Skip to main content
Welcome to ShriVijay Writings🎉 - a world of suspense, love, romance, family bonds, thrilling crime, friendship, mystery, emotions, adventure, revenge and twists & turns. Dive in and enjoy every twist! 📖✨

ஸ்கார்பியோ காதல் - 34.2

ஸ்கார்பியோ காதல்



அத்தியாயம் 34.2

இரண்டு நாட்கள் சென்ற பிறகு,

நிறுவனத்தில் வாடிக்கையாளர்களிடம் மும்முரமாகப் பேசிக்கொண்டிருந்த அஸ்வத்தை அலைபேசி அழைத்திட, திரையைப் பார்த்தவன் ஹரிஷின் அழைப்பைக் கண்டு, ‘Meeting! Call u later.’ என்ற குறுஞ்செய்தியொன்றைத் தட்டிவிட்டான்.

சிறிது நேரத்தில் அந்தச் சந்திப்பு முடிந்ததும், அஸ்வத்தின் மேலதிகாரி அழைத்தார். “அஸ்வத், இன்னிக்கு டெலிவரி போக வேண்டிய ஒரு மாரஃஸ்ஸோவுக்கு ரிஜிஸ்ட்ரேஷன் சைட்ல டாக்யூமென்ட்ஸ் மிஸ்மேட்ச் ஆகுது. க்ளையண்ட் ஆல்ரெடி ஏஜிடேட்டட்! கவனிச்சியா நீ?”  

“ஐ’ம் ஆன் இட், சர்! இன்டர்னெல் டீம் கிட்ட பேசிட்டேன். ஆர்டிஓலயும் பேசிருக்கேன். க்ளாரிஃபை பண்ண கொஞ்சம் டைமெடுக்கும் போலருக்குது. பட் இட்’ஸ் அண்டர் கன்ட்ரோல் சர்!”

“உன்னைத்தான்பா மலை போல நம்பியிருக்கேன். அந்தாளு ஏதாவது சொல்லிட்டான்னா, தேவையில்லாம நம்ம பேரு ஹெட் ஆஃபீஸ்ல அடிபடும்.”

“அவ்ளோ தூரம் போகாது சர். க்ளையண்ட் கிட்ட நான் நேரா பேசுறேன். ட்ரான்ஸ்பரண்டா ஹேண்டில் பண்ணலாம்.”

பேசி வைத்தப் பின்னர் இண்டர்காம் அழைத்தது. “சர் உங்களைப் பார்க்க தேவான்னு ஒருத்தர் வந்திருக்கார்.”

சட்டென சிசிடிவி திரையைப் பார்த்தவன் தேவா சாதாரண உடையில் வந்திருப்பதையும் உடன் ஹரிஷ் இருப்பதையும் கண்டுவிட்டு, “அனுப்புங்க!” என்றான்.

உள்ளே வந்தவர்களை அலட்டலின்றி வரவேற்றான். 

அவர்கள் அமர்ந்ததும் வாடிக்கையாளர்களிடம் பேசும் தோரணையில், “எஸ்!” என்றிட,

“என்ன ப்ரோ, கடைசில சிக்கிட்டீங்க போல?” என கேலியாகக் கேட்டான் தேவா.

அடியும் வாலும் புரியாமல் இவன் புருவம் நெரித்து பார்க்க, 

தேவா புன்னகைத்தான். “அம்ரு கிட்ட; அவளோட லூசு குடும்பத்துக்கிட்ட சிக்கிட்டீங்கன்னு சொன்னேன். வேற என்ன நினைச்சீங்க?” 

இதுவரை பார்த்திராத குறும்புடன் பேசிய தேவாவைக் கண்டவன், எதிர்பார்ப்பை அடக்கிக்கொண்டு ஹரிஷைப் பார்த்தான். லூசுக் குடும்பம் என்றதற்காக தேவாவை உக்கிரமாக முறைத்துக் கொண்டிருந்தான் ஹரிஷ்.

“நான் எதுவும் நினைக்கலயே! ஏன்னா வேற எங்கேயும் சிக்க மாட்டேன்னு எனக்குத் தெரியும்.” - அஸ்வத்.

