
இறுதி அத்தியாயம்
அம்ருதா தன் பயிற்சி காலத்தை நிறைவு செய்துவிட்டு ஒரு தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து கொண்டிருந்தாள்.
அதே மருத்துவமனையில்,
“ஹாஸ்பிடல் வந்துட்டேன் ஹரிஷ்! எந்தப் பக்கம்?”
“அஸ்வத்!”
திரும்பியவன் தன்னை நோக்கி கையசைத்துக்கொண்டு வரும் ஹரிஷைக் கண்டுவிட்டு, அலைபேசியை அணைத்தபடி அவனோடு நடந்தான். ஹரிஷ் நிறைய பயந்திருந்தான். அவன் முகமே பதற்றத்தில் குளித்திருந்தது.
அஸ்வத் ஆறுதலாக அவன் தோள் தட்டினான். “நீங்களே ஒரு டாக்டர். உங்க தங்கச்சியை எமோஷனல் ஆகக்கூடாது சொல்லுவீங்க! இப்போ நீங்களே பயந்தா எப்டி?”
“பொண்டாட்டி விஷயத்துல எல்லாரும் ஸீரோ’ங்க! நிஜமா என்னால இந்த ஸ்ட்ரெஸ்’அ தாங்க முடியல அஸ்வத். ஆல்மோஸ்ட் நாலு மணி நேரம் ஆகிடுச்சு. நான் ஒரு பேஷண்ட் கிட்ட பேசி அனுப்பிட்டு இப்போதான் வந்தேன். இல்லைன்னா நானும் உள்ளே போயிருப்பேன்.”
“நல்லவேளை போகல! அங்கே போய் அவங்க வலியைப் பார்த்துட்டு அழுதுருப்பீங்க.”
பேசியபடி அவ்வறை பக்கம் வந்திருந்தனர். அங்கே நடராஜன், அம்பிகா, ஸ்வேதாவின் அம்மா என அனைவரும் இருந்தனர். அதே மருத்துவமனையில் பணிபுரியும் அம்ருதாவிற்கு அன்று ஓர் அறுவைச் சிகிச்சை பணி இருந்ததால் அவள் மட்டும் அங்கில்லை.
அஸ்வத்தைக் கண்டு நடராஜன் எழுந்து வந்தார்.
அழுதுவிடுவான் போலிருந்த ஹரிஷைக் கண்டு சூழ்நிலையை இலகுவாக்க முயன்றார். “நானெல்லாம் இவன் பிறக்கும்போது அவ்ளோ தைரியமா இருந்தேன். இவன் என்னவோ இவனுக்கு இடுப்பு வலி வந்த மாதிரி அழறான்.”
அப்பாவிடம் இலகுவாக பேசியிராத ஹரிஷ் அஸ்வத்திடம் முணுமுணுத்தான். “ம்க்கும்! அம்மாவுக்கு நான் பத்து நிமிஷத்துலயே பிறந்துட்டேனாம்! இல்லன்னா இவரையும் அன்னிக்கு அழ விட்டிருப்பேன்.”
இருவருக்கும் மையமாகச் சிரித்த அஸ்வத், “ரொம்ப நேரம் ஆகிடுச்சுல்ல? அதான் டென்ஷனா இருக்கார் போல!” என்ற சொல்லிக் கொண்டிருக்கும்போது உள்ளிருந்து குழந்தை வீறிடும் சப்தம் கேட்டது.
வெளியே தலை நீட்டி, “கேர்ள் பேபி!” என்று சொன்ன செவிலியப் பெண், சிறிது நேரத்தில் குழந்தையைப் பூந்துவாலையில் சுற்றி எடுத்து வந்தாள்.
குழந்தையை வாங்கிக்கொண்ட ஹரிஷ் அத்துணை அழகாக சிரிப்பான் என்று அப்போதுதான் அஸ்வத்திற்கு தெரிந்தது.
