Skip to main content

Posts

Showing posts from January, 2026
Welcome to ShriVijay Writings🎉 - a world of suspense, love, romance, family bonds, thrilling crime, friendship, mystery, emotions, adventure, revenge and twists & turns. Dive in and enjoy every twist! 📖✨

ஸ்கார்பியோ காதல் - 36 (Finale)

இறுதி அத்தியாயம் அம்ருதா தன் பயிற்சி காலத்தை நிறைவு செய்துவிட்டு ஒரு தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து கொண்டிருந்தாள். அதே மருத்துவமனையில், “ஹாஸ்பிடல் வந்துட்டேன் ஹரிஷ்! எந்தப் பக்கம்?” “அஸ்வத்!” திரும்பியவன் தன்னை நோக்கி கையசைத்துக்கொண்டு வரும் ஹரிஷைக் கண்டுவிட்டு, அலைபேசியை அணைத்தபடி அவனோடு நடந்தான். ஹரிஷ் நிறைய பயந்திருந்தான். அவன் முகமே பதற்றத்தில் குளித்திருந்தது.  அஸ்வத் ஆறுதலாக அவன் தோள் தட்டினான். “நீங்களே ஒரு டாக்டர். உங்க தங்கச்சியை எமோஷனல் ஆகக்கூடாது சொல்லுவீங்க! இப்போ நீங்களே பயந்தா எப்டி?” “பொண்டாட்டி விஷயத்துல எல்லாரும் ஸீரோ’ங்க! நிஜமா என்னால இந்த ஸ்ட்ரெஸ்’அ தாங்க முடியல அஸ்வத். ஆல்மோஸ்ட் நாலு மணி நேரம் ஆகிடுச்சு. நான் ஒரு பேஷண்ட் கிட்ட பேசி அனுப்பிட்டு இப்போதான் வந்தேன். இல்லைன்னா நானும் உள்ளே போயிருப்பேன்.” “நல்லவேளை போகல! அங்கே போய் அவங்க வலியைப் பார்த்துட்டு அழுதுருப்பீங்க.”  பேசியபடி அவ்வறை பக்கம் வந்திருந்தனர். அங்கே நடராஜன், அம்பிகா, ஸ்வேதாவின் அம்மா என அனைவரும் இருந்தனர். அதே மருத்துவமனையில் பணிபுரியும் அம்ருதாவிற்கு அன்று ஓர் அறுவைச் சிகிச்சை பணி இருந்...

ஸ்கார்பியோ காதல் - 35 (Pre-final)

அத்தியாயம் 35 ஞாயிற்றுக்கிழமை! பெண் வீட்டுக்காரர்கள் வருகிறார்கள் என்று எந்த ஆர்பாட்டமும் இல்லாமல், அவன் மகளின் அடையாளங்கள் உட்பட வழமை போலவே இருந்தது அஸ்வத்தின் வீடு! விடயத்தைச் சொல்லி அன்றாட பணி முடிந்த பின்னும் சாந்தியை இருக்கச் சொல்லியிருந்தான்.  அஸ்வத் திருமணம் செய்துகொள்ள போவதில் சாந்திக்கு அப்படியோர் நிறைவு! தன் மகனே வாழ்க்கையின் அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்ததைப் போல் அகமகிழ்ந்து போனார். அஸ்வத் வந்தவர்களைக் கரம் கூப்பி அழைத்து அமர வைத்தான். ஒட்டுமொத்த பூக்களின் மலர்ச்சியையும் ஏந்தியிருந்தது, வெளியே நின்ற ஸ்கார்பியோவை வருடியபடி வந்த அம்ருவின் முகம்! அவளைப் பார்த்தவுடன் இவனுள்ளமும் ஓர் பூங்கொத்தைப் போல் மலர்ந்தது. சாந்தி ஹரிஷைக் கண்டு தெரிந்தவன் எனும் முறையில் ஆர்பாட்டமாகப் பேசிட, அவனைக் கேள்வியாய் ஏறிட்டார் நடராஜன். “விசாரிக்கும்போது அஸ்வத் ஃப்ரெண்ட்ன்னு சொல்லி இங்கே வந்தேன்னு சொன்னேன்லப்பா?” என்று அவருக்கு மட்டும் கேட்கும்படியாகச் சொல்ல, தலையசைத்துக் கொண்டார் அவர். அஸ்வத்திற்கு இருபத்தைந்து வயதிலேயே முதல் திருமணம் முடிந்தது என்றும், தற்போது அவனுக்கு இருபத்தொன்பது வயது என்றும்...