“ஓவர் கான்ஃபிடென்ட் உடம்புக்காகாது ப்ரோ!”

“கான்ஃபிடென்ட்டா வேலையை முடிச்சப்புறம் தான் உடம்பும் மனசும் ஃப்ரெஷா இருக்கும் ப்ரோ!”

சூசகத்துடன் சரிக்கு சரியாகப் பேசும் அஸ்வத்தைக் கடுப்புடன் ஏறிட்டான் ஹரிஷ். “ஒழுக்கமா இருக்கறதா இருந்தா ‘என் அம்முவைத்’ தர்றதைப் பத்தி யோசிப்பேன்.”

“என் ஒழுக்கத்தைப் பத்தி ‘என் அம்முவுக்கு’ மட்டும் தெரிஞ்சா போதும்.”

“அப்போ அவகிட்ட சொல்லுங்களேன்… தன்வீரை அடிச்சே கொன்னதை; தாரகேஷ் அப்பாவை ‘தார்’ வச்சு அடிச்சு தூக்கினதை!”

“அத்தான்! ஏன் இவ்ளோ டென்ஷன் ஆகறீங்க?”

குறுஞ்சிரிப்புடன் சொன்னான் அஸ்வத். “என்னைப் பார்த்தாலே டென்ஷன் ஆகிடுவார். ஒரு ஹிப்னா தெரபி போனா சரியாகிடும்.”

பட்டென்று மேசையில் தட்டிக்கொண்டு எழுந்தவனைக் கண்டு தேவாவே கலவரமாகிப் போனான். “ஏன் ப்ரோ ஏன்? அவரே இப்போ தான் இறங்கி வந்திருக்கார். அடக்கி வாசிங்க ப்ரோ!”

அப்போதும் அடங்காமல், “அடக்கி வாசிக்க நானென்ன…” என்று ஏதோ சொல்ல வந்தவனை முடிக்கவிடாமல்,

“வர்ற பத்தாம் தேதி அம்மாவும் அப்பாவும் அவர் வீட்டுக்கு வர்றாங்க. சாருக்கு டைம் ஒத்துவருமான்னு கேட்டு சொல்லுடா!” என்று ஓங்கிய குரலில் பேசிய ஹரிஷ் விருட்டென திரும்பி போயே போய்விட்டான்.

அப்போதும் அஸ்வத் தன்னிலை மாறாமல் அமர்ந்திருக்க, 

கண்மூடி திறந்தான் தேவா. “அவர் பயப்படறதுல அர்த்தம் இருக்குது ப்ரோ! தன்வீர், எம்எல்ஏ கேஸ் ரெண்டு ஸ்பாட்லயும் போலீஸ்க்கு எந்த எவிடென்ஸூம் கிடைக்கல. ஆனா எங்க டீமோட சந்தேக லிஸ்ட்ல நீங்க வந்துட்டீங்க. காட்டி கொடுத்தது என்ன தெரியுமா? உங்களோட டிரைவிங் ஸ்கில்! சிசிடிவில சிக்காம க்ளீனா எஸ்கேப் ஆகிருக்கீங்க! ஐவிட்னஸ் தார்’னு சொன்னதுதான் ஒரே க்ளூ.

அதை நூல் பிடிச்சா… நீங்க வேலை செய்யற கம்பெனி அண்ட் தன்வீர் டெத் ஸ்பாட்! மோர்ஓவர் அந்த டிரக்ஸ் கேஸ்ல விக்டிம் நீங்க! ஸோ நீங்க ஏன் இதைச் செஞ்சிருக்கக் கூடாதுன்னு யோசிக்கறாங்க! போலீஸ் ஒண்ணும் முட்டாளில்ல சர்! சின்ன லீட் கிடைச்சா கூட மொத்தத்தையும் தோண்டிடுவோம்.”

"பயமுறுத்தி பார்க்கறீங்களா தேவா?”