பெரியவர்கள் தூக்கிக் கொஞ்சிய பின்னர் அஸ்வத்திடம் கொடுக்க, வாங்கி முறையாக, லாவகமாக அணைத்துப் பிடித்துக்கொண்டான். உணர்வுகளும் தினங்களும் நிறம் மாறி அவனின் அம்முக்குட்டியை முதலில் கையில் வாங்கிய தினத்திற்கு சென்றுவிட, முகமெல்லாம் சிவந்து அழுகைப் பொத்துக்கொண்டு வந்தது. நெஞ்சோடு அணைத்துக் கொண்டவனின் ஒரு துளிக் கண்ணீர் குழந்தையின் நெற்றியில் விழ, குனிந்து அங்கே முத்தமிட்டான்.
நடராஜன் மனம் தாளாமல் அவனை ஆற்றுபடுத்த வர, அவர் கரம் பற்றி தடுத்த ஹரிஷ் வேண்டாமென தலையசைத்தான்.
அஸ்வத் சூழ்நிலை கருதி தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு குழந்தையை ஹரிஷிடம் கொடுக்க, அவனின் உணர்வுகள் புரிந்தவன் சொன்னான். “பரவாயில்ல அஸ்வத்! இன்னும் கொஞ்ச நேரம் வச்சிருங்க.”
“இல்ல, குழந்தைக்கு பசிக்குது.” எனும்போதே,
“பேபிக்கு ஃபீட் பண்ணனும்.” என்று செவிலியர் குழந்தையை வாங்குவதற்கு வர, நடராஜனும் ஹரிஷும் அஸ்வத்தை ஆச்சரியமாகப் பார்த்தனர்.
இருந்தாள்; இறந்தாள் என்று இவர்கள் மூன்றாம் மனிதனாகச் சொல்லிவிட்டு கடந்துவிடலாம். ஆனால் அணுஅணுவாய் அவளின் அசைவுகளுடன் வாழ்ந்தவனால் அத்தனை சுலபமாக அவளின் சுவடைக் கடக்கத்தான் முடியுமா?
குழந்தையை அஸ்வத்தின் கையிலிருந்து வாங்கிச் சென்றதும் அவன் விழிகள் அலைபாய்ந்தன. நெஞ்சை அடைத்துக்கொண்டு வர, நொடியில் முகமெங்கும் வியர்த்துவிட்டது. இயல்பாக இருப்பதற்காக தானே வலிய சென்று நடராஜனுடன் ஏதேதோ பேசினான்.
ஹரிஷிற்கு அவன் மனநிலை மெல்ல புரிய ஆரம்பிக்க, மனதில் எச்சரிக்கை மணி அடித்தது. துரிதமாக அம்ருதாவை அழைத்தான்.
“ஆபரேஷன் முடிஞ்சதா அம்மு?”
“இப்போ தான் ரூம்க்கு வர்றேன்’ண்ணா. நானே கால் பண்ணிட்டு கிளம்பலாம்னு நினைச்சேன். பேபி பிறந்துடுச்சா? பொண்ணுதானே? அண்ணி கேட்டப்போ சர்ப்ரைஸிங்கா இருக்கணும்னு சொல்லமாட்டேன்னு சொல்லிட்டேன். ஹஹ்ஹஹ…”
“ப்ச்! பேசிட்டிருக்காம எங்கே இருந்தாலும் உடனே வா! ஸ்வேதாவை முன்னூத்து அஞ்சாம் நம்பர் ரூம்க்கு மாத்தறாங்க. அங்கே வந்துடு.”
“என்னாச்சு?”
“கிளம்பிட்டியா?”
“லிஃப்ட்ல இருக்கேன். வந்துட்டே இருக்கேன்? என்னாச்சு? ஏதாவது ப்ராப்ளமா?”
“உன் ஆளு தான் மூஞ்சியை ஏழு முழத்துக்கு தூக்கி வச்சிட்டு இருக்கார். நீ பக்கத்துல இருந்தா தான் ஹி’ல் ஃபீல் செக்யூர்!”
“ஏன்? நீ ஏதாவது வம்பு பண்ணுனியா?”