ஸ்கார்பியோ காதல் - 34.2

அத்தியாயம் 34.2 இரண்டு நாட்கள் சென்ற பிறகு, நிறுவனத்தில் வாடிக்கையாளர்களிடம் மும்முரமாகப் பேசிக்கொண்டிருந்த அஸ்வத்தை அலைபேசி அழைத்திட, திரையைப் பார்த்தவன் ஹரிஷின் அழைப்பைக் கண்டு, ‘Meeting! Call u later.’ என்ற குறுஞ்செய்தியொன்றைத் தட்டிவிட்டான். சிறிது நேரத்தில் அந்தச் சந்திப்பு முடிந்ததும், அஸ்வத்தின் மேலதிகாரி அழைத்தார். “அஸ்வத், இன்னிக்கு டெலிவரி போக வேண்டிய ஒரு மாரஃஸ்ஸோவுக்கு ரிஜிஸ்ட்ரேஷன் சைட்ல டாக்யூமென்ட்ஸ் மிஸ்மேட்ச் ஆகுது. க்ளையண்ட் ஆல்ரெடி ஏஜிடேட்டட்! கவனிச்சியா நீ?”   “ஐ’ம் ஆன் இட், சர்! இன்டர்னெல் டீம் கிட்ட பேசிட்டேன். ஆர்டிஓலயும் பேசிருக்கேன். க்ளாரிஃபை பண்ண கொஞ்சம் டைமெடுக்கும் போலருக்குது. பட் இட்’ஸ் அண்டர் கன்ட்ரோல் சர்!” “உன்னைத்தான்பா மலை போல நம்பியிருக்கேன். அந்தாளு ஏதாவது சொல்லிட்டான்னா, தேவையில்லாம நம்ம பேரு ஹெட் ஆஃபீஸ்ல அடிபடும்.” “அவ்ளோ தூரம் போகாது சர். க்ளையண்ட் கிட்ட நான் நேரா பேசுறேன். ட்ரான்ஸ்பரண்டா ஹேண்டில் பண்ணலாம்.” பேசி வைத்தப் பின்னர் இண்டர்காம் அழைத்தது. “சர் உங்களைப் பார்க்க தேவான்னு ஒருத்தர் வந்திருக்கார்.” சட்டென சிசிடிவி திரையைப் பார்த்தவ...

ஸ்கார்பியோ காதல் - 34.1

  அத்தியாயம் 34.1 சாஷ்டாங்கமாக தன் மனைவியின் காலில் விழுந்திருந்தான் ஹரிஷ். ‘அய்யய்யோ… என்னங்க நீங்க போய் என் கால்ல விழுந்துக்கிட்டு…’ என்றெல்லாம் ஸ்வேதா கிரிஞ்ச் நாடகம் போடவில்லை. மாறாக டிபிகல் மனைவியாக அவன் சிண்டைப் பிடித்தாள். “மனசுல இருக்கறதுதானே கோவத்துல வெளியே வரும்? இத்தனை நாளும் என்னைப் பத்தி இப்டியொரு மோசமான தாட்’அ மனசுல வச்சுக்கிட்டு தான் என் கூட பேசி, சிரிச்சு இருந்திருக்கீங்க. ஒரு சைக்யார்டிஸ்டா அதையும் எனக்குத் தெரியாம பார்த்துக்கிட்டு எவ்ளோ அழகா நடிச்சிருக்கீங்க?” “பேபி, இப்டிலாம் பேசாதேயேன்… சத்தியமா நான் உன்னை அப்டி நினைக்கலடீ.” “பொய்! இல்லன்னா எப்டி அப்டியொரு வார்த்தை வரும்? நான் உங்க தங்கச்சியைத் தாட்டிவிட நினைக்கறேன்னு…” என்றவளுக்கு அழுகை வந்துவிட, “ப்ச் அழாதே பேபி!” என்று அணைக்க வந்தவனின் கையைத் தட்டிவிட்டாள். “தெரியாம சொல்லிட்டேன்டி… நிஜமா மனசுல இருந்து சொல்லல! அவன் மேல இருக்க கோவத்துல தான்…” “கோவத்துல தான் மனசுல இருக்கறது வெளியே வரும். இவ யாரு நம்ம தங்கச்சி விஷயத்துல தலையிடன்ற நினைப்புதானே?” என்று முதலிலிருந்து ஆரம்பித்து தன் அழுகையைத் தொடர்ந்தாள். சோலி முடிஞ்...

Popular Posts 💫

ஸ்கார்பியோ காதல் 🚗 💌

  கதையின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன🎉 கதை முன்னோட்டம்   ஹிக்கின் பாதம்ஸை அலசி விட்டு, ஐபாகோவில் ஐக்கியமாகி, பின்னர் ஊருக்கு செல்லப் பெட்டியைக் கட்டினார்கள். மகிழுந்தில் ஸ்வேதாவை முன்னே ஹரிஷின் அருகே ஏறிக்கொள்ள சொன்ன அம்ருவை மறுத்தவள் ஹரிஷைப் பார்த்தாள். ‘உங்கள் பாடு! எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.’ என்பதாக ஓர் சிரிப்புடன் அமைதியாக இருந்துக்கொண்டான் அவன். அம்ருவை பின்னால் தனியே விட்டுவிட்டு, தான் மட்டும் அவனருகே அமர்வது அதிகப்படியாக தெரிந்ததால், “நானும் பின்னாடி உன் கூடவே உட்காருறேன் அம்ரு.” என்று பின்னால் அமர்ந்துவிட்டு ஹரிஷைப் பார்க்க, அவள் பார்வைக்காகவே காத்திருந்தாற் போல் ஒற்றைக் கண் சிமிட்டி அவளைச் சிவக்க வைத்துவிட்டு மகிழுந்தை எடுத்தான். ஸ்வேதா ஓசூர் அருகே இருக்கும் கிருஷ்ணகிரியில் உள்ள அனுமன் தீர்த்தம் செல்ல வேண்டும் என்று விரும்பியதால், விரைவாகக் கோவில் சென்று அனுமனைத் தரிசித்தனர். அம்ரு ஏனோ சொல்ல தெரியாத உணர்வில் அந்த அஞ்சுதனைப் பார்த்திருந்தாள். “அம்ரு, கிளம்பலாம் டைமாச்சு!” என்ற ஹரிஷ் ஸ்வேதாவின் காதில் கிசுகிசுத்தான். “நான் அனுமன் பக்தனில்ல பேபி? இ...

