Skip to main content

Posts

Welcome to ShriVijay Writings🎉 - a world of suspense, love, romance, family bonds, thrilling crime, friendship, mystery, emotions, adventure, revenge and twists & turns. Dive in and enjoy every twist! 📖✨

இரவோடு இவர்கள் - A Ceylon trip ✈️

  Hi Dears, இரவோடு இவர்கள் - A Ceylon trip ✈️ கதையைக் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளில் வாசிக்கலாம்🪶🪻 Happy Reading📖🌷 அத்தியாயம் 1 அத்தியாயம் 2 அத்தியாயம் 3 அத்தியாயம் 4 அத்தியாயம் 5 அத்தியாயம் 6 அத்தியாயம் 7 (Finale)

இரவோடு இவர்கள் A Ceylon trip ✈️ - 2

  அத்தியாயம் 2 காலையில் ஸ்ரீ அழைப்பெடுத்து குண்டுவெடிப்பு சம்பவத்தைப் பற்றி சொன்னதிலிருந்து, இங்கே நண்பர்கள் ஐவரும் பேயறைந்ததைப் போல் அமர்ந்திருந்தனர். காலையில் இருந்து வெளியே எங்கும் போகவில்லை.  வெளியே ஆட்கள் நடமாடவே ஏகக் கெடுபிடியாக இருந்தது. ஆக தற்போது நாடு திரும்புவதைப் பற்றியும் யோசிக்க வழியில்லை. ஐவரும் அறையிலேயே அடைந்துக் கிடந்தனர். பெண்களுக்கு அது சிரமமாக இருக்கவில்லை. ஆனால் ஆண்களால் அப்படி நாள் முழுவதும் ஒரே அறைக்குள் இருப்பது பாரிய துன்பமாக இருந்தது. எனவே மாலையில் ஆண்கள் மூவரும் வெளியே போய் நாட்டு நடப்பின்(?) நிலவரத்தை அறிந்து வருவதாகச் சொல்லி புறப்பட்டனர். அது ஒன்றும் அத்தனை சுலபமாக இருந்து விடவில்லை.  முதலில் இவர்கள் போவதற்கு வாகனம் எதுவும் கிடைக்கவில்லை. இவர்கள் இருந்த விடுதியின் பின்னால் சற்று தொலைவிலேயே ஒரு பெரிய மருத்துவமனை இருந்ததால், சாலையோரமாகவே நடந்து அங்கே போய் பார்த்துவிட்டு வரலாமென நினைத்தார்கள். ஆனால் ஆங்காங்கே நின்றிருந்த இராணுவ வீரர்கள், இவர்களை நிறுத்தி வைத்து விசாரித்து மீண்டும் விடுதிக்கு திரும்பிச் செல்ல எச்சரித்து அனுப்பினர். நம்மூர்க்காரர்க...

இரவோடு இவர்கள் A Ceylon trip✈️ - 1

  அத்தியாயம் 1 வருடம் 2017. இலங்கை, மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஓர் சிற்றூர்.  சயந்தன் கடையில் வாங்கிய பரோட்டாவையும் அம்மா செய்து தந்திருந்த சம்பலையும் திண்ணையில் காலாட்டியபடி அமர்ந்து ருசித்துக் கொண்டிருந்தாள் ஸ்ரீநிதி! அத்தனை நேரம் அசிரத்தையாய் இருந்தவளின் முகம் திடுமென புதுப்பொலிவைப் பூசிக்கொண்டது. இதழ்கள் பரோட்டா விள்ளலை நாக்கின் அடியில் பதுக்கிவிட்டு, சின்னப் புன்னகையில் குவிந்தன; கண்கள் நளினமாய் சுழன்றன; கால்கள் ஒயிலாய் நடந்து, அந்த நீண்ட முற்றத்தைக் கடந்து வீட்டின் நுழைவாயிலின் அருகே வந்து நின்றன. கேட்டைப் (gate) பிடித்துக்கொண்டு தலையை வெளியே நீட்டிப் பார்த்தாள். மொஃபட் ஒன்று இவள் வீட்டைக் கடந்து போனது. கடந்து போகையில் இவளுக்கு மட்டும் பிரத்யேகமாக காதல் வாசத்தை வீசிச் சென்றது. வீசிய வாசனையில் ஸ்ரீநிதியின் அழகு முகம் மேலும் மகத்தான அழகைப் பூசிக்கொண்டது.  காதலோ க்ரஷோ என்ன வார்த்தை வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம்.‌ ஆனால் அந்த உணர்வை என்னவென்று வர்ணிப்பது? எதிர்கால வாழ்வைப் பற்றிய எந்த சிந்தனையும் அல்லாத, நிர்மலமான அந்த பதின்பருவ மனதினுள் சின்னப் பூவொன்று மூலைமுடு...