“அப்டியே போட்டேன்னா தெரியும். எப்ப பார் என்னையே சொல்லிக்கிட்டு…” என்று எகிறியவன், குழந்தையைக் கையில் தந்துவிட்டு திரும்ப வாங்கியதும் அஸ்வத் உள்ளுக்குள் உடைகிறான் என்றான்.
ஏற்கனவே தள்ளிதான் நின்றிருந்தான். இருப்பினும் மேலும் குரலைத் தாழ்த்திக்கொண்டு சொன்னான். “என் கணிப்பு சரின்னா உன் விஷயம் அளவுக்கு இல்லைன்னாலும், அஸ்வத் மனசு பாப்பாவோட அட்டாச் ஆகிடுச்சு.”
கேட்டுக்கொண்டே வந்த அம்ருதாவிற்கும் அஸ்வத்தின் நிலை புரிந்தது. எப்படி அன்று அவனின் மகள் நினைவில் அம்முக்குட்டியாக இவள் அவன் மனதில் பதிந்தாளோ, அதேபோல் இன்று ஹரிஷின் குழந்தையைப் பார்த்து தன் மகளின் நினைவுடன் உறவாடியிருக்கையில், திடுமென குழந்தையை வாங்கிச் சென்றதும் உண்மையில் தன் கைவிட்டே சென்றாற் போன்ற கற்பனையில் தவிக்கின்றது அவன் மனம்.
அம்பிகாவும் ஸ்வேதாவின் அம்மாவும் தனியறைக்கு மாற்றியிருந்த ஸ்வேதாவிற்கு உதவிட வேண்டி அறைக்குள் சென்றிருக்க, அவ்விடம் வந்திருந்த ஆண்கள் மட்டும் வெளியே இருந்தனர்.
அம்ருதாவும் அங்கே வந்துவிட, அவளைக் கண்டதும், “அம்மு! குட்டி அம்மு தான்டா!” என்றார் நடராஜன்.
“ஆல்ரெடி எனக்குத் தெரியும்பா. அண்ணியோட ஸ்கேன் ரிப்போர்ட்லயே பார்த்தேன்.” என்று சிரித்தவள் அஸ்வத்தின் அருகே அமர்ந்துகொள்ள, சடுதியில் அஸ்வத்தின் முகம் தெளிந்து அலைந்துதிரிந்த அகம் ஆசுவாசம் கொண்டது.
“அத்தைக்கு சொல்லிட்டியா ஹரி?” என்றபடி எழுந்த நடராஜன், ஹரிஷுடன் சேர்ந்து உறவுக்காரர்களுக்கு இனிய செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார்.
“இங்கே உட்கார்ந்துட்ட? உள்ளே போய் பாப்பாவைப் பார்க்கலயா?” - அஸ்வத்.
“வெளியே ஒரு பாப்பா உம்மணாம்மூஞ்சியா இருக்குதே? அப்புறம் எப்டி நான் போறது?”
“அவ்ளோ ஃப்ராங்காவா தெரியுது? என்னவோ தெரியல. குழந்தையை என்கிட்ட தந்தாங்க. அப்புறம் என் கைல தந்துட்டு பிடுங்கிட்டு போன மாதிரி அந்த நர்ஸ் மேல அவ்ளோ கோவம் வந்துச்சு. அடிச்சிடுவேனோன்னு பயந்துட்டேன். ஒருமாதிரி நெஞ்செல்லாம் அடைச்சிக்கிட்டு மனசு வலிக்குது அம்மு. அம்முக்குட்டி போனப்போ வலிச்ச மாதிரி…”
“அஸ்வத், ரிலாக்ஸ்! கீப் திஸ் இன் யோர் மைண்ட் நீங்க எப்பவும் தனியாள் இல்ல! அப்டி நினைக்கறதுனால தான் அம்முக்குட்டி விஷயம் உங்களை ரொம்ப பாதிக்குது. இதோ, நான் உங்கப் பக்கத்துலயே இருக்கேன். ஐ லவ் யூ ட்டூ தி கோர். நான் உங்களுக்காக இருக்கும்போது நீங்க இப்டி ஃபீல் பண்ண கூடாது.”
