்னு நினைக்கறேன். ப்ளீஸ்… நாங்க எங்கேயும் தனியா மீட் பண்ற ஐடியாவுல இல்ல. அழகான ஒரு ஃபேமிலி பாண்ட்! அதுதான் எனக்கு வேணும். வீட்டுக்கு வர்றதுன்னா நீங்க எல்லாருமே அவளோட வாங்க. எனக்கு பார்க்கணும்னு தோணுச்சுன்னா நீங்க இருக்கும்போது அங்கே வந்து பார்த்துக்கறேன். இதுக்காகலாம் உடனே கல்யாணம் பண்ணிக்கணும்னு அவசியமில்ல.

மோர்ஓவர் எனக்கும் அவ கெரியர்ல பொறுப்பு இருக்கறதா நம்பறேன். படிப்பு மட்டுமில்லாம, மேடம் ரிசர்ச் டீம்ல வேற இருக்காங்க. அதுவும் சக்சஸ் ஆகட்டுமே! அதுக்கப்புறம் மேரேஜ் டேட் ஃபிக்ஸ் பண்ணிக்கலாம்.” பொறுப்புடன் அதி உத்தமனாகப் பேசியவனைக் கண்டு பற்களை நறநறத்தாள் அம்ருதா.

அவள் காதில் புகை வந்தது. “கடைசி வரைக்கும் மைலாஞ்சி இல்ல; அம்மாஞ்சி லவ் தான்!” என்று அருகேயிருந்த ஸ்வேதாவிடம் கிசுகிசுக்க,

சிரிக்காமல் இருக்க முயன்ற ஸ்வேதா, “ஸ்கார்பியோ ஸ்பீடுக்கு காதலும் போகணும்னா எப்டி?” என்றிட, சிணுங்கினாள் அம்ருதா.

ஆனால் மற்றவர்களுக்கு அவன் தெளிவையும் பொறுப்புணர்வையும் கண்டு முழு திருப்தி! மகனும் மகளும் சரியாகவே தேர்ந்தெடுத்திருப்பதாகத் தோன்றியது.

அஸ்வத்தின் பேச்சில் ஹரிஷின் மனம் கூட சமாதானம் அடைந்துவிட்டது. ‘இதெல்லாம் தெளிவுதான்! என்கிட்ட மட்டும்தான் நக்கலடிப்பான்.’ என்று உள்ளூர பொறுமினான்.

அவர்கள் சம்மதம் தெரிந்த பின்னர், சாந்தியிடம் கண்ணைக் காட்ட அவர் முத்து முத்தாய்க் கட்டி வைத்த குண்டு மல்லியை எடுத்து வந்தார்.

அஸ்வத், “நீங்களே வச்சு விடுங்க!" என்றிட,

அவர் தயங்கி அம்பிகாவின் முகம் பார்த்தார். அதற்குள் அம்ருதா எழுந்து வந்து தலையிலிருந்து ‘ஹேர்பின்’களை எடுத்து சாந்தியின் கையில் திணித்தபடி, “உங்க அவியல் என் ஃபேவரிட் தெரியுமா?” என்று திரும்பி நிற்க, 

சாந்தியைக் கையில் பிடிக்க முடியவில்லை. சாமியைத் தொழுதுவிட்டு அம்ருதாவின் தலையில் பூச்சூட்டினார்.

மேலும் சிறிதுநேரம் பேசியிருந்துவிட்டு அவர்கள் விடைபெறும் போது சாந்தி முதல் ஆளாக அவர்கள் பின்னோடு சென்றார். “மூணு வருசம் அதிகம்தான். ஆனா அடிக்கடி வந்து போங்கய்யா… தம்பி தனியா உட்கார்ந்து அவரு புள்ள போட்டாவையே பார்த்துட்டு இருப்பார். பார்க்கற நமக்கு மனசையே பிரட்டிரும்ங்க…” சொல்லும்போதே அவர் கண்கள் கலங்கிவிட்டது.

