Skip to main content

Posts

Showing posts from February, 2026
Welcome to ShriVijay Writings🎉 - a world of suspense, love, romance, family bonds, thrilling crime, friendship, mystery, emotions, adventure, revenge and twists & turns. Dive in and enjoy every twist! 📖✨

இரவோடு இவர்கள் - 7 (Finale)

  இறுதி அத்தியாயம் இதயம் முறையற்று துடிப்பதை 'அரித்மியா' என்பார்கள். அதாவது இதயத்துடிப்பு பெரியவர்களில் நிமிடத்திற்கு 100 துடிப்புகளுக்கு மேல் இருந்தால் 'டாக்ரிக்கார்டியா' (tachycardia) எனவும், நிமிடத்திற்கு 60 துடிப்புகளுக்குக் குறைவாக இருந்தால் 'பிராடிகார்டியா' (bradycardia) எனவும் அழைக்கப்படுகிறது. இங்கு தன் முன்னால் இருந்த அத்தனை உயிர்களும், பிரம்மாண்ட கட்டிடமும் வெடித்து சிதறியதைக் கண்டிருந்த ஸ்ரீநிதிக்கு ஏற்பட்டிருந்தது டாக்ரிக்கார்டியா! அரித்மியாவின் மூலம் நிகழும் நிகழ்வுகள் தீவிரமானவை அல்ல என்றாலும், ஒரு சில நபரை பக்கவாதம் அல்லது இதய செயலிழப்பு போன்ற சிக்கல்களுக்கு ஆளாக்குகின்றன. சில திடீர் மரணங்களும் நிகழ்கின்றன. ஸ்ரீநிதிக்கு அரித்மியாவின் மூலம் ஏற்பட்டிருப்பது இதய செயலிழப்பிற்கான அறிகுறி மட்டுமே! அதாவது மூச்சிரைப்பு! நம் உடலில் மோட்டார் பம்ப் போல செயல்படும் இதயம், ஒவ்வொரு துடிப்பின் போதும் இரத்தத்தை நிரப்புவது மற்றும் வெளியேற்றும் செயலை செய்கிறது. ஏதேனும் காரணத்தால் இந்நிகழ்வு சீர்குலையும்போது இதய செயலிழப்பு ஏற்படுகிறது.  மற்றும்படி பயமோ, பதற்றமோ அல்ல...

இரவோடு இவர்கள் - 6

  அத்தியாயம் 6 நேரம் காலை ஏழு மணி! அந்த பூட்டியிருந்த மருத்துவமனையின் முன்னால் குறுக்கும் நெடுக்குமாக நடந்து, தன் நீளக் கால்களால் நிலத்தை அளந்து கொண்டிருந்தான், ஒரு இளைஞன்.  குண்டுவெடிப்பு நிகழ்வில் பாதிப்புக்குள்ளானோரின் வரவு எண்ணிக்கை அதிகரிக்கவும் அந்த பொது மருத்துவமனை சற்று அதிகமாகவே திணறிப் போனது. மருந்துகள், உபகரணங்கள் மற்றும் இன்னபிற பொருட்களின் பற்றாக்குறைக் காரணமாக  நோயாளிகளின் உறவுகள் சிலருக்கிடையில் கைகலப்பு ஏற்பட்டது. யாரும் யாரையும் சமாதானப்படுத்தும் நிலையில் இல்லையே? ஆக நோயாளிகளைத் தவிர மற்ற அனைவரையும் வெளியேற்றி, அந்த பெரிய கிரில் கேட்டை (grill gate) இழுத்துப் பூட்ட சொல்லிவிட்டனர் நிர்வாகத்தினர். ஆதலால் தான் அவன் மருத்துவமனை வாசலில் நடந்து கொண்டிருக்கிறானோ? ஆனால் மற்ற ஆட்கள் உள்ளே தங்கள் உறவுகளை நினைத்துப் பரிதவித்து நிற்கையில், இவன் மட்டும் நொடிக்கொருதரம் வெளியே தவிப்போடு யாரையோ எதிர்பார்த்து, பார்வையைச் சுழற்றி நீண்ட சுவாசத்தை வெளியேற்றிவிட்டு மீண்டும் நடையைத் தொடர்ந்தான். இவனோடு இன்னும் மூவரும் இருந்தனர். மூவரில் இருவர் பெண்மணிகள்; ஒருவர் ஆண்! ஒரு பெண்ணு...