தனது வலது கையில் படர்ந்திருந்த அவளின் துப்பட்டாவைக் கையுயர்த்தி நழுவி விழ செய்தான். மடியில் விழுந்ததைப் பிரியத்துடன் பார்த்தபடி சொன்னான். “ம்ம்! உண்மைலயே யூ ஆர் அ பாஸிட்டிவ் பண்டல்’டி அம்மு! டோன்னோ வை… இப்போ உன் வாசனையை ஸ்மெல் பண்ணும்போது ஐ’ம் ஃபீலிங் கம்ப்ளீட்! ஃபீலிங் லைட்!”
அவன் கூற்றில் உள்ளூர சிலிர்த்த மனம் கண்ணீரை ஜனிக்க எத்தனிக்க, அதனை உள்ளிழுத்து சிரித்தவள், “அப்பாவும் அண்ணாவும் பக்கத்துல தான் இருக்காங்க. இல்லன்னா சட்டை காலரைப் பிடிச்சிழுத்து நச்சுன்னு ஒரு…” எனச் சொல்லி முடிக்கும் முன்,
சட்டென எழுந்துவிட்டவன், “ரௌடி! போய் உள்ளே நான் வரலாமானு கேட்டுட்டு வா!” என்று அவளைத் துரத்திவிட்டான்.
********
ஆறு மாதங்கள் சென்றிருந்தன.
ஸ்வேதா குழந்தை பெற்ற பின் அவள் அம்மா வீட்டில் கழித்த நாட்களைத் தவிர்த்து, இந்த ஆறு மாதங்களும் அஸ்வத்தின் அன்றாடங்களில் இணைந்து கொண்டாள் ஹர்ஷிதா. ஹரிஷ் - ஸ்வேதாவின் தவப்புதல்வி!
தினமும் மாலையில் பணி முடிந்ததும் அம்ருதாவின் வீட்டிற்கு போய் குழந்தையுடன் விளையாடிச் சென்றால்தான் அஸ்வத்திற்கு அன்றைய தினம் நிறைவு பெறும். அவளுக்கும் அவளின் அஸ்வத் மாமாவைக் கண்டால்தான் உற்சாகம் பீறிட்டெழும். என் இடத்தைப் பறிக்கவே வந்திருக்கிறாளென அம்ருதா அஸ்வத்திடம் செல்லச் சண்டை பிடிப்பதும் நடக்கும்.
அன்று நடராஜன், அம்பிகா ஒரு விசேஷத்திற்காக வெளியே சென்றிருக்க, ஹரிஷ் விரைவிலேயே வந்திருந்தான். அம்ருதாவும் வேலை முடிந்தது என்றிட, அவளை அழைத்துக்கொண்டு சிவன், பார்வதியைப் தரிசித்துவிட்டு வந்தான் அஸ்வத்.
வீட்டில் அதுவரை அப்பாவுடன் விளையாடிக் கொண்டிருந்த ஹர்ஷிதா, அஸ்வத்தைக் கண்டதும் ஹரிஷை மறந்து தாவிக்கொண்டு மாமனிடம் ஓடினாள். அதில் அண்ணன் மனம் வருந்தக்கூடுமோ என்று அம்ருதா அவனைத் தயக்கத்துடன் பார்க்க, ஹரிஷ் இயல்பாகவே இருந்தான்.
“என் பொண்ணுங்க ரெண்டு பேரையும் ஆட்டையப் போட்டுட்டான். பேசாம நாம வேற டிரைப் பண்ணலாம் பேபி.” என ஸ்வேதாவின் தோளில் கைப் போட,
அம்ருதா, “ஓஓஓ!” என ஆர்பரிக்க,
“தட்’ஸ் அ ஸ்ட்ராடெஜிக் டிசிஷன் மச்சான்!” என்று கண்ணடித்தான் அஸ்வத்.
கணவனைக் கண்டனத்துடன் பார்த்துவிட்டு எழுந்து சென்ற ஸ்வேதாவின் முகமெங்கும் வெட்கச் சிவப்பு!