மறுத்துத் தலையசைத்தவன், "ஐ வார்ன் யூ, ப்ரோ! தார்’ஐ நேக்கா பிரிச்சிட்டீங்க போல… அந்த சமயம் நடந்த பொலிட்டிகல் கான்ஃபிலிக்ட் வேற உங்களுக்கு சாதகமாகிடுச்சு. ஆனா இதுவே தொடராது. எல்லா நேரமும் உங்களுக்கு சாதகமாவே இருக்காதுன்னு சொல்றேன்.” என்று, ‘நான் உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்’ எனும் விதமாய்த் தன் கண்ணெதிரே இரு விரல்கள் வைத்து அவனைக் காண்பித்தான்.

அஸ்வத்திடம் அதே மென்னகை! “ஓகே இன்ஸ்பெக்டர்!”

“உங்க சிரிப்பே வில்லங்கமா இருக்குது. சொந்தக்காரரா வேற ஆகப் போறீங்க… அந்த நல்லெண்ணத்துல தான் சொல்றேன். உங்கப் பிரச்சினை தான் முடிஞ்சிடுச்சே? இனி சந்தோஷமா அம்ருவோட லைஃப் லீட் பண்ணிட்டு போங்க!”

“என் பிரச்சினை முடிஞ்சிடுச்சா?” அழகாய் புருவம் உயர்த்தினான். “**** பார்மா கம்பெனிதான் இந்த வருஷம் மார்கெட் லீடரா இருக்கும்னு ஒரு பேச்சு அடிபடுதே… ஆமாவா இன்ஸ்பெக்டர்?”

அதிர்ச்சியுடன் எழுந்து நின்றான் தேவா. இந்நேரம் வரை அவன் சிறையிலிருக்கும் பத்ரிநாத்தை தான் குறிவைத்து பேசுகிறான் என்று நினைத்தான். அவனுக்கு இந்த மருந்து நிறுவன விவகாரம் தெரியாது என்று நினைத்திருக்க, அவன் அனைத்தையும் அடி முதல் நுனி வரை தெரிந்து வைத்திருக்கிறான் என்பதில் உண்டான அதிர்ச்சி!

“லாஸ்ட் ட்டூ இயர்ஸ் க்ரிட்டிக்கல் ஸ்டேஜ்ல இருந்த கம்பெனி இந்த வருஷம் சர்வைவ் ஆகறதுக்கு எத்தனை உயிர் தியாகம் பண்ணிருக்கும்னு நினைக்கறீங்க தேவா?”

“ப்ரோ ப்ளீஸ்… எங்களுக்கும் கொஞ்சம் வேலை மிச்சம் வைங்க. இதை நாங்க பார்த்துக்கறோம்.” 

அஸ்வத்தின் அமைதி தொடர, அவனை அதிருப்தியாய்ப் பார்த்தான் தேவா. “மீறி இதுல நீங்க தலையிட்டா இத்தனை நாள் இருந்த மாதிரி நான் சும்மா இருக்கமாட்டேன். நிச்சயம் உங்க மேல ஆக்ஷன் எடுப்பேன்.”

“உங்க டியூட்டியை நீங்க செய்றதுல எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை.” 

“அப்போ அம்ருவைப் பத்தி உங்களுக்கு அக்கறையில்ல அப்டித்தானே? இதை நினைச்சு தான் ஹரி அத்தான் தயங்கறார். யாரும் ஒரு கில்லருக்கு தன் பொண்ணைத் தர நினைக்கமாட்டாங்க. இதை சொல்ல வேண்டாம்னு நினைச்சேன். அடமென்ட்டா இருந்து என்னைப் பேச வைக்கறீங்க!” 

எந்தப் பெண் வீட்டிலும் அவள் செல்லுமிடத்தில் வளமுடனும் நலமுடனும் பாதுகாப்புடனும் வாழ வேண்டும் என்றுதானே நினைப்பார்கள்? அவள்தான் வேண்டுமென்று தாலியைக் கட்டிய பின், இவன் தன்போக்கில் எதையும் செய்து வைத்தால் இவனுடன் சேர்ந்து பாதிக்கப்படுவது அவளும் தானே!

தேவாவின் இத்தனை நேர எச்சரிக்கைகள் அஸ்வத்தின் ஆணவப் பார்வையில் நிகழ்த்தாத மாற்றத்தை அம்ருதா நிகழ்த்தினாள். அவனின் அமைதியான ஆணவப் புன்னகைத் தேய்ந்து, அங்கே தவறிழைக்கும் பாவனை வந்திருந்தது.