சாதாரண வேலையாள் அவர் அவனுக்காக இத்துணை தூரம் வருந்துவதில், இங்கேயும் அஸ்வத்தின் கருணையும் மேன்மையும் வெளிப்பட்டது. சாந்திக்கு சாதகமாக பதில் சொன்ன அம்பிகாவிற்கு மனம் நிறைந்து போனது.

தனக்காகவே வெளியே செல்லாமல் பின்தங்கி நிற்கும் அம்ருதாவின் அருகே வந்த அஸ்வத், “எப்டியோ சொன்ன மாதிரியே என் ஹெல்பரை உங்க ஹெல்பரா மாத்திட்டீங்க டாக்டர்!” என்றிட,

‘உம்’மென்றிருந்தாள் அவள். “மூணு வருஷம் கழிச்சுதானே?” 

“கோபமா அம்முவுக்கு?”

“ஆமா! இப்போவே கட்டிக்கலாம் அஸ்வத்!” சிணுங்கலுடன் அவன் தோள் சாய, அள்ளி அணைத்து நெற்றி முத்தம் வைத்தான்.

“சாரி கட்டி, பூ வச்சு செம அழகா இருக்க தெரியுமா?” என்று காதினோரம் சுருண்டிருந்த கூந்தலில் வாசம் பிடித்தவன், குரலைச் செருமியபடி அவளைத் தள்ளி நிறுத்தினான்.

“எனக்கும் இப்போவே எல்லாம் வேணும்னு ஆசைதான்! நான் எப்பவும் உன்னை ரீப்ளேஸ்மெண்ட்டா நினைக்கல. நீ லவ் சொல்றதுக்கு முன்னாடியே என் மனசு எனக்கு புரிஞ்சது. ஆனா அப்போ கல்யாணம் பண்ணிக்கற ஐடியா இல்ல. இப்போ… இட்’ஸ் அ டர்ன்அரௌண்ட்!”

“அப்புறமென்ன?”

“அவர் லவ் இஸ் மோர் தான் மேரேஜ் அண்ட் மேக்கிங் அ ஃபேமிலி அம்மு. வாழ்க்கை இன்னும் நமக்கு நிறைய வச்சிருக்கும். ட்ரீம், ஆம்பிஷன், ரெஸ்பான்ஸிபிலிடின்னு எல்லாத்தையும் தட்டிக்கழிச்சுட்டு கல்யாணத்துக்கு ஃபர்ஸ்ட் ப்ரையாரிட்டி தர்றது சரியில்ல. 

பெரியவங்க நம்ம விருப்பத்தை மதிக்கறாங்க. நாமளும் அவங்க விருப்பத்தை மதிச்சு அதை நிறைவேத்தணும். அவங்க நம்பிக்கையைக் காப்பாத்தணும். அது நம்ம கடமை! நம்ம லவ் சுயநலமில்லாம ரெஸ்பெக்ட், நம்பிக்கை, பேஷன், க்ரோத், சப்போர்ட், ஸ்டாபிளிடி (நிலைத்தன்மை), மெச்சூரிட்டின்னு எல்லா விதத்திலயும் முழுமையானதா இருக்கணும்னு ஆசைப்படறேன். அப்போதான் நம்ம லவ் ஜெயிச்சதா அர்த்தம் அம்மு!” 

கைகளை மார்பின் குறுக்கே கட்டியிருந்தவன் அவளை அன்புடன் பார்த்தவாறு பேசிக் கொண்டிருந்தான். வாழ்க்கையில் ஒருமுறை தவறிழைத்து, மனதளவில் பெரிதாக அடிபட்டதில் நிரம்பப் பக்குவப்பட்டிருப்பதாகத் தெரிந்தது. அவளையும் தட்டித்தட்டி செதுக்குமிவனோடு ஒரு வாழ்க்கை என்ற எண்ணமே இனித்தது. 