அம்ருதாவின் திருமணத்திற்கு நடராஜன் தீர்மானித்திருந்தபடி இரண்டு வருடங்களுக்கும் மேலாகிவிட்டது. அஸ்வத்தை அழைத்துப் பேசினார். இன்னும் ஆறு மாதங்கள் செல்லட்டும் என்று அவன் சொன்னதையும் கேளாமல் இனி தாமதிக்கவே வேண்டாமென்று ஒரே பிடியாக நின்று திருமணத்தை நடத்திவிடுவதில் முனைப்பாக இருந்தார் நடராஜன்.
அதன்படி வேலைகள் வேகமாக நடந்தன. மணமேடையில் அமர்ந்திருந்த அஸ்வத்திற்கு எல்லாம் கனவு போல் இருந்தது. காலம் அவன் வாழ்வை மகிழ்ச்சி மாலைகள் கொண்டு அலங்கரித்து அழகு பார்த்தது.
எதையும் ஆர்பாட்டமற்று அடக்கமாய்க் கொண்டாடும் குணமுடையவனாதலால் அம்ருதாவின் விரல் பற்றியே தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான். அவன் மடியில் ஹரிஷின் மகள் அமர்ந்திருக்க, அருகே அவன் வாழ்வில் சுகந்த தீர்த்தம் தெளிக்கும் திருமகள் அமர்ந்திருக்க… அவன் மனம் ஏகாந்த பேரின்பத்தில் லயித்திருந்தது. அதே தன்னிறைவுடன் அம்ருவின் கழுத்தில் மங்கல நாண் பூட்டினான்.
பார்வையில் கூட அவளைப் பூப்போல் வருடி தருபவனின் கைத் தாலியை நெஞ்சில் ஏற்றதும் அவளுக்கு விழிகள் நிறைந்து போனது. அவளின் ஈடற்ற இஷ்டமொன்று ஈடேறிய கணமல்லவா!
திருமணத்தன்று அஸ்வத் செய்த முதல் காரியம் அம்ருதாவிற்கு அவளின் நீண்ட நாள் ஆசையான இரு சக்கர வாகனத்தைப் பரிசளித்தது தான்! பளபளவென்றிருந்த அந்த நீல நிற வெஸ்பாவைச் சுற்றிச்சுற்றி வந்த அம்ருதா, ஓராயிரம் ‘லவ் யூ’க்களை அவன்மேல் கொட்டினாள்.
இதை முதலிலேயே செய்திருந்தால் அவளுக்கு ஸ்கார்பியோவின் மேல், அதனை அசுர வேகத்தில் செலுத்தும் எஜமானனின் மேல் இத்துணை பிரேமை வந்திருக்காதோ என்று அண்ணனாக அல்லாமல், ஒரு மருத்துவனாக சிந்தித்தான் ஹரிஷ்.
தேவா சொன்னதைப் போல் பொத்தி பொத்தி வைத்திருக்க வேண்டாம்தான் என்று புரிந்தாலும், இப்போதும் ஹரிஷால் அதைச் செயல்படுத்த முடியுமென்று தோன்றவில்லை. அவனின் முதல் குழந்தை அவள்!
அஸ்வத்திடம் ஆட்சேபித்தான். “இப்போ எதுக்கு இது? ஸ்கார்பியோ ரைட் தானே அவளுக்கு இஷ்டம்?”
“பரவாயில்ல. ஆசைக்கு இதுவும் இருக்கட்டும். பக்கத்துல போறதுக்கு யூஸ் ஆகும்.”
“தனியா போனா வேகமா போவா!” என்ற அம்பிகா, “ரொம்ப தூரம் எங்கேயும் போகக்கூடாது. மாப்பிள்ளை வேலையா இருந்தா அப்பாவை, இல்லைன்னா ஹரியைக் கூப்பிடணும்.” என்று அறிவுரை பட்டியல் போட ஆரம்பிக்க,
வெஸ்பாவை வெறுத்துவிடுவதைப் போல் பார்த்த பெண்ணை அஸ்வத் தான் ரகசியமாகச் சமாதானப்படுத்த வேண்டியிருந்தது. “மூஞ்சியை இப்டி வச்சுக்காதேடி… எங்கே வேணாலும் போகலாம். எப்டி ஸேஃபா ஓட்டணும்னு நான் கத்துத் தர்றேன்.”