சீதையின் பூக்காடு🌻🌺 - தொகுப்பு.

  கதையின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன🔗🔗  கதை முன்னோட்டம். பொறுமை இழந்தவன், "ஹலோ! கேன் யூ ப்ளீஸ் டெல் மீ, வாட்'ஸ் யுவர் ப்ராப்ளம்?" எனக் கேட்டான். "யாரோ ப்ளே பண்றா. நேக்கு கொஞ்சம் முன்னாடி கால் வந்தது. ஊருக்கு கிளம்பின எங்க பாட்டிக்கு பாதி வழியிலேயே திடீர்னு ஃபிட்ஸ் வந்துட்டதாகவும், இப்போதைக்கு பக்கத்துல இருக்க அவா ஆத்துல வச்சு ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணிருக்கறதாகவும், உடனே வந்தா ஹாஸ்பிடல் அழைச்சிண்டு போகலாம்னும் சொல்லி இந்த அட்ரஸ்க்கு வர சொன்னா." "ஓ!" "ஆனா, இப்ப அம்மா பேசறத பார்த்தா எல்லாரும் நல்லபடியா ஊருக்கு போய்ட்டா போலயே... அப்ப நேக்கு கால் பண்ணது யாரா இருக்கும்?" "எனக்கு கால் பண்ணவன் தான் உங்களுக்கும் பண்ணிருக்கணும். ஆமா... வீட்ல உள்ளவங்க ஊருக்கு கிளம்பி எவ்ளோ நேரம் ஆச்சு?" "மூணரை மணி நேரம் இருக்கும். ஏன் கேக்கறேள்?" "நீங்க இங்க வர்றதுக்கு மினிமம் ஆஃப் ஆன் ஆர்-னு வச்சிக்கிட்டா கூட… ரொம்ப தூரம் இல்லனா, கிளம்பி மூணு மணி நேரம் ஆனவங்க ஊருக்கே போய் சேர்ந்திருப்பாங்களே… இங்க பக்கத்துல எப்டி இவ்ளோ நேரம் இருப்பாங்...

சீதையின் பூக்காடு - 1

  அத்தியாயம் 1 வெள்ளிக்கிழமை! மாலை நான்கு மணி அளவில் மழை வரும் போல் வானம் கருமையைப் பூசிக் கொண்டிருந்தது. அந்த பதிப்பகத்தில் தனது புத்தகத்தை வெளியிடுவது பற்றி பேசிக்கொண்டிருந்தாள் ஆரவி. ஆரவி! இருபத்துமூன்று வயது. பிபிஎம் படித்தவள். படித்ததற்கேற்ப ஓர் சிறிய நிறுவனத்தில் வேலை செய்தவள். ஆம்! செய்தவள். மேற்கொண்டு படிக்க விரும்பாமலும், வேலை செய்த நிறுவனம் வேறு கைக்கு மாறியதாலும் தற்போது வேறு வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறாள். தனக்கு விருப்பமான எழுத்துலகில் அடியெடுத்து வைத்தவள் ஆறு நாவல்களும், இருபது சிறுகதைகளும் எழுதியுள்ளாள். அவள் எழுதி பத்திரிக்கைகளில் பிரசுரமானதில் ஒன்பது சிறுகதைகள் பரிசுகள் பெற்றவை! தரமான கதைகளை எழுதி அனுராதா ரமணன், சிவசங்கரி போன்ற எழுத்தாளர்களைப் போல் தானும் புகழ்பெற வேண்டும் என்பதே ஆரவியின் குறிக்கோள்! இந்த பதிப்பகமே இவள் எழுதிய நான்கு நாவல்களை வெளியிட்டுள்ளது. அதில் இரண்டு மறுபதிப்பிற்கு சென்றுள்ளன. தற்போதும் இவளெழுதிய 'சீதையின் பூக்காடு' என்ற புத்தகம் மறுபதிப்பிற்கு செல்லவிருக்கிறது. அதற்கு பதிப்பகத்தாரின் பாராட்டைப் பெற்றுக்கொண்டும், மற்றுமொரு கதைய...