இரவோடு இவர்கள் - 5

  அத்தியாயம் 5  பெரும் வெடிப்பைக் கண்ட அந்த மனிதர்கள் கூட்டம் ஒரு நிமிடம் சுவாசிப்பையும் மறந்து, அசையாது நின்று போனது. 'சி' ப்ளாக்கோடு அருகேயிருந்த மற்றொரு ப்ளாக்கும் லேசாக ஆட்டம் கண்டது. குபுகுபுவென வான் புகுந்த புகைமூட்டத்தை ஏதும் செய்ய இயலாமல் பார்த்திருந்தனர். சிலர் ஓவென தலையிலடித்துக் கொண்டு கதறினர். இன்னும் பலவீனமான மனதுடையவர்கள் மயங்கி சரிந்தனர். குழந்தைகள் அதிர்ச்சியில் பேச்சை மறந்து அழுகையின் கரத்தைப் பற்றிக் கொண்டனர். ஒரு உயிரையும் பலியிடக் கூடாது என்ற உறுதியோடிருந்த ஷக்திதரன், இப்போது பாம் ஸ்க்வாடில் இருவரை பலி கொடுத்துவிட்டோமென கண்களில் தோல்வியையும் வேதனையையும் காட்டினார். அதுவும் ஒரு கணம்தான்! மறுகணம் அனைத்தையும் ஒரு பெருமூச்சில் விழுங்கிக்கொண்டு, ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த தீயணைப்பு துறைக்கு வேலையை ஆரம்பிக்கும்படி உத்தரவிட்டார்.  அரைமணி நேரத்திற்கு பின் புழுதிப்படலம் சிறிது குறைந்தது. நீண்ட நேர தேடலுக்குப் பிறகு இறந்த இருவரின் உடல்கள்… இல்லை செங்கல் குவியல்களுக்கு நடுவே கிடைத்த சிற்சில உடல்பாகங்கள் மீட்கப்பட்டன.  ரஃபீக்கிற்கும் சசிக்கும் முகமே வெளிறிப்...

இரவோடு இவர்கள் A Ceylon trip ✈️-4

  அத்தியாயம் 4 ரஃபீக் மற்றும் சசி அந்த தெருவின் உள்ளிருந்து வந்தவரிடம் நிஜந்தனைப் பற்றி விசாரிக்க, அவர், "நிஜந்தன் வீட்டை அவன் உட்பட இருவர் பலி எண்டு கேள்வி!" என்று இருவரையும் மாறி மாறிப் பார்த்து வியப்பு மாறாமலேயே சொல்லிவிட்டு, இருவரின் பாவனைகளையும் உள்வாங்கிக் கொண்டு உண்மையிலேயே அவன் நண்பர்கள்தான் போலும் என்று உறுதிபடுத்திக் கொண்டவர் மேலும் சொன்னார்.  "இண்டைக்கு விடிய வெள்ளன (அதிகாலையில்) வெளிக்கிட்டவன் எதற்காக சர்ச்சில் போனானெண்டு தெரியேல்ல. ஈஸ்டருக்கு ஃப்ரண்ட்ஸைப் பார்க்க போயிருப்பானெண்டு கதைத்துக் கொண்டிருந்தார்கள். அங்கேதான் இப்படியாகி போனதே? அநேகமாக அவனுடலைக் கூட நீங்கள் சொன்ன ஹொஸ்பிடலில் தான் வைத்திருக்க வேணும்." என்று பேசிக் கொண்டே போனவர், "அந்த ஃப்ரண்ட்ஸ் நீங்கள்தானா?" எனக் கேட்க, 'இல்லை, ஸ்ரீநிதி!' என்று மனதினுள் சொன்னவர்கள் வெளியே 'ஆம்' என்று தலையசைத்து வைத்தனர்.  'மருத்துவமனையில் நிஜந்தனுக்கு வேண்டியவர் யார் இருக்கிறார்?' என்று கேட்க வந்தவர், பின் தனக்கு நேரமாவதை உணர்ந்து, "நான் வெளிக்கிட வேணும். என் சின்னப் பிள்ளை...