அதனை வியப்புடன் பார்த்தபடி சொன்னான் தேவா. “இப்போ அவளை உங்களுக்கு பேசினதுக்கப்புறமும் நீங்க இதைச் செய்வீங்கன்னு நினைக்கல. எங்க அம்ரு நிறைய பொய் சொல்லுவா! ஆனா அதெல்லாம் ஹார்ம்லெஸ். யாரையும் ஹர்ட் பண்ண கூட நினைக்கமாட்டா! அத்தான் உங்களுக்கு ப்ரிப்பேர் பண்ணலன்னா பொய்யே வராதுன்னு சொன்னார். ஆனா நியாயமான காரணமாவே இருந்தாலும் நீங்க ரொம்ப டேன்ஞ்சர்.”

இப்போதும் அஸ்வத்திடம் புன்னகை முகிழ்த்தது. ஆனால் அது எதிரிலிருப்பவர்கள் ரசிக்கும்படியானதாக இருந்தது. 

அதைக் கண்ட தேவா அம்ருவின் பெயரையே பிடிமானமாய்ப் பற்றிக்கொண்டான். “ஹோப் யூ அண்டர்ஸ்டாண்ட் ப்ரோ! அம்ரு விரும்பினது ஸ்கார்பியோவை தான்; ‘தார்’அ இல்ல!”

“போலீஸ்கார் அங்கே சுத்தி இங்கே சுத்தி கடைசில ஸ்கார்பியோவோட ஈஸியூலயே (Engine Control Unit) கை வைக்கறாரே…” என்றான் கேலியாக!

“உண்மையைச் சொன்னேன்.” என்றான் அவனும் வழமையான குறும்புடன்!

அஸ்வத் ஏசியை அணைத்துவிட்டு ஜன்னலைத் திறந்து, பரபரப்பான சாலையில் பார்வையை நிலைக்கவிட்டான். “என் பொண்ணுக்கு நியாயம் செய்யணும்னு நினைக்கறது தப்பா தேவா?” 

“தப்பில்லன்னு நினைச்சதால தான் உண்மை தெரிஞ்சும் சும்மா இருந்தேன். அஃப்கோர்ஸ் அம்ருவுக்காகவும்! ஆனா அப்டியே இருக்கறது என் யூனிஃபார்ம்க்கு நான் செய்ற துரோகம் இல்லையா?”

"அவனுங்கள அப்டியே விட்டா…”

"அப்டி விட்டுடமாட்டோம் ப்ரோ! லீகலி அந்த கம்பெனியை மொத்தமா க்ளோஸ் பண்ண வேண்டியது எங்க பொறுப்பு!”

“........." 

“ஆனா இதை முடிக்காம எப்டி‌ என்னால..? யூ’வ் நோ ஐடியா ஹௌ மச் திஸ் ஈட்ஸ் மீ அப், தேவா!" என்று நெஞ்சத்தை அழுத்தியவனைக் கண்டு அந்தக் காவல்காரன் இளகவில்லை. 

மீண்டும் அம்ருவைத் தூண்டிலாக்கினான். “உங்க வலியை நான் ஏத்துக்கறேன் சொல்றேன். நம்புங்களேன் ப்ரோ! சத்யநாதன் ஆக்ஸிடென்ட்க்கு காரணம் யாருன்னு அம்ருவுக்கு தெரியாம இருக்கும்னு நினைக்கறீங்களா?”

‘ஓப்பன் சேலன்ஞ் டாக்டர்! நீங்களா நானான்னு பார்த்துடுவோம்.’ அன்று அவளிடம் சொன்னது அஸ்வத்தின் நினைவிலாடியது.

“நியூஸ்ல பார்த்தப்போவே கன்ஃபர்ம் பண்ணிருப்பா! ஆனா உங்க விஷயத்துல அத்தான் கிட்டயும் சரியா பேசாம, உங்களையும் நிறுத்த முடியாம மனசுக்குள்ளே வச்சு புழுங்கிட்டிருப்பா! அப்டி இன்னொரு அம்முவையும் அழ விட ரெடின்னா… கோ அஹெட்!”