“மை காட்! ஸ்கார்பியோ வெஸ்பாவுக்கு டிரைவிங் கத்துத் தரப் போகுதா? ஹய்யோ! நிஜமாவே எனக்கு இப்போ உங்க சட்டையைப் பிடிச்சு கிஸ்ஸடிக்கணும் போல இருக்குதே!”
“இவ்ளோ பக்கத்துல நின்னா போதுமா?” என்று அவளுக்கிணையாகப் பேசியவனைக் கண்டு வெட்கம் கொண்டாள் அம்ருதா.
அன்றிரவு,
அவன் தோளில் சாய்ந்திருந்த அம்ருதாவிற்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறையாகிப் போனது. வாயைத் திறந்து மூச்சை உள்ளிழுத்துக் கொண்டிருந்தாள்.
“கல்யாணத்துக்கு இன்னும் மூணு வருஷம் போகட்டும்னு நீங்க சொன்னதைப் பார்த்து அண்ணி சொன்னாங்க, ‘ஸ்கார்பியோ ஸ்பீடுக்கு காதல் போகாது’ன்னு…” என்றவளைக் கண்களில் மிச்சமிருக்கும் மயக்கத்துடன் பார்த்தான் அஸ்வத்.
“காதலுக்கு ஸ்பீட் விட டெப்த் தான் முக்கியம்.” என்றிட,
“ஹய்யோ! என்னைச் சொல்ல விடாம ரொம்ப பேசறீங்க!” என முகத்தை மறைத்தாள்.
“டாக்டர் எப்பவும் என்னைத் தான் வெட்கப்பட வைப்பீங்க. இன்னிக்கு என்னடான்னா…”
“ச்சு போங்க! நான் எதுவும் சொல்லல!”
“சரி சரி, சொல்லுங்க டாக்டர். என் பர்ஃபாமன்ஸ் பார்த்துதானே ஏதோ முக்கியமா சொல்ல வந்தீங்க?”
“அஸ்வத்த்த்!!”
பற்கள் தெரிய சிரித்தான். அவளிடம் குறும்பு செய்து சிரிக்கும் அஸ்வத்திற்கு தன்னை நினைத்தே ஆச்சரியம். அவன் யாரிடமுமே அதிகமாக பேசி சிரித்ததில்லை. அவனது சேட்டைகள் எல்லாம் அவளிடம்தான் வெளிப்படுகிறது.
“ஓகே, ம்யூட் மோட்!” என்று உதட்டில் விரல் வைத்துக்கொள்ள,
அவன் விரலை வருடியவாறு சொன்னாள். “ஆரம்பத்துல உங்களை மாஸ்டர் ஆஃப் தி ரோட்னு சொன்னேன்ன்…”
“இஜிட்? இப்போ?”
“ம்ம்… மாஸ்டர் ஆஃப் தீஈஈ…”
“சொல்லுடி…”
சொல்லிவிட்டு மெத்தையில் புதைந்துகொள்ள, வெடித்துச் சிரித்தான் அஸ்வத்.
“சொன்னா நம்புவியா? எனக்கே இது ஆச்சரியமா இருக்குது. ஒரு ஸ்டேஜ்ல என் ஃபீலிங்ஸ் எல்லாம் செத்துடுச்சோன்னு கூட நினைச்சிருக்கேன். உன் கழுத்துல கத்தி வச்ச அன்னிக்கு பக்கத்துல பார்த்தப்போ தான்…”
"ரியலி? ஆனா அன்னிக்குதான் என் முகத்தையே நீங்க ஒழுங்கா பார்த்தீங்க தெரியுமா? நான் கில்டி ஃபீலிங்ல பார்க்கறீங்கன்னு நினைச்சேன்." அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டாள்.