ஸ்கார்பியோ காதல் - 34.1

  அத்தியாயம் 34.1 சாஷ்டாங்கமாக தன் மனைவியின் காலில் விழுந்திருந்தான் ஹரிஷ். ‘அய்யய்யோ… என்னங்க நீங்க போய் என் கால்ல விழுந்துக்கிட்டு…’ என்றெல்லாம் ஸ்வேதா கிரிஞ்ச் நாடகம் போடவில்லை. மாறாக டிபிகல் மனைவியாக அவன் சிண்டைப் பிடித்தாள். “மனசுல இருக்கறதுதானே கோவத்துல வெளியே வரும்? இத்தனை நாளும் என்னைப் பத்தி இப்டியொரு மோசமான தாட்’அ மனசுல வச்சுக்கிட்டு தான் என் கூட பேசி, சிரிச்சு இருந்திருக்கீங்க. ஒரு சைக்யார்டிஸ்டா அதையும் எனக்குத் தெரியாம பார்த்துக்கிட்டு எவ்ளோ அழகா நடிச்சிருக்கீங்க?” “பேபி, இப்டிலாம் பேசாதேயேன்… சத்தியமா நான் உன்னை அப்டி நினைக்கலடீ.” “பொய்! இல்லன்னா எப்டி அப்டியொரு வார்த்தை வரும்? நான் உங்க தங்கச்சியைத் தாட்டிவிட நினைக்கறேன்னு…” என்றவளுக்கு அழுகை வந்துவிட, “ப்ச் அழாதே பேபி!” என்று அணைக்க வந்தவனின் கையைத் தட்டிவிட்டாள். “தெரியாம சொல்லிட்டேன்டி… நிஜமா மனசுல இருந்து சொல்லல! அவன் மேல இருக்க கோவத்துல தான்…” “கோவத்துல தான் மனசுல இருக்கறது வெளியே வரும். இவ யாரு நம்ம தங்கச்சி விஷயத்துல தலையிடன்ற நினைப்புதானே?” என்று முதலிலிருந்து ஆரம்பித்து தன் அழுகையைத் தொடர்ந்தாள். சோலி முடிஞ்...

ஸ்கார்பியோ காதல் - 32

அத்தியாயம் 32   ஆறு மாதங்கள் கடந்திருந்தன. குளிரின் கடைசி நிழல்கள் விலகி நின்று கோடையை எதிர்பார்த்திருக்க, நகரம் மெதுவாக வியர்க்கத் தொடங்கியிருந்தது. அம்ருதா தன் பயிற்சி நாட்களின் கடைசி கட்டத்திற்குள் நுழைந்திருந்தாள். அன்று அஸ்வத்தை சிவன் கோவிலுக்கு அழைத்திருந்தாள் அம்ருதா. “அங்கேயே தான் வரணுமா?” அங்கேதானே சுயம் மறந்து அவள் கழுத்தை இறுக்கினான்? “எனக்கு அங்கேதான் ராசி!” “அம்மு…” “பழசை மறந்துட்டு வாங்க அஸ்வத்!” குழையும் குரல் அவனை அடிபணியச் செய்தது. எதுவும் மாறியிருக்கவில்லை!   ஸ்கார்பியோகாரன் அஸ்வத் மீதான அம்ருதாவின் அதே அடர்ந்த காதல்; தன்னை ஏன் இந்தப் பெண் ஈர்த்திழுக்கிறாள் என்று புரியாமலேயே அவள் காதலில் வளைந்து குழையும் அஸ்வத்; அவனுக்கு தன் தங்கையைத் தரவே மாட்டேனென கண்களில் தீக்கங்கைக் காட்டும் ஹரிஷ் என எதுவும் மாறியிருக்கவில்லை. சட்ட விரோத மருந்து ஆராய்ச்சி வழக்கில், அக்குழுவின் தலைவர் பத்ரிநாத் இன்னும் தனது தண்டனைக் காலத்தை அனுபவிக்கிறார். சத்யநாதன் மரித்ததும், அவரின் மகிழுந்தை இடித்துத் தள்ளிய ‘தார்’ சென்ற வழித்தடம் தெரியவில்லை என்றும், சத்யநாதனின் விரோதிகள் விசாரிக்கப்பட...

Popular Posts 💫

ஸ்கார்பியோ காதல் 🚗 💌

  கதையின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன🎉 கதை முன்னோட்டம்   ஹிக்கின் பாதம்ஸை அலசி விட்டு, ஐபாகோவில் ஐக்கியமாகி, பின்னர் ஊருக்கு செல்லப் பெட்டியைக் கட்டினார்கள். மகிழுந்தில் ஸ்வேதாவை முன்னே ஹரிஷின் அருகே ஏறிக்கொள்ள சொன்ன அம்ருவை மறுத்தவள் ஹரிஷைப் பார்த்தாள். ‘உங்கள் பாடு! எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.’ என்பதாக ஓர் சிரிப்புடன் அமைதியாக இருந்துக்கொண்டான் அவன். அம்ருவை பின்னால் தனியே விட்டுவிட்டு, தான் மட்டும் அவனருகே அமர்வது அதிகப்படியாக தெரிந்ததால், “நானும் பின்னாடி உன் கூடவே உட்காருறேன் அம்ரு.” என்று பின்னால் அமர்ந்துவிட்டு ஹரிஷைப் பார்க்க, அவள் பார்வைக்காகவே காத்திருந்தாற் போல் ஒற்றைக் கண் சிமிட்டி அவளைச் சிவக்க வைத்துவிட்டு மகிழுந்தை எடுத்தான். ஸ்வேதா ஓசூர் அருகே இருக்கும் கிருஷ்ணகிரியில் உள்ள அனுமன் தீர்த்தம் செல்ல வேண்டும் என்று விரும்பியதால், விரைவாகக் கோவில் சென்று அனுமனைத் தரிசித்தனர். அம்ரு ஏனோ சொல்ல தெரியாத உணர்வில் அந்த அஞ்சுதனைப் பார்த்திருந்தாள். “அம்ரு, கிளம்பலாம் டைமாச்சு!” என்ற ஹரிஷ் ஸ்வேதாவின் காதில் கிசுகிசுத்தான். “நான் அனுமன் பக்தனில்ல பேபி? இ...