அவனைக் காதல் பொங்க பார்த்தவளுக்கு குதிங்கால் உயர்த்தியும் நிமிர்ந்து நின்றிருந்தவனின் தாடையின் கீழ் பகுதிதான் எட்டியது. 

திடுக்கிட்டு சில்லென சிலிர்த்த தாடையைத் தடவியவன் எட்டி நகர்ந்து வந்து வெளியே பார்க்க, மகிழுந்தில் ஏறிக்கொண்டிருந்தாள் அம்ருதா.

சிரித்துக்கொண்டான்.
     
                   *******

நாட்கள் நகர, சொன்னதைப் போலவே அஸ்வத் அம்ருதாவைத் தனியிடங்களில் சந்திக்கவில்லை. அவளும் அவனின் தனிமையை மனதில்கொண்டும் தன் வீட்டினருடன் பழகச் செய்யும் வாய்ப்பாகவும் எண்ணி, ஒவ்வொரு ஞாயிறன்றும் அவனை வீட்டிற்கு அழைத்தாள். சில பொழுது ஒப்புக்கொள்வான். சில பொழுது தயங்கி நிற்பான்.

அப்போதெல்லாம், “ம்மா, அஸ்வத் இங்கே வர யோசிக்கறார்ம்மா!” என்று சிணுங்கும் மகளிடம்,

“நம்ம வீட்டுக்கு வர்றதுக்கு எதுக்கு தயங்கணும்? கால் போட்டு கொடு, நான் பேசறேன்.” எனும் அம்பிகாவும்,

“அடுத்த வாரம் நாம போய் பார்த்துட்டு வருவோம். அப்போதான் அவருக்கும் தயக்கமிருக்காது.” எனும் நடராஜனும், சிறிதுசிறிதாக அஸ்வத்தின் தயக்கத்தைப் போக்கினார்கள்.

ஹரிஷ் வெளிப்பார்வைக்கு முறுக்கிக் கொண்டாலும் வீட்டிற்கு வருபவனை நல்ல முறையில் கவனித்தான். ஸ்வேதா தோழமையுடன், சகோதரத்துவத்துடனும் பழகினாள். அத்துடன் அவள் மனதில் அஸ்வத்தைப் பார்த்து ஹரிஷ் சொன்ன வார்த்தை நெருடலாய்த் தங்கிவிட்டதால், இது உன் குடும்பம் எனும்விதமாக உரிமையுடனும் பேசினாள்.

அந்த வருடம் அஸ்வத்தின் விடுமுறை தினங்களின் பொலிவு கூடியது.

“ஹரி, மஷ்ரூம் கிரேவி மாப்பிள்ளைக்காக செஞ்சேன். நீ அவர் ஆஃபீஸ் பக்கம் போனா குடுத்திடறியா?” என்ற அம்பிகா பெரிய கேரியரைக் கொண்டு வந்து நீட்ட,

அதனை வாங்கி தன் தலை உயரத்திற்கு தூக்கிக் காண்பித்து, அம்ருதாவிடம், “மஷ்ரூம் கிரேவியாம்!” என்று உதட்டைப் பிதுக்கினான் ஹரிஷ்.

அவளும் அவ்வாறே செய்தாள். “எனக்கு எத்தனை நாள் காலைல வெறும் காய்ஞ்ச தோசையைத் தந்திருக்காங்க தெரியுமா?” 

“எனக்கு ஒரு நாளாவது இவ்ளோ பெரிய கேரியர்ல வெரைட்டி மீல்ஸ் தந்திருக்காளா?”

“இந்த கேரியர் நம்ம வீட்ல இருக்குதுன்னே எனக்கு இப்போதான்’ண்ணா தெரியுது.”

தம் மக்களின் புகைச்சலைப் பார்த்த நடராஜன், “இல்லன்னா மட்டும் ரெண்டு பேரும் சாப்பிட்டதே இல்லயா? ஏதோ வெளில சாப்பிடற மனுஷனுக்கு செஞ்சு கொடுத்திருக்கா உங்கம்மா! அதுல போய் பொறாமைபட்டுக்கிட்டு…” என்றதில், இருவரும் மீண்டும் உதட்டைப் பிதுக்கி கொண்டார்கள்.