இரவோடு இவர்கள் ✈️ - 3

  அத்தியாயம் 3 கண்ணீர் குரல்களுக்கு மத்தியில், துடுப்பாட்டம் போடும் இதயத்துடன் கண்மூடியிருந்த ஸ்ரீநிதியின் எண்ணங்கள் பின்னோக்கி 2017-ஆம் ஆண்டிற்கு சென்றது. இதயம் பலவீனமாக இருந்தாலும், பலத்துடன் இருந்த மூளை அவளின் நினைவு முடிச்சுகளை சரசரவென அவிழ்த்துவிட்டது.  அன்று தங்கள் வீட்டினருகே இருந்த கந்தன் கோவிலில் நிஜந்தனை சந்தித்த போது பேசிய பேச்சுகளை நினைத்துப் பார்த்தாள். அப்போது இவள் உயர்தரம் முடித்திருந்தமையாலும் இவள் அன்னை அவன் அன்னையிடம், பெண்ணை யாழ்ப்பாணத்தில் படிக்க வைக்கப் போவதால் சொந்த வீட்டினை வாடகைக்கு விட்டுவிட்டு, அனைவரும் யாழ்ப்பாணம் போக போவதாகவும் சொல்லியிருக்கிறார்கள்.  காதலி வேற்றூர் போய்விட்டால் அவளை தான் இனி தரிசிப்பதெப்படி? அதனைப் பற்றி ஸ்ரீநிதியிடம் பேசவே, அன்று வேலை முடிந்ததும் கந்தன் கோவிலுக்கு வந்திருந்தான் நிஜந்தன். "சரி சொல்லும். அடுத்து என்ன படிக்கப் போகிறீர்? எங்கே படிக்கப் போகிறீர்?" "யாழ் பல்கலையில் சீட் கிடைத்திருக்கிறது நிஜந்தன். அங்கே ஹொஸ்டலில் தங்கி படிக்கப் போகிறேன்."  "உம்மட அம்மா எல்லோருமாக யாழ் போகப் போவதாக சொன்னார்களே?" ...

Popular Posts 💫

ஸ்கார்பியோ காதல் 🚗 💌

  கதையின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன🎉 கதை முன்னோட்டம்   ஹிக்கின் பாதம்ஸை அலசி விட்டு, ஐபாகோவில் ஐக்கியமாகி, பின்னர் ஊருக்கு செல்லப் பெட்டியைக் கட்டினார்கள். மகிழுந்தில் ஸ்வேதாவை முன்னே ஹரிஷின் அருகே ஏறிக்கொள்ள சொன்ன அம்ருவை மறுத்தவள் ஹரிஷைப் பார்த்தாள். ‘உங்கள் பாடு! எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.’ என்பதாக ஓர் சிரிப்புடன் அமைதியாக இருந்துக்கொண்டான் அவன். அம்ருவை பின்னால் தனியே விட்டுவிட்டு, தான் மட்டும் அவனருகே அமர்வது அதிகப்படியாக தெரிந்ததால், “நானும் பின்னாடி உன் கூடவே உட்காருறேன் அம்ரு.” என்று பின்னால் அமர்ந்துவிட்டு ஹரிஷைப் பார்க்க, அவள் பார்வைக்காகவே காத்திருந்தாற் போல் ஒற்றைக் கண் சிமிட்டி அவளைச் சிவக்க வைத்துவிட்டு மகிழுந்தை எடுத்தான். ஸ்வேதா ஓசூர் அருகே இருக்கும் கிருஷ்ணகிரியில் உள்ள அனுமன் தீர்த்தம் செல்ல வேண்டும் என்று விரும்பியதால், விரைவாகக் கோவில் சென்று அனுமனைத் தரிசித்தனர். அம்ரு ஏனோ சொல்ல தெரியாத உணர்வில் அந்த அஞ்சுதனைப் பார்த்திருந்தாள். “அம்ரு, கிளம்பலாம் டைமாச்சு!” என்ற ஹரிஷ் ஸ்வேதாவின் காதில் கிசுகிசுத்தான். “நான் அனுமன் பக்தனில்ல பேபி? இ...