“நோ!" என்று இறுகிய குரலில் சொன்னவனின் கண்கள் சிவந்திருந்தன.

தேவா ஆதுரமாகப் புன்னகைத்தான். ‘இவனை விட வேறு யார் தங்கள் ‘பொட்டட்டோ’விற்கு சிறந்த இணையாக இருந்துவிட முடியும்?’ 

“ஐ ஸ்வேர்… அந்த கம்பெனியை மட்டுமில்ல; பத்ரிநாத்தையும் அந்தாளுக்கு எடுபிடியா இன்னும் ரெண்டு அஸிஸ்டெண்ட் இருந்திருக்கானுங்க. அவனுங்களையும் ஜென்மத்துக்கும் வெளியே வர முடியாதபடி செய்வேன்!" 

சற்றுநேரத்தில் இருவரும் சிரித்தபடி வெளியே வருவதைக் காதில் புகை விட்டுக்கொண்டு பார்த்தான் ஹரிஷ்.

அவனருகே வந்த அஸ்வத், “பத்தாம் தேதி சண்டே தானே? அன்னிக்கு நான் ஃப்ரீ தான்!” என்றிட,

“ம்ம்!” என்றான் அவன்‌ பட்டும்படாமல்!

“அப்புறம்… இந்தப் போலீஸ் அவருக்கு வேலையே இல்லன்னு ரொம்ப ஃபீல் பண்ணார். பார்க்க பாவமா இருந்தது.”

“அஹான்?” - தேவா.

“ஸோ அவர் வேலைல தலையிட வேணாம்னு டிஸைட் பண்ணிருக்கேன்.”

அவனை ஆச்சரியமாகப் பார்த்த ஹரிஷ் நிம்மதியாக உணர்ந்தான். 

“பட், ஐ’ல் க்நோ வாட்’ஸ் கோயிங் ஆன், இன்ஸ்பெக்டர்.”

“எஸ் சர்!” என்று சல்யூட் வைத்தான் தேவா.

Even if it parks, Scorpio decides the direction🚗…




Comments

Popular Posts 💫

ஸ்கார்பியோ காதல் 🚗 💌

  கதையின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன🎉 கதை முன்னோட்டம்   ஹிக்கின் பாதம்ஸை அலசி விட்டு, ஐபாகோவில் ஐக்கியமாகி, பின்னர் ஊருக்கு செல்லப் பெட்டியைக் கட்டினார்கள். மகிழுந்தில் ஸ்வேதாவை முன்னே ஹரிஷின் அருகே ஏறிக்கொள்ள சொன்ன அம்ருவை மறுத்தவள் ஹரிஷைப் பார்த்தாள். ‘உங்கள் பாடு! எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.’ என்பதாக ஓர் சிரிப்புடன் அமைதியாக இருந்துக்கொண்டான் அவன். அம்ருவை பின்னால் தனியே விட்டுவிட்டு, தான் மட்டும் அவனருகே அமர்வது அதிகப்படியாக தெரிந்ததால், “நானும் பின்னாடி உன் கூடவே உட்காருறேன் அம்ரு.” என்று பின்னால் அமர்ந்துவிட்டு ஹரிஷைப் பார்க்க, அவள் பார்வைக்காகவே காத்திருந்தாற் போல் ஒற்றைக் கண் சிமிட்டி அவளைச் சிவக்க வைத்துவிட்டு மகிழுந்தை எடுத்தான். ஸ்வேதா ஓசூர் அருகே இருக்கும் கிருஷ்ணகிரியில் உள்ள அனுமன் தீர்த்தம் செல்ல வேண்டும் என்று விரும்பியதால், விரைவாகக் கோவில் சென்று அனுமனைத் தரிசித்தனர். அம்ரு ஏனோ சொல்ல தெரியாத உணர்வில் அந்த அஞ்சுதனைப் பார்த்திருந்தாள். “அம்ரு, கிளம்பலாம் டைமாச்சு!” என்ற ஹரிஷ் ஸ்வேதாவின் காதில் கிசுகிசுத்தான். “நான் அனுமன் பக்தனில்ல பேபி? இ...