அவன் மனக்குரலின் ஆட்சியோ அல்லது தூய காதலின் ஆளுமையோ! ஏனோ இந்தப் பெண்ணிடம் மட்டும் அவனால் மோகத்தில் திளைத்தெழ முடிகிறது. காமமற்றுக் காதலித்து புனிதனாகவும் முடிகிறது. இந்த ஸ்கார்பியோவின் தீராத எரிபொருள் அவளே!
அதை அவளிடமே சொன்னான். “யூ ஆர் தி ஃப்யூயல் ஆஃப் திஸ் ஸ்கார்பியோ… நெவர்-எம்ப்டி ஃப்யூயல்!”
அணைப்பை இறுக்கினாள் அவள்.
உணர்ச்சிவயப்பட்டான். “இன்னிக்கு உங்கம்மா, அப்பா கூட ரொம்ப கேஷூவலா இருந்தாங்க. ஆனா உங்கண்ணா உன்னைப் பார்க்கும் போதெல்லாம் ரொம்ப டிப்ரெஸ் ஆனார். நிஜமா அவர் நினைச்சதை விட நான் உன்னை பத்திரமா பார்த்துப்பேன் அம்மு.”
“எனக்கு தெரியும், புருஷன் சர்.” என்றவளின் கன்னக்குழியை முத்தங்களால் நிறைத்தான் அஸ்வத்.
Endless fuel💌 Relentless drive🚗…
டாட்டா ஃப்ரெண்ட்ஸ்🎈🎈
Super good.a very satisfying end
ReplyDeleteThanks very much 🌟💫
DeleteSuch a gripping narration. Enjoyed it one go!!! Even though Scorpio captivated with it's performance it was fulfilling when That came into the scene
ReplyDeleteThanks very much for your lovely comment🫶✨ Happy it felt fulfilling for you💝🎈
DeleteSuperb story
ReplyDeleteThank u 🫶✨
Deletevery interesting and engaging story!
ReplyDeleteThank u 🫶✨
Deleteஶ்ரீ 🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🔥🔥🔥🔥. சிதற விட்டீங்க..செம்ம .உங்க ஸ்டோரி எப்பவுமே கொஞ்சம் ஸ்லோ ஆ போகும்..நேத்து ஆரம்பிக்கும் போது 36 எபியா அப்படினு நினைச்சு ஆரம்பிச்சேன்.ஆனா scorpio அடிச்சு தூக்கிடுச்சு. என் நேரத்தை குடுத்ததுக்கு வொர்த்.. ஆரம்பத்தில் இருந்தே ஏனோ அஸ்வத் தப்பாவே நினைக்க முடியல.amru அவ அண்ணன் bond ரொம்ப அழகா, ஆசையா இருந்தது .. ரேவதி பேசவே பிடிக்காத character.. தேவா amru அம்மா அப்பா சாந்தி எல்லோருமே ரொம்ப நிறைவா இருந்தாங்க. உங்களுக்கு இப்படி எல்லாம் கூட ரொமான்ஸ் எழுத தெரியுமா ஶ்ரீ 🙈🙈. நிறைய குட்டி kutty lines. கடைசில வர scorpio line ரொம்ப cute and apt இருந்துச்சு .நிறைய குட்டி குட்டி வரிகளை ரசிச்சேன்."ஈரஉடையில் காட்டு மஞ்சள் " இந்த மாதிரி நிறைய அழகா இருந்துச்சு.. உங்கள் எழுத்து மெருகெறி கொண்டே இருக்கு. வாழ்த்துக்கள் 💐💐💐
ReplyDeleteஉங்க நேரத்தை வீணாக்கலன்றதே பெரிய ஊக்கமா நினைக்கறேன்💌🎈 ரொமான்ஸ்... அதுவும் ஸ்கார்பியோ சார்ந்தே யோசிச்சதால நல்லா வந்துடுச்சு போல🫣🫣 உங்க feedback கிடைத்ததில் ஸ்ரீ ஹேப்பியாம்🍂🍁 நன்றிகள் செம்பருத்தி🦋🌺
Delete