இப்படியாக அம்பிகாவும் நடராஜனும் அஸ்வத்தின் ஏக்கங்கள் புரிந்து அவனைத் தங்கள் மகன் போலவே நடத்தினார்கள். ஹரிஷ் சில நேரம் பொறுமுவான். பல நேரங்களில் சிரித்துக் கடப்பான். 

இனியெப்போதும் அம்ருதா தன்னோடிருப்பாள் என்று அஸ்வத்தின் ஆழ்மனம் நம்ப ஆரம்பித்த பிறகு, ஹரிஷின் ‘அம்மு’ என்றழைப்பு அவனைப் பாதிக்கவில்லை. 

அவனை வெறுப்பேற்றவே ஹரிஷ், “அம்முக்குட்டி! அம்முக்குட்டி!” என ஏலமிட்டாலும், பொறாமையற்று அவர்களின் பிணைப்பையும் புரிந்துகொண்டவன் கலங்காதிருந்தான்.

“உன் ஆளுக்கு தெளிஞ்சிடுச்சு போல! இனி இதை வச்சு வெறுப்பேத்த முடியாதா?” என்று தன் காதைக் கடிக்கும் அண்ணனை முறைத்தாள் அம்ருதா.

நடராஜன், அம்பிகா, ஸ்வேதா என ஒரு குடும்ப அமைப்பில் அவனுக்கு கிடைக்கும் முக்கியத்துவமும் வாஞ்சையும் அஸ்வத்தின் மனத்தை பல நூறு மடங்கு அமைதிபடுத்தியது.

Sometimes, Scorpio enjoys the ride🚗🌸…



Comments

Popular Posts 💫

ஸ்கார்பியோ காதல் 🚗 💌

  கதையின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன🎉 கதை முன்னோட்டம்   ஹிக்கின் பாதம்ஸை அலசி விட்டு, ஐபாகோவில் ஐக்கியமாகி, பின்னர் ஊருக்கு செல்லப் பெட்டியைக் கட்டினார்கள். மகிழுந்தில் ஸ்வேதாவை முன்னே ஹரிஷின் அருகே ஏறிக்கொள்ள சொன்ன அம்ருவை மறுத்தவள் ஹரிஷைப் பார்த்தாள். ‘உங்கள் பாடு! எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.’ என்பதாக ஓர் சிரிப்புடன் அமைதியாக இருந்துக்கொண்டான் அவன். அம்ருவை பின்னால் தனியே விட்டுவிட்டு, தான் மட்டும் அவனருகே அமர்வது அதிகப்படியாக தெரிந்ததால், “நானும் பின்னாடி உன் கூடவே உட்காருறேன் அம்ரு.” என்று பின்னால் அமர்ந்துவிட்டு ஹரிஷைப் பார்க்க, அவள் பார்வைக்காகவே காத்திருந்தாற் போல் ஒற்றைக் கண் சிமிட்டி அவளைச் சிவக்க வைத்துவிட்டு மகிழுந்தை எடுத்தான். ஸ்வேதா ஓசூர் அருகே இருக்கும் கிருஷ்ணகிரியில் உள்ள அனுமன் தீர்த்தம் செல்ல வேண்டும் என்று விரும்பியதால், விரைவாகக் கோவில் சென்று அனுமனைத் தரிசித்தனர். அம்ரு ஏனோ சொல்ல தெரியாத உணர்வில் அந்த அஞ்சுதனைப் பார்த்திருந்தாள். “அம்ரு, கிளம்பலாம் டைமாச்சு!” என்ற ஹரிஷ் ஸ்வேதாவின் காதில் கிசுகிசுத்தான். “நான் அனுமன் பக்தனில்ல பேபி? இ...

சீதையின் பூக்காடு🌻🌺 - தொகுப்பு.