சீதையின் பூக்காடு🌻🌺 - தொகுப்பு.

  கதையின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன🔗🔗  கதை முன்னோட்டம். பொறுமை இழந்தவன், "ஹலோ! கேன் யூ ப்ளீஸ் டெல் மீ, வாட்'ஸ் யுவர் ப்ராப்ளம்?" எனக் கேட்டான். "யாரோ ப்ளே பண்றா. நேக்கு கொஞ்சம் முன்னாடி கால் வந்தது. ஊருக்கு கிளம்பின எங்க பாட்டிக்கு பாதி வழியிலேயே திடீர்னு ஃபிட்ஸ் வந்துட்டதாகவும், இப்போதைக்கு பக்கத்துல இருக்க அவா ஆத்துல வச்சு ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணிருக்கறதாகவும், உடனே வந்தா ஹாஸ்பிடல் அழைச்சிண்டு போகலாம்னும் சொல்லி இந்த அட்ரஸ்க்கு வர சொன்னா." "ஓ!" "ஆனா, இப்ப அம்மா பேசறத பார்த்தா எல்லாரும் நல்லபடியா ஊருக்கு போய்ட்டா போலயே... அப்ப நேக்கு கால் பண்ணது யாரா இருக்கும்?" "எனக்கு கால் பண்ணவன் தான் உங்களுக்கும் பண்ணிருக்கணும். ஆமா... வீட்ல உள்ளவங்க ஊருக்கு கிளம்பி எவ்ளோ நேரம் ஆச்சு?" "மூணரை மணி நேரம் இருக்கும். ஏன் கேக்கறேள்?" "நீங்க இங்க வர்றதுக்கு மினிமம் ஆஃப் ஆன் ஆர்-னு வச்சிக்கிட்டா கூட… ரொம்ப தூரம் இல்லனா, கிளம்பி மூணு மணி நேரம் ஆனவங்க ஊருக்கே போய் சேர்ந்திருப்பாங்களே… இங்க பக்கத்துல எப்டி இவ்ளோ நேரம் இருப்பாங்...

சீதையின் பூக்காடு - 1

  அத்தியாயம் 1 வெள்ளிக்கிழமை! மாலை நான்கு மணி அளவில் மழை வரும் போல் வானம் கருமையைப் பூசிக் கொண்டிருந்தது. அந்த பதிப்பகத்தில் தனது புத்தகத்தை வெளியிடுவது பற்றி பேசிக்கொண்டிருந்தாள் ஆரவி. ஆரவி! இருபத்துமூன்று வயது. பிபிஎம் படித்தவள். படித்ததற்கேற்ப ஓர் சிறிய நிறுவனத்தில் வேலை செய்தவள். ஆம்! செய்தவள். மேற்கொண்டு படிக்க விரும்பாமலும், வேலை செய்த நிறுவனம் வேறு கைக்கு மாறியதாலும் தற்போது வேறு வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறாள். தனக்கு விருப்பமான எழுத்துலகில் அடியெடுத்து வைத்தவள் ஆறு நாவல்களும், இருபது சிறுகதைகளும் எழுதியுள்ளாள். அவள் எழுதி பத்திரிக்கைகளில் பிரசுரமானதில் ஒன்பது சிறுகதைகள் பரிசுகள் பெற்றவை! தரமான கதைகளை எழுதி அனுராதா ரமணன், சிவசங்கரி போன்ற எழுத்தாளர்களைப் போல் தானும் புகழ்பெற வேண்டும் என்பதே ஆரவியின் குறிக்கோள்! இந்த பதிப்பகமே இவள் எழுதிய நான்கு நாவல்களை வெளியிட்டுள்ளது. அதில் இரண்டு மறுபதிப்பிற்கு சென்றுள்ளன. தற்போதும் இவளெழுதிய 'சீதையின் பூக்காடு' என்ற புத்தகம் மறுபதிப்பிற்கு செல்லவிருக்கிறது. அதற்கு பதிப்பகத்தாரின் பாராட்டைப் பெற்றுக்கொண்டும், மற்றுமொரு கதைய...