சீதையின் பூக்காடு🌻🌺 - தொகுப்பு.

  கதையின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன🔗🔗  கதை முன்னோட்டம். பொறுமை இழந்தவன், "ஹலோ! கேன் யூ ப்ளீஸ் டெல் மீ, வாட்'ஸ் யுவர் ப்ராப்ளம்?" எனக் கேட்டான். "யாரோ ப்ளே பண்றா. நேக்கு கொஞ்சம் முன்னாடி கால் வந்தது. ஊருக்கு கிளம்பின எங்க பாட்டிக்கு பாதி வழியிலேயே திடீர்னு ஃபிட்ஸ் வந்துட்டதாகவும், இப்போதைக்கு பக்கத்துல இருக்க அவா ஆத்துல வச்சு ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணிருக்கறதாகவும், உடனே வந்தா ஹாஸ்பிடல் அழைச்சிண்டு போகலாம்னும் சொல்லி இந்த அட்ரஸ்க்கு வர சொன்னா." "ஓ!" "ஆனா, இப்ப அம்மா பேசறத பார்த்தா எல்லாரும் நல்லபடியா ஊருக்கு போய்ட்டா போலயே... அப்ப நேக்கு கால் பண்ணது யாரா இருக்கும்?" "எனக்கு கால் பண்ணவன் தான் உங்களுக்கும் பண்ணிருக்கணும். ஆமா... வீட்ல உள்ளவங்க ஊருக்கு கிளம்பி எவ்ளோ நேரம் ஆச்சு?" "மூணரை மணி நேரம் இருக்கும். ஏன் கேக்கறேள்?" "நீங்க இங்க வர்றதுக்கு மினிமம் ஆஃப் ஆன் ஆர்-னு வச்சிக்கிட்டா கூட… ரொம்ப தூரம் இல்லனா, கிளம்பி மூணு மணி நேரம் ஆனவங்க ஊருக்கே போய் சேர்ந்திருப்பாங்களே… இங்க பக்கத்துல எப்டி இவ்ளோ நேரம் இருப்பாங்...

சீதையின் பூக்காடு - 1

  அத்தியாயம் 1 வெள்ளிக்கிழமை! மாலை நான்கு மணி அளவில் மழை வரும் போல் வானம் கருமையைப் பூசிக் கொண்டிருந்தது. அந்த பதிப்பகத்தில் தனது புத்தகத்தை வெளியிடுவது பற்றி பேசிக்கொண்டிருந்தாள் ஆரவி. ஆரவி! இருபத்துமூன்று வயது. பிபிஎம் படித்தவள். படித்ததற்கேற்ப ஓர் சிறிய நிறுவனத்தில் வேலை செய்தவள். ஆம்! செய்தவள். மேற்கொண்டு படிக்க விரும்பாமலும், வேலை செய்த நிறுவனம் வேறு கைக்கு மாறியதாலும் தற்போது வேறு வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறாள். தனக்கு விருப்பமான எழுத்துலகில் அடியெடுத்து வைத்தவள் ஆறு நாவல்களும், இருபது சிறுகதைகளும் எழுதியுள்ளாள். அவள் எழுதி பத்திரிக்கைகளில் பிரசுரமானதில் ஒன்பது சிறுகதைகள் பரிசுகள் பெற்றவை! தரமான கதைகளை எழுதி அனுராதா ரமணன், சிவசங்கரி போன்ற எழுத்தாளர்களைப் போல் தானும் புகழ்பெற வேண்டும் என்பதே ஆரவியின் குறிக்கோள்! இந்த பதிப்பகமே இவள் எழுதிய நான்கு நாவல்களை வெளியிட்டுள்ளது. அதில் இரண்டு மறுபதிப்பிற்கு சென்றுள்ளன. தற்போதும் இவளெழுதிய 'சீதையின் பூக்காடு' என்ற புத்தகம் மறுபதிப்பிற்கு செல்லவிருக்கிறது. அதற்கு பதிப்பகத்தாரின் பாராட்டைப் பெற்றுக்கொண்டும், மற்றுமொரு கதைய...