  கதையின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன🔗🔗  கதை முன்னோட்டம். பொறுமை இழந்தவன், "ஹலோ! கேன் யூ ப்ளீஸ் டெல் மீ, வாட்'ஸ் யுவர் ப்ராப்ளம்?" எனக் கேட்டான். "யாரோ ப்ளே பண்றா. நேக்கு கொஞ்சம் முன்னாடி கால் வந்தது. ஊருக்கு கிளம்பின எங்க பாட்டிக்கு பாதி வழியிலேயே திடீர்னு ஃபிட்ஸ் வந்துட்டதாகவும், இப்போதைக்கு பக்கத்துல இருக்க அவா ஆத்துல வச்சு ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணிருக்கறதாகவும், உடனே வந்தா ஹாஸ்பிடல் அழைச்சிண்டு போகலாம்னும் சொல்லி இந்த அட்ரஸ்க்கு வர சொன்னா." "ஓ!" "ஆனா, இப்ப அம்மா பேசறத பார்த்தா எல்லாரும் நல்லபடியா ஊருக்கு போய்ட்டா போலயே... அப்ப நேக்கு கால் பண்ணது யாரா இருக்கும்?" "எனக்கு கால் பண்ணவன் தான் உங்களுக்கும் பண்ணிருக்கணும். ஆமா... வீட்ல உள்ளவங்க ஊருக்கு கிளம்பி எவ்ளோ நேரம் ஆச்சு?" "மூணரை மணி நேரம் இருக்கும். ஏன் கேக்கறேள்?" "நீங்க இங்க வர்றதுக்கு மினிமம் ஆஃப் ஆன் ஆர்-னு வச்சிக்கிட்டா கூட… ரொம்ப தூரம் இல்லனா, கிளம்பி மூணு மணி நேரம் ஆனவங்க ஊருக்கே போய் சேர்ந்திருப்பாங்களே… இங்க பக்கத்துல எப்டி இவ்ளோ நேரம் இருப்பாங்...

சீதையின் பூக்காடு - 1

  அத்தியாயம் 1 வெள்ளிக்கிழமை! மாலை நான்கு மணி அளவில் மழை வரும் போல் வானம் கருமையைப் பூசிக் கொண்டிருந்தது. அந்த பதிப்பகத்தில் தனது புத்தகத்தை வெளியிடுவது பற்றி பேசிக்கொண்டிருந்தாள் ஆரவி. ஆரவி! இருபத்துமூன்று வயது. பிபிஎம் படித்தவள். படித்ததற்கேற்ப ஓர் சிறிய நிறுவனத்தில் வேலை செய்தவள். ஆம்! செய்தவள். மேற்கொண்டு படிக்க விரும்பாமலும், வேலை செய்த நிறுவனம் வேறு கைக்கு மாறியதாலும் தற்போது வேறு வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறாள். தனக்கு விருப்பமான எழுத்துலகில் அடியெடுத்து வைத்தவள் ஆறு நாவல்களும், இருபது சிறுகதைகளும் எழுதியுள்ளாள். அவள் எழுதி பத்திரிக்கைகளில் பிரசுரமானதில் ஒன்பது சிறுகதைகள் பரிசுகள் பெற்றவை! தரமான கதைகளை எழுதி அனுராதா ரமணன், சிவசங்கரி போன்ற எழுத்தாளர்களைப் போல் தானும் புகழ்பெற வேண்டும் என்பதே ஆரவியின் குறிக்கோள்! இந்த பதிப்பகமே இவள் எழுதிய நான்கு நாவல்களை வெளியிட்டுள்ளது. அதில் இரண்டு மறுபதிப்பிற்கு சென்றுள்ளன. தற்போதும் இவளெழுதிய 'சீதையின் பூக்காடு' என்ற புத்தகம் மறுபதிப்பிற்கு செல்லவிருக்கிறது. அதற்கு பதிப்பகத்தாரின் பாராட்டைப் பெற்றுக்கொண்டும், மற்றுமொரு கதைய...