சீதையின் பூக்காடு🌻🌺 - தொகுப்பு.

  கதையின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன🔗🔗  கதை முன்னோட்டம். பொறுமை இழந்தவன், "ஹலோ! கேன் யூ ப்ளீஸ் டெல் மீ, வாட்'ஸ் யுவர் ப்ராப்ளம்?" எனக் கேட்டான். "யாரோ ப்ளே பண்றா. நேக்கு கொஞ்சம் முன்னாடி கால் வந்தது. ஊருக்கு கிளம்பின எங்க பாட்டிக்கு பாதி வழியிலேயே திடீர்னு ஃபிட்ஸ் வந்துட்டதாகவும், இப்போதைக்கு பக்கத்துல இருக்க அவா ஆத்துல வச்சு ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணிருக்கறதாகவும், உடனே வந்தா ஹாஸ்பிடல் அழைச்சிண்டு போகலாம்னும் சொல்லி இந்த அட்ரஸ்க்கு வர சொன்னா." "ஓ!" "ஆனா, இப்ப அம்மா பேசறத பார்த்தா எல்லாரும் நல்லபடியா ஊருக்கு போய்ட்டா போலயே... அப்ப நேக்கு கால் பண்ணது யாரா இருக்கும்?" "எனக்கு கால் பண்ணவன் தான் உங்களுக்கும் பண்ணிருக்கணும். ஆமா... வீட்ல உள்ளவங்க ஊருக்கு கிளம்பி எவ்ளோ நேரம் ஆச்சு?" "மூணரை மணி நேரம் இருக்கும். ஏன் கேக்கறேள்?" "நீங்க இங்க வர்றதுக்கு மினிமம் ஆஃப் ஆன் ஆர்-னு வச்சிக்கிட்டா கூட… ரொம்ப தூரம் இல்லனா, கிளம்பி மூணு மணி நேரம் ஆனவங்க ஊருக்கே போய் சேர்ந்திருப்பாங்களே… இங்க பக்கத்துல எப்டி இவ்ளோ நேரம் இருப்பாங்...

சீதையின் பூக்காடு - 1

  அத்தியாயம் 1 வெள்ளிக்கிழமை! மாலை நான்கு மணி அளவில் மழை வரும் போல் வானம் கருமையைப் பூசிக் கொண்டிருந்தது. அந்த பதிப்பகத்தில் தனது புத்தகத்தை வெளியிடுவது பற்றி பேசிக்கொண்டிருந்தாள் ஆரவி. ஆரவி! இருபத்துமூன்று வயது. பிபிஎம் படித்தவள். படித்ததற்கேற்ப ஓர் சிறிய நிறுவனத்தில் வேலை செய்தவள். ஆம்! செய்தவள். மேற்கொண்டு படிக்க விரும்பாமலும், வேலை செய்த நிறுவனம் வேறு கைக்கு மாறியதாலும் தற்போது வேறு வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறாள். தனக்கு விருப்பமான எழுத்துலகில் அடியெடுத்து வைத்தவள் ஆறு நாவல்களும், இருபது சிறுகதைகளும் எழுதியுள்ளாள். அவள் எழுதி பத்திரிக்கைகளில் பிரசுரமானதில் ஒன்பது சிறுகதைகள் பரிசுகள் பெற்றவை! தரமான கதைகளை எழுதி அனுராதா ரமணன், சிவசங்கரி போன்ற எழுத்தாளர்களைப் போல் தானும் புகழ்பெற வேண்டும் என்பதே ஆரவியின் குறிக்கோள்! இந்த பதிப்பகமே இவள் எழுதிய நான்கு நாவல்களை வெளியிட்டுள்ளது. அதில் இரண்டு மறுபதிப்பிற்கு சென்றுள்ளன. தற்போதும் இவளெழுதிய 'சீதையின் பூக்காடு' என்ற புத்தகம் மறுபதிப்பிற்கு செல்லவிருக்கிறது. அதற்கு பதிப்பகத்தாரின் பாராட்டைப் பெற்றுக்கொண்டும், மற்றுமொரு கதைய...